Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

இயேசுவின் வழியினிலே

 

✠ புனிதர் கிரகோரி ✠ (St. Gregory of Nyssa)
   
நினைவுத் திருநாள் : ஜனவரி 10
 ✠ புனிதர் கிரகோரி ✠ (St. Gregory of Nyssa)

* கப்படோசியன் தந்தை : (Cappadocian Father)

* பிறப்பு : கி.பி. 335
   நியோசேசரே, கப்படோசியா (Neocaesarea, Cappadocia)

* இறப்பு : கி.பி. 395
   நிஸ்ஸா, கப்படோசியா (Nyssa, Cappadocia)

* ஏற்கும் சமயம் :
   ரோமன் கத்தோலிக்க திருச்சபை (Roman Catholic Church)
   ஓரியண்டல் மரபுவழி திருச்சபை (Oriental Orthodoxy)
   கிழக்கு மரபுவழி திருச்சபை (Eastern Orthodox Church)
   லூதரன் திருச்சபை (Lutheranism)
   ஆங்கிலிக்கன் சமூகம் (Anglican Communion)

புனிதர் கிரகோரி (St. Gregory of Nyssa), கி.பி. 372ம் ஆண்டு முதல், 376ம் ஆண்டு வரையும், பின்னர் கி.பி. 378ம் ஆண்டு முதல் அவரைது மரணம் வரை பதவியிலிருந்த "நிஸ்ஸா" ஆயர் (Bishop of Nyssa) ஆவார். இவரும், இவரது மூத்த சகோதரரான புனிதர் "பாசில்" (Basil of Caesarea) மற்றும் புனிதர் "கிரகோரி" (Gregory of Nazianzus) ஆகிய மூவரும் "கப்படோசியன் தந்தையர்" (Cappadocian Fathers) என்று அழைக்கப்பட்டனர்.

தமது மூத்த சகோதரர் "கிரகோரியிடமிருந்த" (Gregory of Nazianzus) நிர்வாகத் திறனும், செல்வாக்கும் இவரிடம் இல்லாதிருந்தது. ஆனால், "மூவொரு இறைவனுக்கும்" (Trinity), "நீசென் கிரீட்" (Nicene Creed) எனப்படும் கிறிஸ்தவ இலக்கணத்தில் பரவலாக பயன்படுத்தப்பட்ட சின்னத்துக்கும் பெருமளவில் பங்களிப்பாற்றிய, ஆழ்ந்து கற்ற இறையியல் அறிஞர் ஆவார். கிரகோரியின் தத்துவ நூல்கள் "ஆரிஜென்" (Origen) எனும் கிறிஸ்தவ இறையியல் கிரேக்க அறிஞரின் செல்வாக்கு பெற்றன.

இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் இருந்து, கிரகோரியின் கல்விப் பணிகளில், குறிப்பாக உலகளாவிய ஆர்வத்தில் கணிசமான அதிகரிப்பு ஏற்பட்டிருந்தது. இது அவருடைய பல பாரம்பரிய இறையியல் விளக்கங்களுக்கு சவாலாக விளங்கியது.

கி.பி. சுமார் 335ம் ஆண்டு, "கப்படோசியாவின்" (Cappadocia) "நியோசேசரே" (நியோசேசரே) நகரருகே செல்வந்தர்களின் குடும்பமொன்றில் பிறந்த கிரகோரியின் தந்தை, "மூத்த பாசில்" (Basil the Elder) என்று அறியப்படுகிறார். "எம்மெலியா" (Emmelia of Caesarea) இவரது தாயார் ஆவார். இவரது பெற்றோர் மிகவும் பக்தியானவர்கள் ஆவர். இவரது தாய்வழி தாத்தா, ரோமப்பேரரசர் முதலாம் "கான்ஸ்டன்டைன்" (Constantine I) காலத்துக்கு முன்னே கிறிஸ்தவ மறைசாட்சியாக கொல்லப்பட்டவர் ஆவார். கிரகோரி மற்றும் அவரது சகோதர சகோதரியர் நால்வரையும் புனிதரான இவர்களது தாய்வழி பாட்டி "மேக்ரினா" (St. Macrina) வளர்த்தார்.

கிரகோரி, அமைதியான மற்றும் சாந்தமான குணாம்சங்கள் கொண்டிருந்தார்.

இவருடைய தாயார் "எம்மெலியா" (Emmelia), மற்றும் சகோதரி "மேக்ரினா" (Macrina) ஆகியோர் இவருக்கு வீட்டிலேயே ஆரம்பக் கல்வி கற்பித்தனர். அவரது மேல் படிப்பு பற்றிய சரித்திர ஆசிரியர்களின் கருத்துக்கள் ஐயங்கள் ஏற்படுத்துகின்றன. "ஏதேன்ஸ்" (Athens) நகரில் உயர்கல்வி தொடங்கிய இவர், "செசேரா" (Caesarea) நகரில் கல்வியை தொடர்ந்தார். பாரம்பரிய இலக்கியம், தத்துவம் மற்றும் ஒருவேளை, மருத்துவமும் கற்றார். தமது மூத்த சகோதரரான பாசில், மற்றும் பவுல், யோவான், மற்றுமுள்ள அப்போஸ்தலர்கள், மற்றும் தீர்க்கதரிசிகளே தமது ஆசிரியர்கள் என்று கிரகோரி கூறுகிறார். இவரது சகோதரர்களான "பாசிலும்" (Basil) "நவ்கிரேஷியசும்" (Naucratius) துறவியராக வாழ்ந்த காலத்தில், கிரகோரி ஒரு சொல்லாட்சிக் கலைஞராக தமது மதசார்பற்ற வாழ்க்கையை தொடங்கினார். ஆயினும், அவர் ஒரு பயிற்சியாளராக செயல்பட்டார்.

இந்த காலகட்டத்தில் கிரகோரி, "தியோசேபியா" (Theosebia) என்ற பெண்மணியை மொழி செய்து கொண்டார் என்பது அறியப்படுகிறது. சில சமயங்களில், ஆதி கிறிஸ்தவ மரபுவழி சபையின் பெண் திருத்தொண்டர் என்றும் புனிதர் என்றும் அறியப்படுகின்றார். இது சர்ச்சைக்குரியது. எனினும், மற்ற வர்ணனையாளர்கள், திருத்தொண்டர் "தியோசேபியா" (Theosebia), கிரகோரியின் சகோதரிகளில் ஒருவரென்றும் கூறுகின்றனர்.

பேரரசன் "வலேன்ஸ்" (Emperor Valens), 371ம் ஆண்டு, கப்படோசியாவை இரண்டு மாகாணங்களாகப் பிரித்தார். இவை, "கப்படோசியா பிரைமா" (Cappadocia Prima) என்றும், கப்படோசியா செகுண்டா" (Cappadocia Secunda) என்றும் அறியப்பட்டன. இது திருச்சபை எல்லைகளில் சிக்கலான மாற்றங்களை விளைவித்தது. அதன்பேரில், பல புதிய ஆயர்கள் உருவாக்கப்பட்டனர். செசேரா நகர தலைவராக இருந்த இவரது சகோதரர் பாசிலின் ஆதரவுடன், கிரகோரி புதிய மறைமாவட்டம் "நிஸ்ஸா" (Nyssa) ஆயராக 372ம் ஆண்டு தேர்வு செய்யப்பட்டார்.

ஆயராக, கிரகோரியின் கொள்கைகள் அவருக்கு எதிராகவே திரும்பின. அவற்றால் அவர் பல்வேறு பிரச்சனைகளை சந்திக்க நேர்ந்தது. கி.பி. 375ம் ஆண்டு, "டெஸ்மாதேன்ஸ்" (Desmothenes of Pontus) எனும் அரசியல்வாதி, தேவாலயங்களின் நிதிகளின் மோசடி மற்றும் ஆயர்களின் ஒழுங்கற்ற அருட்பொழிவுகள் மீதான குற்றச்சாட்டுகளில் கிரகோரியை சிக்கவைக்கும் முயற்சியாக, "ஆன்சிரா" (Ancyra) எனுமிடத்தில் ஒரு சபை கூட்டத்தை ஏற்பாடு செய்தார். அதே வருடம் குளிர்காலத்தில், அவர் அரச படைகளால் கைது செய்யப்பட்டார். ஆனால் அவர் தப்பித்துச் சென்றார். 376ம் ஆண்டு, "நிஸ்ஸா" எனுமிடத்தில் நடந்த ஆலோசனை சபை (Synod of Nyssa), கிரகொரியை விடுவித்தது. ஆயினும் கிரகோரி, 378ம் ஆண்டு, தமது ஆயர் பதவியை திரும்பப் பெற்றார். இது, ஒருவேளை புதிய பேரரசர் "கிரேஷியன்" (Emperor Gratian) அறிவித்த ஒரு பொதுமன்னிப்பு காரணமாக இருக்கலாம்.

379ம் ஆண்டு, "அந்தியோக்கியாவில்" (Synod of Antioch) நடந்த பொது ஆலோசனை சபையில் கலந்துகொண்டார்.

381ம் ஆண்டு நடந்த "கான்ஸ்டண்டிநோபில்" (First Council of Constantinople) முதலாம் பொது சங்கத்தில் கலந்துகொண்டார்.

கிரகோரி, 395ம் ஆண்டு, கப்படோசியாவின் நிஸ்ஸா எனுமிடத்தில் மரணமடைந்தார்.
 

துன்பங்கள் தோன்றிடும் வேளையிலே நீ துணை தந்து காத்திட வேண்டுமம்மா