Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

இயேசுவின் வழியினிலே

 

✠ புனிதர் அர்னால்ட் ஜன்ஸ்ஸென் ✠(St. Arnold Janssen)
   
நினைவுத் திருநாள் : (டிசம்பர்/ Dec - 15)
✠ புனிதர் அர்னால்ட் ஜன்ஸ்ஸென் ✠(St. Arnold Janssen)

 குரு/ நிறுவனர்:
(Priest and Founder)

பிறப்பு: நவம்பர் 5, 1837
கோச், ஜெர்மனி
(Goch, Germany)

இறப்பு: ஜனவரி 15, 1909 (வயது 71)
ஸ்டீல், நெதர்லாந்து
(Steyl, Netherlands)

ஏற்கும் சமயம்:
கத்தோலிக்க திருச்சபை
(Catholic Church)

முக்திப்பேறு பட்டம்: அக்டோபர் 19, 1975
திருத்தந்தை ஆறாம் பவுல்
(Pope Paul VI)

புனிதர் பட்டம்: அக்டோபர் 5, 2003
திருத்தந்தை இரண்டாம் ஜான் பவுல்
(Pope John Paul II)

நினைவுத் திருநாள்: ஜனவரி 15

புனிதர் அர்னால்ட் ஜன்ஸ்ஸென், ஒரு ஜெர்மன்-டச்சு கத்தோலிக்க (German-Dutch Catholic priest) குருவும், மிஷனரியும் (Missionary) ஆவார். அவர் கத்தோலிக்க மிஷனரி ஆன்மீக சபையான (Catholic Missionary Religious Congregation) "தெய்வீக வார்த்தை சமூகம்" (Society of the Divine Word) நிறுவினார், இது "தெய்வீக வார்த்தை மிஷனரிகள்" (Divine Word Missionaries) என்றும் அழைக்கப்படுகிறது, அத்துடன் பெண்களுக்கான இரண்டு சபைகளையும் அவர் நிறுவினார். கி.பி. 1889ம் ஆண்டு, நெதர்லாந்தின் (Netherlands) "ஸ்டீல்" (Steyl) நகரில், "தூய ஆவியாரின் மிஷனரி சகோதரியர் ஊழியர்கள்" எனும் பெண்களுக்கான ஆன்மீக சபையை நிறுவினார். மற்றும், கி.பி. 1896ம் ஆண்டு, "தூய ஆவியானவர் வணக்க சகோதரிகள்" (Holy Spirit Adoration Sisters) எனும் பெண்களுக்கான ஆன்மீக சபையை அதே நகரில் நிறுவினார்.

அர்னால்ட் ஜன்ஸ்ஸென், மேற்கு ஜெர்மனியின் (Western Germany), "டட்ச்" எல்லைக்கு (Dutch border) அருகாமையிலுள்ள "ரைன்லாண்ட்" (Rhineland) பிராந்தியத்தின் "கோச்" (Goch) நகரில், பதினோரு சகோதரர்களுல் ஒருவராக பிறந்தார். அவர் ஒரு ஆழ்ந்த, எளிய கத்தோலிக்க விசுவாசத்தை வளர்த்துக் கொண்டார். தமது பிறந்த இடத்திற்கு அருகில் உள்ள "கெயஸ்டாங்க்" (Gaesdonck) என்னுமிடத்திலுள்ள கத்தோலிக்க அகஸ்டினியம் உயர்நிலைப்பள்ளியில் (Catholic Augustinianum High School) கல்வி கற்றார். பின்னர், கல்லூரியில் பயின்று பட்டம் பெற்ற இவர், பின்னர் இறையியல் பயின்று, கி.பி. 1861ம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம், 15ம் நாளன்று, குருத்துவ அருட்பொழிவு பெற்றார்.

வெளிநாடுகளில் மறைப்பணியாற்றும் ஆர்வம் கொண்டிருந்த ஜன்ஸ்ஸென், சிறிது காலம் ஜெர்மனியின் போச்சோல்ட் (Bocholt) நகரிலுள்ள உயர்நிலைப் பள்ளியில், இயற்பியல் (Physics) மற்றும் மறைக்கல்வி (Catechism) கற்பிக்கும் ஆசிரியராகப் பணிபுரிந்தார்.

கி.பி. 1867ம் ஆண்டு, ஜெர்மனி (Germany ) மற்றும் ஆஸ்திரியாவுக்கான (Austria) "அப்போஸ்டலேட் டெஸ் கெபெட்ஸ்" (Apostolate des Gebeds) எனும் அமைப்பின் இயக்குநரானார். பின்னர், வியன்னாவுக்கு (Vienna) அருகிலுள்ள "மட்லிங்க்" (Mdling) நகரில், ஒரு அறிவியல் நிறுவனத்தை நிறுவினார்.

அவர் ஏற்கனவே, 1874ம் ஆண்டு, "திருஇருதயத்தின் சிறிய தூதர்" (Little Messenger of the Sacred Heart) எனும் ஜெர்மன் மொழி இதழை நிறுவினார், இதனால், விசுவாசிகளை ஜெபத்திலும், மறைப்பணிக்கான ஆதரவிலும் சேர்க்க முயன்றது.

கி.பி. சுமார் 1872ம் ஆண்டு முதல், 1878ம் ஆண்டு வரையான, புரூஷியா இராச்சியத்தின் (Kingdom of Prussia) அரசாங்கத்திற்கும் ரோமன் கத்தோலிக்க திருச்சபைக்கும் இடையிலான மோதல், (Kulturkampf) என்று அழைக்கப்பட்டது. இது, எவ்வாறாயினும், அவரது முயற்சிகளுக்கு இடையூறாக இருந்தது.

ஜன்ஸ்ஸென், தனது குருத்துவ பள்ளியை (Seminary) தொடங்க நெதர்லாந்தின் (Netherlands) ஸ்டீல் (Steyl) நகரில் நிலத்தை வாங்கினார். கி.பி. 1875ம் ஆண்டு, "திருத்தூதர் தூய மிக்கேல் மறைப்பணி இல்லம்" (St. Michael the Archangel Mission House) எனும் பெயரில் அர்ப்பணிக்கப்பட்டது. சில ஆண்டுகளிலேயே, பல குரு மாணவர்கள், குருக்கள், மற்றும் அருட்சகோதரர்கள் அங்கு மறைப்பணியாளர் (மிஷனரி) சேவைக்கு தயாராகி வந்தனர். முதல் இரண்டு மிஷனரிகளாக, "ஜோசப் ஃப்ரீனாடெமெட்ஸ்" (Joseph Freinademetz) மற்றும் "ஜான் அன்சர்" (John Anzer) ஆகிய இரண்டு குருக்கள், சீனாவுக்கு (China) அனுப்பப்பட்டனர்.

கி.பி. 1889ம் ஆண்டு, டிசம்பர் மாதம், எட்டாம் நாளன்று ஒன்றும், கி.பி. 1896ம் ஆண்டு, செப்டம்பர் மாதம், 8ம் நாளன்று ஒன்றுமாக, பெண்களுக்கான இரண்டு ஆன்மீக சபைகளையும் ஜன்ஸ்ஸென் நிறுவினார்.

கி.பி. 1975ம் ஆண்டு, அக்டோபர் மாதம், 19ம் தேதி, திருத்தந்தை ஆறாம் பவுல் (Pope Paul VI) அவர்களால் முக்திப்பேறு பட்டமளிக்கப்பட்ட இவரை, திருத்தந்தை இரண்டாம் ஜான் பவுல் (Pope John Paul II) அவர்கள், 2003ம் ஆண்டு, அக்டோபர் மாதம், 5ம் நாளன்று, புனிதராக உயர்த்தி அருட்பொழிவு செய்வித்தார்.
 

துன்பங்கள் தோன்றிடும் வேளையிலே நீ துணை தந்து காத்திட வேண்டுமம்மா