Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

இயேசுவின் வழியினிலே

 

 ✠ புனிதர் ஹிலாரி ✠ (St. Hilary of Poitiers)
   
நினைவுத் திருநாள் : ஜனவரி 13
 *  ✠ புனிதர் ஹிலாரி ✠ (St. Hilary of Poitiers)

 * ஆயர், ஒப்புரவாளர், மறை வல்லுநர் : (Bishop, Confessor and Doctor of the Church)

 * பிறப்பு : கி.பி. 310
    பிக்டாவியம், கௌல் (தற்போதைய பொய்ட்டியர்ஸ், ஃபிரான்ஸ்)
    (Pictavium, Gaul (Modern-day Poitiers, France)

 * இறப்பு : கி.பி. 367
    பொய்ட்டியர்ஸ் (Poitiers)

 * ஏற்கும் சமயம் :
    ரோமன் கத்தோலிக்க திருச்சபை (Roman Catholic Church)
    கிழக்கு மரபுவழி திருச்சபை (Eastern Orthodox Church)
    ஆங்கிலிக்கன் சமூகம்  (Anglican Communion)
     லூதரன் திருச்சபை  (Lutheran Church)
     ஓரியண்டல் மரபுவழி திருச்சபை  (Oriental Orthodoxy)

பொய்ட்டியர்ஸ் நகர புனிதர் ஹிலாரி, "பொய்ட்டியர்ஸ்" (Bishop of Poitiers) மறை மாவட்ட ஆயரும், திருச்சபையின் "மறை வல்லுனரும்" (Doctor of the Church) ஆவார். இவர் "ஆரியன் இனத்தவரின் சுத்தியல்" (Hammer of the Arians) என்றும், "மேற்கின் அதானாசியஸ்" (Athanasius of the West) என்றும் அழைக்கப்படுகின்றார். இலத்தீன் மொழியின்படி, இவரது பெயருக்கு "மகிழ்ச்சி" அல்லது "சந்தோசம்" என்றும் பொருள்படும்.

பொய்ட்டியர்ஸ் நகரில் நான்காம் நூற்றாண்டின் ஆரமபத்தில் பிறந்த இவருடைய பெற்றோர் வேறுபட்ட சபையின் "பாகன்" இனத்தவர் ஆவர். கிரேக்க மொழி உள்ளிட்ட பாகன் கல்வி இவருக்கு தரப்பட்டது. பின்னர் இவர் கற்ற பழைய மற்றும் புதிய ஏற்பாடுகளைப் பற்றிய கல்வி, இவர் கொண்டிருந்த "3ம் நூற்றாண்டில் பிலாண்டினஸ் பின்பற்றுபவர்கள் உருவாக்கிய ஒரு தத்துவ மற்றும் சமய அமைப்பு" (Neo-Platonism) கிறிஸ்தவத்திற்காக கைவிட நேர்ந்தது. பின்னர் அவர், தமது மனைவி, மற்றும் பாரம்பரியப்படி, "புனித அப்ரா" (Saint Abra) எனும் தமது மகளுடன் திருமுழுக்கு பெற்று திருச்சபையில் இணைந்தார்.

அக்காலத்தில், சுமார் 350ம் ஆண்டு, அல்லது 353ம் ஆண்டு, பொய்ட்டியர்ஸ் நகர மக்கள் ஹிலாரியை மிகவும் மதித்தனர். அவர்கள் அவரை தமது ஆயராக மறைமுகமாக தேர்ந்துகொண்டனர். அக்காலத்தில், மேற்கத்திய திருச்சபையை ஆரியனிசம் (Arianism) கைப்பற்றும் அச்சுறுத்தல் இருந்தது.

இந்த இடையூறுகளைத் தடுக்க ஹிலாரி நடவடிக்கை மேற்கொண்டார். "சடுர்நினஸ்" ((Saturninus) எனும், "ஆர்லஸ்" என்ற மறைமாவட்டத்தின் ஆரியன் ஆயர், (The Arian Bishop of Arles) மற்றும் அவரது ஆதரவாளர்களான "யுர்சாசியஸ் மற்றும் வலேன்ஸ்" (Ursacius and Valens) ஆகிய மரபுவழி திருச்சபைக் கிறிஸ்தவர்களின் "கல்லிசன் தலைமைக் குருக்களைக்கொண்டு" (Gallican hierarchy) திருச்சபையைக் காக்க அவர் முதல் நடவடிக்கை எடுத்தார்.

இதே காலகட்டத்தில், ஆரியர்கள் தமது எதிர்ப்பாளர்களை நசுக்க வேண்டி செய்யும் துன்புருத்தல்களைக் கண்டித்து, பேரரசர் "இரண்டாம் காண்ஸ்டன்ஷியசுக்கு" (Emperor Constantius II) ஹிலாரி ஒரு கண்டன கடிதம் எழுதினர். சரித்திர வல்லுனர்கள் இதனை, நடைமுறையில் சில பாகங்களே உள்ள (Book Against Valens) என்று குறிப்பிடுகின்றனர். இம்முயற்சிகள் ஹிலாரிக்கு முதலில் வெற்றியைத் தரவில்லை.

வனவாசத்திற்கான காரணங்கள் மறைத்தே வைக்கப்பட்டிருந்தன என்றாலும், ஹிலாரி ஏறத்தாழ நான்கு வருடங்கள் வெளிநாட்டில் செலவிட்டார். அதானாசியுஸின் கண்டனம் மற்றும் (Nicene) மீதான விசுவாசத்தை அவர் ஏற்க மறுத்ததாலேயே அவர் நாடு கடத்தப்பட்டதாக தகவல்கள் உறுதி செய்கின்றன.

நான்கு வருட வெளிநாட்டு வாசத்தின் பின்னர், 361ம் ஆண்டு, சொந்த மறைமாவட்டம் திரும்பிய ஹிலாரி, முதல் இரண்டு அல்லது மூன்று வருடங்களின் பெரும்பகுதியை உள்ளூர் மத குருமார்களை சமாதானப்படுத்துவதில் செலவிட்டார்.

சுமார் 360ம் ஆண்டு, ஹிலாரியின் ஊக்குவிப்பால் "டூர்ஸ்" மறைமாவட்டத்தின் பதவியேற்கவிருந்த ஆயர் மார்ட்டின் (Martin, the future bishop of Tours) "லிகுக்" (Ligug) என்ற இடத்தில் ஒரு துறவு மடம் ஒன்றினை நிறுவினார்.

புனிதர் ஜெரோம் (St. Jerome) அவர்களின் கூற்றுப்படி, 367ம் ஆண்டு, பொய்ட்டியர்ஸ் நகரில் ஹிலாரி மரித்தார்.


+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
நிகழ்வு

ஹிலாரி, தன்னுடைய இளமைப் பருவத்தில் பல்வேறு நூல்களைக் கற்றறிந்து அறிவில் சிறந்தவராய் விளங்கி வந்தார். அப்போதெல்லாம் அவருக்கு வாழ்க்கையின் உண்மையான இரகசியத்தை அறிந்துகொள்வதுதான் முதன்மையான நோக்கமாக இருந்தது. அவர் எத்தனையோ மனிதர்களிடம் கேட்டபோதும் எத்தனையோ நூல்களைக் கற்றறிந்தபோதும் வாழ்க்கையின் உண்மையான இரகசியத்தை அவரால் அறிந்துகொள்ள முடியவில்லை. அப்போதுதான் அவருக்கு விவிலியம் வாசிக்கக் கிடைத்தது. அவர் விவிலியத்தை வாசிக்க வாசிக்க, இத்தனைநாளும் அவரைத் தூங்கவிடாமல் செய்த வாழ்வின் இரகசியத்திற்கான பதில் கிடைத்தது. அப்போதே அவர் இயேசுதான் உண்மையான இறைவன் என்பதை உணர்ந்து கிறிஸ்துவ நெறியைப் பின்பற்றத் தொடங்கினார்.

வாழ்க்கை வரலாறு

ஹிலாரி, பிரான்சு நாட்டில் 315 ஆம் ஆண்டு, ஒரு கிறிஸ்தவரல்லாத பெற்றோருக்குப் பிறந்தார். இவருடைய பெற்றோர் வசதி படைத்தவர்களாய் இருந்தார்கள். அதனால் அவர்கள் ஹிலாரிக்கு மிகச் சிறப்பான கல்வியை வழங்கினார்கள். தான் பெற்றுக்கொண்ட கல்வி அனைத்தின் வழியாகவும் ஹிலாரி அறிவில் சிறந்தவராய் விளங்கி வந்தார். அப்போதெல்லாம் இவருக்கு வாழ்க்கையின் உண்மையான இரகசியம் என்ன என்பது பற்றிய தேடல் அதிகமாக இருந்தது. அத்தேடல் அவர் விவிலியத்தை படித்தறிந்தபோது நிறைவடைந்தது.

ஹிலாரியிடம் இருந்த அறிவுத்திறனை கண்டு, அவரை பாய்ஸ்டியர் நகர ஆயராக உயர்த்தினார்கள். ஆயராக உயர்ந்த பிறகு ஹிலாரி மிகச் சிறப்பான பணிகளை ஆற்றி வந்தார். அந்த காலத்தில் ஆரிய பதம் என்னும் தப்பறைக் கொள்கை திருச்சபைக்கு பெரிய தலைவலியாக இருந்து வந்தது. அத்தப்பறை இயேசுவின் இறையியல்பை மறுத்துவந்தது. இதை அறிந்த ஆயர் ஹிலாரி அதனைக் கடுமையான எதிர்த்தார். இதனால், ஆரியசும் அவரோடு சேர்ந்த ஒருசில ஆட்களுக்கும் மன்னர் கொன்ஸ்டாண்டினோடு சேர்ந்துகொண்டு ஆயர் ஹிலாரியை பிரிஜியா என்னும் தீவிற்கு நாடு கடத்தினார்கள். அங்கே இவர் அடைந்த வேதனைகளுக்கு அளவே இல்லை, இருந்தாலும் அந்த வேதனை காலத்தை ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்திகொண்டு "தவத்திருத்துவம் குறித்த நூல் ஒன்றை எழுதினர். இது இன்று வரைக்கும் திருச்சபைக்கு மிகப்பெரிய பொக்கிஷமாக இருந்து வருகின்றது.

பிரிஜியா தீவிலிருந்து விடுவிக்கப்பட்ட ஆயர் ஹிலாரி, மீண்டுமாக பணித்தளத்திற்கு வந்து பல்வேறு பணிகளைச் செய்யத் தொடங்கினார். குறிப்பாக திருவழிப்பாட்டுப் பாடல்களை ஒருங்கிணைப்பதும் திருவழிபாட்டை ஒருங்கிணைப்பதுமாக இருந்தார். இதற்கிடையில் 359 ஆம் ஆண்டு செலுக்கியா திருச்சங்கம் கூடியது. அச்சங்கத்தில் ஆயர் ஹிலாரி இயேசுவின் இறைத்தந்தையைக் குறித்து மிக ஆணித்தரமாக எடுத்துரைத்து, ஆரிய பதத்தை மிகக் கடுமையாக எதிர்த்தார். இவ்வாறு திருச்சபையை எதிரிகளிலிருந்து கட்டிக் காப்பாற்றியும் திருச்சபை வளர்ச்சிக்குப் பெரிதும் உதவிய ஆயர் ஹிலாரி 367 ஆம் ஆண்டு இறையடி சேர்ந்தார். இவருக்கு 1851 ஆம் ஆண்டு, அப்போது திருத்தந்தையாக இருந்த ஒன்பதாம் பத்திநாதரால் திருச்சபையின் மறைவல்லுநர் பட்டம் கொடுக்கப்பட்டது..

கற்றுக்கொள்ளவேண்டிய பாடம்

தூய ஹிலாரியின் நினைவுநாளைக் கொண்டாடும் இன்று, அவரிடமிருந்து என்ன பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம் என்று சிந்தித்துப் பார்த்து நிறைவு செய்வோம்.

1. விவிலியத்தின் மீது உண்மை தாகம்

தூய ஹிலாரியின் வாழ்க்கை வரலாற்றைப் படிக்கின்றபோது அவர் விவிலியத்தின் மீது எந்தளவுக்கு தாகம் கொண்டிருந்தார் என்பதையும், விவிலியத்திலிருந்தே அவர் வாழ்விற்கான அர்த்தத்தையும் கண்டுகொண்டார் என்னும் உண்மையையும் உணர்ந்துகொள்ளலாம். அவருடைய விழாவைக் கொண்டாடுகின்ற நாம், விவிலியத்திற்கு நம்முடைய வாழ்வில் உரிய முக்கியத்துவம் கொடுக்கின்றமோ? என்று சிந்தித்துப் பார்க்க வேண்டும். "விவிலியத்தை அறியாதவன் கிறிஸ்துவை அறியாதவன்" என்பார் தூய எரோனிமுஸ். நாம் விவிலியத்தை கற்றறியாமல் கிறிஸ்துவை எப்படி அறிந்துகொள்ள முடியும்? என்று தெரியவில்லை. விவிலியம் வாழ்வு தரும் வார்த்தைகளைக் கொண்டிருக்கின்றது, இந்த உண்மையை நாம் உணர்ந்து விவிலியத்திற்கு நமது அன்றாட வாழ்வில் முக்கியத்துவம் கொடுத்து வாழ்வது நம்முடைய கடமையாகும்.

இந்த இடத்தில் ஒரு உண்மை நிகழ்வைச் சுட்டிக்காட்டுவது மிகப் பொருத்தமாக இருக்கும். சில ஆண்டுகளுக்கு முன்பாக எத்தியோப்பியாவை மெனெலிக் என்னும் மன்னன் ஆண்டு வந்தான். ஒருமுறை அவனுக்கு தீராத நோய் வந்தது. அப்போது யாரோ ஒருவர் விவிலியத்தின் பக்கங்களை உண்டால் நோய் குணமாகும் என்று சொல்ல, அதன்படியே அவன் விவிலியத்தின் ஒவ்வொரு தாளாகக் கிழித்து உட்கொள்ளத் தொடங்கினான். அதிசயம் என்னவென்றால், அவனுடைய நோய் விரைவிலேயே குணமடைந்தது. அதன்பிறகு அவனுக்கு எப்போதெல்லாம் நோய் வந்ததோ, அப்போதெல்லாம் அவன் விவிலியத்தின் பக்கங்களைக் கிழித்து உட்கொண்டு, நோய் நீங்கப் பெற்றான்.

விவிலியம் - இறைவார்த்தை - வாழ்வுதரக்கூடியது என்பதை இதன்வழியாக அறிந்துகொள்ளலாம். நாம் வாழ்வுபெற விவிலியத்தைக் கிழித்து உண்ணவேண்டும் என்பதில்லை, விவிலியத்தை ஆழமாக, நம்பிக்கையோடு வாசித்தாலே போதுமானது.

ஆகவே, தூய ஹிலாரிவின் விழாவைக் கொண்டாடும் நாம், அவரைப் போன்று திருச்சபையின் வளர்ச்சியில் நம்மைக் கரைத்துக்கொள்வோம், விவிலியத்தின் மீது தாகம் கொண்டு வாழ்வோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.
 
 

துன்பங்கள் தோன்றிடும் வேளையிலே நீ துணை தந்து காத்திட வேண்டுமம்மா