Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

இயேசுவின் வழியினிலே

 

✠ அருளாளர் மேனுவல் டொமிங்கோ ✠ (Blessed Manuel Domingo y Sol)
   
நினைவுத் திருநாள் : ஜனவரி 25
 
  ✠ அருளாளர் மேனுவல் டொமிங்கோ ✠ (Blessed Manuel Domingo y Sol)

*குரு/ நிறுவனர் : (Priest/ Founder)

*பிறப்பு : ஏப்ரல் 1, 1836
டோர்டோஸா, டர்ரகோனா, ஸ்பெயின் அரசு
(Tortosa, Tarragona, Kingdom of Spain)

*இறப்பு : ஜனவரி 25, 1909 (வயது 72)
டோர்டோஸா, டர்ரகோனா, ஸ்பெயின் அரசு
(Tortosa, Tarragona, Kingdom of Spain)

*ஏற்கும் சமயம் :
ரோமன் கத்தோலிக்க திருச்சபை
(Roman Catholic Church)

*முக்திபேறு பட்டம் : மார்ச் 29, 1987
திருத்தந்தை இரண்டாம் ஜான் பால்
(Pope John Paul II)

*பாதுகாவல் :
திருத்தந்தை ஸ்பேனிஷ் கல்லூரி (Pontifical Spanish College),
இயேசுவின் மாசற்ற இருதயத்தின் மறைமாவட்ட பணியாளர் குருக்கள் (Diocesan Labour Priests of the Sacred Heart of Jesus)

அருளாளர் மேனுவல் டொமிங்கோ, ஒரு ஸ்பேனிஷ் ரோமன் கத்தோலிக்க குரு ஆவார். இவர், ரோம் நகரிலுள்ள "திருத்தந்தையர் ஸ்பேனிஷ் கல்லூரி" (Pontifical Spanish College), மற்றும் "இயேசுவின் மாசற்ற இருதயத்தின் மறைமாவட்ட பணியாளர் குருக்கள்" (Religious Order of the Diocesan Labour Priests of the Sacred Heart of Jesus) சபை ஆகியவற்றின் நிறுவனரும் ஆவார். இவர் ஒரு இளம் குருவாகையால், இளம்பருவத்தினரின் ஈடுபாட்டிற்காக ஒரு விளையாட்டு அரங்கினையும் நாடக அரங்கினையும் கட்டினார்.

வாழ்க்கை:
1836ம் ஆண்டு, ஏப்ரல் மாதம், முதல் தேதி, ஸ்பெயின் நாட்டின் "டோர்டோஸா" (Tortosa) என்னுமிடத்தில், தமது பெற்றோரின் பன்னிரண்டு குழந்தைகளில் கடைசி குழந்தையாகப் பிறந்த அருளாளர் மேனுவல் டொமிங்கோ, அதே மாதத்திலேயே திருமுழுக்கும் பெற்றார்.

1851ம் ஆண்டு, தமது ஊரிலேயே குருத்துவ கல்வியை ஆரம்பித்த இவர், 1860ம் ஆண்டு, ஜூன் மாதம், இரண்டாம் தேதி, குருத்துவம் பெற்றார். பின்னர், "வலன்ஸியா கல்லூரிக்கு" (Valencia college) உயர் கல்விக்காக சென்ற இவர், 1865ம் ஆண்டு, "இறையியல் தகுதிச்சான்று" (Licentiate in Theology) பெற்றார். 1865ம் ஆண்டு, தமது பழைய கல்லூரியிலேயே பேராசிரியராக கற்பித்தார்.

1873ம் ஆண்டு, குளிர்கால ஃபெப்ரவரி மாதத்தின் ஒருநாள் மேனுவல், இறையியல் மாணவரான "ரமோன் வலேரோ" (Ramn Valero) என்பவரைச் சந்தித்தார். "1868ம் ஆண்டு புரட்சியின்போது" (1868 revolution) அவர் கற்ற "டோர்டோஸா கல்லூரி" (Tortosa seminary) இடிக்கப்பட்டதை அறிந்து வருந்தினார். இச்சம்பவம் இவரது மனதை தொட்டது. இதன்காரணமாக மேனுவல், 1873ம் ஆண்டு, செப்டம்பர் மாதத்தில் இறையியல் மாணவர்களுக்காக "புனித ஜோசப் இல்லம்" ("Saint Joseph's House") தொடங்கி வைத்தார். 1879ம் ஆண்டு, ஏப்ரல் மாதம், 11ம் தேதி, "தேவாலயப் பணிகளுக்கான புனித ஜோசப் கல்லூரி" ("College of Saint Joseph for Ecclesiastical Vocations") என்ற கல்லூரியை நிறுவி தொடங்கினார். 1892ம் ஆண்டு, ஏப்ரல் மாதம், முதல் தேதி, "திருத்தந்தையரின் ஸ்பேனிஷ் கல்லூரியை" (Pontifical Spanish College) ரோம் நகரில் நிறுவி தொடங்கி வைத்தார்.

மேனுவலின் முயற்சிகளைப் வரவேற்கவும் பாராட்டவும் செய்த திருத்தந்தை பதின்மூன்றாம் லியோ, (Pope Leo XIII) அவருக்கும் அவரது பிற இறையியல் மாணவர்களுக்கும் தங்குவதற்கான வசதிகளை அளிக்க உத்தரவிட்டார். இவரது கல்லூரிக்கு, "திருத்தந்தையருக்கான" (Pontifical) என்ற கௌரவம், திருத்தந்தை பத்தாம் பயஸ் (Pope Pius X) அவர்கள் காலத்திலேயே வழங்கப்பட்டது.

மேனுவல், இயேசுவின் மாசற்ற திரு இருதய குருக்களின் பணிகள் சபை" (The Diocesan Labour Priests of the Sacred Heart of Jesus) என்றொரு சபையையும் 1883ம் ஆண்டு, ஜனவரி மாதம், 29ம் நாள், நிறுவினார். இச்சபைக்கான மறைமாவட்ட ஒப்புதல் 1886ம் ஆண்டு, ஜனவரி மாதம், முதல் தேதியன்று, அளிக்கப்பட்டது. 1898ம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம் முதல் தேதியன்று, திருத்தந்தை பதின்மூன்றாம் லியோ (Pope Leo XIII) அவர்கள், "திருத்தந்தையர் பாராட்டுப் பத்திரம்" (Papal Decree of Praise) அளித்தார்.

அருளாளர் மேனுவல் டொமிங்கோ 1909ம் ஆண்டு, ஜனவரி மாதம், 25ம் நாளன்று மரித்தார். அவரது மரணத்தின் பிறகு, 1927ம் ஆண்டு, மார்ச் மாதம், 19ம் நாளன்று, அவர் நிறுவிய "இயேசுவின் மாசற்ற திருஇருதய குருக்களின் பணிகள் சபைக்கு" திருத்தந்தை "பதினொன்றாம் பயஸ்" (Pope Pius XI) அவர்கள் ஒப்புதல் வழங்கினார். இச்சபை, தற்போது "போர்ச்சுகல்" (Portugal) மற்றும் "ஜனநாயக காங்கோ குடியரசு" (The Democratic Republic of Congo) ஆகிய நாடுகளில் இயங்குகிறது.
 

துன்பங்கள் தோன்றிடும் வேளையிலே நீ துணை தந்து காத்திட வேண்டுமம்மா