Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

இயேசுவின் வழியினிலே

 

 ✠ புனிதர் வலேரியஸ் ✠ (St. Valerius of Trier)
   
நினைவுத் திருநாள் : ஜனவரி 29
 
 ✠ புனிதர் வலேரியஸ் ✠ (St. Valerius of Trier)

*ட்ரையர் மாகாண ஆயர் : (Bishop of Trier)

*பிறப்பு : தெரியவில்லை

*இறப்பு : கி.பி. 320

*ஏற்கும் சமயம் :
ரோமன் கத்தோலிக்க திருச்சபை (Roman Catholic Church)

பண்டைய புராணத்தின் படி, புனிதர் வலேரியஸ், ட்ரையர் மாகாணத்தின் முதல் ஆயராக இருந்த புனிதர் "யூச்சரியஸ்" (St. Eucharius) அவர்களை பின்பற்றுபவராக இருந்தார்.

புனிதர் பேதுரு அவர்கள், புனித யூச்சரியஸ் (St. Eucharius) அவர்களை, திருத்தொண்டர் "வலேரியஸ்" (Deacon: Valerius) மற்றும் "துணைத் திருத்தொண்டர் மெடர்நஸ்" (Sub Deacon: Maternus) ஆகியோருடன் "கௌல்" (Gaul) என்ற இடத்துக்கு ஆயராக மறை பரப்புதல் செய்வதற்காக அனுப்பினார்.

அவர்கள், "அல்சாஸ்" (Alsace) நாட்டிலுள்ள "ரைன்" (Rhine) மற்றும் "எல்லேலும்" (Ellelum) ஆகிய இடங்களுக்கு வருகையில், துணைத் திருத்தொண்டர் "மெடர்நஸ்" மரணமடைந்தார்.

புனித யூச்சரியஸும், திருத்தொண்டர் வலேரியஸும் துரிதமாக புனிதர் பேதுருவிடம் திரும்பி வந்து, இறந்துபோன மெடர்நசை உயிர்ப்பிக்கும்படி அவரிடம் மன்றாடினார்கள்.

புனிதர் பேதுரு அவர்களுக்கு தமது ஆய ஊழியர்களைத் தந்தார். நாற்பது நாட்களுக்கு மேலாக கல்லரையிலிருந்த துணைத் திருத்தொண்டர் "மெடர்நஸ்" உயிருடன் எழுந்தார்.

அதன்பின், அவர்கள் மென்மேலும் அதிக எண்ணிக்கையிலான பிற இனத்தவரை கிறிஸ்தவ மறைக்கு மனம் திருப்பினர்.

பற்பல தேவாலயங்களைத் தோற்றுவித்ததன் பிறகு, அம்மூன்று தோழர்களும் தமது தீவிர மறை பரப்புதலுக்காக ட்ரையர் மாகாணத்திற்கு கிளம்பிச் சென்றனர்.

ட்ரையர் மாகாணத்தில் மறை பரப்புப் பணி தீவிரமாக நடந்ததால், புனித யூச்சரியஸ் தமது ஆயர் இல்லத்தை அங்கேயே அமைத்துக் கொண்டார். தொடர்ந்த தமது மறை பணியில், அவர் இறந்துபோன ஒரு மனிதனையும் உயிருடன் எழுப்பினார்.

ஒருநாள், ஒரு தேவதூதன் அவரிடம் தோன்றி, அவருடைய மரணம் நெருங்கிக்கொண்டு இருப்பதை அறிவித்தார். மற்றும் அவரது வாரிசாக வலேரியசை (Valerius) சுட்டிக்காட்டினார்.

சுமார் இருபத்தைந்து வருட ஆயர் பணியின் பிறகு, யூச்சரியஸ் டிசம்பர் மாதம் எட்டாம் நாள் மரணமடைந்தார். நகரத்துக்கு வெளியே அமைந்துள்ள புனித யோவான் தேவாலயத்தில் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது.

அதன்பிறகு, வலேரியஸ் சுமார் பதினைந்து ஆண்டுகள் மெடர்நசின் (Maternus) துணையுடன் ஆயராக வெற்றிகரமாக பணிபுரிந்தார்.

ஆக மொத்தம் அவர் சுமார் நாற்பது வருடங்கள் மறை பரப்புதல் புரிந்தார். இதற்கிடையே, அவர் "கொலோன்" (Cologne) மற்றும் "டொங்கெரென்" (Tongeren) ஆகிய இரண்டு மறைமாவட்டங்களை (Dioceses) நிறுவினார்.

புனிதர் பேதுருவின் ஊழியர்களான இவர்களால் எழுப்பப்பட்ட "கொலோன்" மறைமாவட்டத்தின் மேல்பகுதி, "ட்ரையர்" மறை மாவட்டத்துக்கு வழங்கப்பட்டது. பத்தாவது நூற்றாண்டின் இறுதி வரை "கொலோன்" பாதுகாக்கப்பட்டுள்ளது. அதன் பின்னர் பேரரசர் நான்காம் சார்லஸ் (Emperor Charles IV) மூலம் "ப்ராக்" (Prague) மாவட்டத்துக்கு எடுக்கப்பட்டது.
 

துன்பங்கள் தோன்றிடும் வேளையிலே நீ துணை தந்து காத்திட வேண்டுமம்மா