Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

இயேசுவின் வழியினிலே

 

✠ அருளாளர் ரேமொன் லல் ✠(Blessed Ramon Llull)
   
நினைவுத் திருநாள் : (ஜூன் / Juin 30)
✠ அருளாளர் ரேமொன் லல் ✠(Blessed Ramon Llull)

 
எழுத்தாளர், கவிஞர், இறையியலாளர், மறைபொருள், கணித அறிஞர், தர்க்கவியலார், மறைசாட்சி :
(Writer, Poet, Theologian, Mystic, Mathematician, Logician, Martyr)

பிறப்பு : கி.பி. 1232
பலோர்மா (தற்போது பல்மா), மஜோர்கா அரசு
(City of Mallorca (now Palma), Kingdom of Majorca, now Spain)

இறப்பு : கி.பி. 1315-1316
மெடிடெர்ரனியன் கடல் (மஜோர்கா தீவுக்கு கப்பலில் பயணிக்கையில்)
(Mediterranean Sea (aboard a ship bound for Majorca)

ஏற்கும் சமயம் :
ரோமன் கத்தோலிக்க திருச்சபை
(Roman Catholic Church)

முக்திபேறு பட்டம் : 1847
திருத்தந்தை ஒன்பதாம் பயஸ்
(Pope Pius IX)

நினைவுத் திருநாள் : ஜூன் 30

அருளாளர் ரேமொன் லல் தத்துவயியலாளரும், தர்க்கவியலாளரும், பிரான்சிஸ்கன் மூன்றாம் நிலை துறவியும், "மேஜர்காகன்" (Majorcan writer) எழுத்தாளருமாவார். "கேடலான்" (Catalan) இலக்கியத்தின் முக்கிய பணிகளையாற்றிய பெருமையும் இவரையே சாரும். கணிப்பு கோட்பாட்டின் முன்னோடியாகவும் இவர் கருதப்படுகிறார், குறிப்பாக "லீப்னிஸில்" (Leibniz) அவரது செல்வாக்கை வழங்கினார். மூன்றாம் நிலை ஃபிரான்சிஸ்கன் சபையினர் (Third Order of St. Francis) இவரை மறைசாட்சியாக கௌரவிக்கின்றனர்.

ஆரம்ப வாழ்க்கை :
ரேமொன் ல்லல் அப்போது புதிதாக ஆரம்பித்திருந்த "மஜார்கா" அரசின் (Kingdom of Majorca) தலைநகரான "பல்மாவில்" (Palma) பணக்கார குடும்பத்தில் பிறந்தவர் ஆவார். தற்போதைய ஸ்பெயின் நாட்டின் வடகிழக்கு பிராந்தியமான அன்றைய "அராகன்" (Aragon ) நாட்டின் அரசனான "முதலாம் ஜேம்ஸால்" (James I of Aragon) சமீபத்தில் ஆக்கிரமித்து வெற்றிகொண்ட "பலேரிக்" தீவுகளின் (Balearic Islands) பிராந்தியமான மஜார்காவை தமது "அராகன்" அரசின் ஆட்சியின்கீழ் (Crown of Aragon) கொண்டுவந்தான். ரெமொனின் பெற்றோர் "கேடலோனியா" (Catalonia) பிரதேசத்திலிருந்து வந்தவர்கள் ஆவர்.

இவர், 1257ம் ஆண்டு "ப்ளாங்கா பிகானி" (Blanca Picany) என்ற பெண்ணை மொழி செய்தார். இவர்களுக்கு "டொமேநீ மற்றும் மகதலினா" (Domnec and Magdalena) ஆகிய இரண்டு குழந்தைகளும் பிறந்தனர். அவர் ஒரு குடும்பத்தை உருவாக்கினார் என்றாலும் தாம் வாழ்ந்த வாழ்க்கை துன்பகரமான மற்றும் வீணான ஒரு நாடோடிக் கவிஞரின் வாழ்க்கை என்று பின்னாளில் அவரே வர்ணித்தார்.

ரேமொன் "அராகன்" அரசனான "இரண்டாம் ஜேம்ஸின்" (James II of Aragon) பிரத்தியேக ஆசானாக பணியாற்றினார். பின்னர், அரச குடும்பத்தின் நிர்வாகத் தலைவராகவும் ஆனார்.

மாற்றம் :
1263ம் ஆண்டு, இவருக்கு "கிறிஸ்துவின் வெளிப்பாடுகள்" (Epiphany) தொடர் திருக்காட்சியாக காணக் கிடைத்தன. அவர் கண்ட தொடர் திருக்காட்சிகள், கடவுளின் சேவையில் ஒரு வாழ்க்கையைத் தொடர அவரது குடும்பம், நிலை மற்றும் உடமைகளை விட்டு விலகிச் செல்வதற்கு வழிவகுத்தது. குறிப்பாக, அவர் மூன்று நோக்கங்களை உணர்ந்தார்:
1. முஸ்லிம்களை கிறிஸ்தவர்களாக மனம் மாற்றும் இறைவனின் சேவையில் தாம் மரிக்க வேண்டும்.
2. வெளிநாட்டு மொழிகளுக்கு கற்பிக்கும் மத நிறுவனங்களை தோற்றுவிக்க வேண்டும்.
3. மன மாற்றம் செய்யப்படவேண்டிய ஒருவரின் ஆட்சேபனைகளை எவ்வாரெல்லாம் சமாளிக்கலாம் என்பனவற்றை ஒரு புத்தகமாக எழுதவேண்டும்.

தனிமை மற்றும் ஆரம்பப் பணியின் ஒன்பதாண்டுகள் :

இறைவனின் திருவெளிப்பாடுகளைத் தொடர்ந்து, புனிதர் அசிசியின் ஃபிரான்ஸிசின் (Saint Francis of Assisi) அகத்தூண்டுதலால், இவர் மூன்றாம் நிலை ஃபிரான்சிஸ்கன் சபையின் உறுப்பினர் (Member of the Third Order of Saint Francis) ஆனார். சிறியதோர் திருயாத்திரை சென்று மஜார்கா திரும்பிய அவர், ஒரு முஸ்லிம் அடிமையை வாங்கினார். அவர் மூலம் அரபு மொழியை கற்க தொடங்கினார். அடுத்த ஒன்பது ஆண்டுகள், 1274ம் ஆண்டு வரை, அவர் படிப்பதிலும், தனிமை சம்பந்தமான ஆழ்ந்த சிந்தனையிலும் கழித்தார். கிரிஸ்தவ மற்றும் இஸ்லாமிய இறையியல் மற்றும் தத்துவ சிந்தனைகளை பரவலாக லத்தீன் மற்றும் அரபி மொழிகளில் படித்தார். முஸ்லிம்களை கிறிஸ்தவர்களாக மனம் மாற்றுவதற்காக அரபு மற்றும் இன்னபிற ஐரோப்பிய மொழிகளையும் கற்றார். அத்துடன் பிறரையும் கற்க வலியுறுத்தினார்.

திருத்தந்தையரையும் அரசர்களையும் இளவரசர்களையும் சந்திக்கவும், எதிர்கால மறைப் பணியாளர்களுக்கான விசேஷ கல்லூரிகளை நிறுவுவதற்காகவும் ஐரோப்பா முழுதும் பயணம் செய்தார்.

1285ம் ஆண்டு அவர் தமது முதல் பணியை வடக்கு ஆபிரிக்காவில் தொடங்கினார். ஆனால் அவர் "துனிஸ்" (Tunis) நகரிலிருந்து வெளியேற்றப்பட்டார். 1304ல் இரண்டாம் முறையாக துனிஸ் பயணித்த இவர், துனிஸ் அரசருக்கு பல கடிதங்களை எழுதினர்.

1314ம் ஆண்டு, தமது 82ம் வயதில் ரெமோன் வட ஆபிரிக்க பயணமானார். அங்கே, கோபமுற்ற இஸ்லாமிய கூட்டமொன்று, "பௌகி" (Bougie ) நகரில் இவரை கல்லால் அடித்தது. ஜெனோஸ் வியாபாரிகள் அவரை மீட்டு "மல்லோர்காவிற்கு" (Mallorca) அழைத்துச் சென்றனர். ஒரு வருடத்தின் பிறகு, அங்கே "பல்மாவிலுள்ள" (Palma) இல்லத்தில் மரித்தார்.
 

துன்பங்கள் தோன்றிடும் வேளையிலே நீ துணை தந்து காத்திட வேண்டுமம்மா