✠ புனிதர் வேலண்டைன் ✠ (St. Valentine) |
|
|
|
நினைவுத் திருநாள் :
பெப்ரவரி
14 |
✠ புனிதர் வேலண்டைன் ✠ (St.
Valentine)
*ஆயர் மற்றும் மறைசாட்சி :
(Bishop and Martyr)
*பிறப்பு : கி. பி. 176
டேர்னி (Terni)
*இறப்பு : 14 ஃபெப்ரவரி 273
ரோம் (Rome)
*ஏற்கும் சமயம் :
கத்தோலிக்க திருச்சபை
(Catholic Church)
கிழக்கு மரபுவழி திருச்சபை
(Eastern Orthodox Church)
ஆங்கிலிக்கன் ஒன்றியம்
(Anglican Communion)
லூதரனியம்
(Lutheranism)
*சித்தரிக்கப்படும் வகை :
பறவைகள்; ரோஜா மலர்கள்; முடக்குவாதம் அல்லது வலிப்பு வந்த ஒரு
குழந்தையோடு; ஆயரின் தலை வெட்டப்படுவது போல; வாள் ஏந்திய
குருவாக; சூரியனோடு; குருடரை குணமாக்குவது போல
*பாதுகாவல் :
திருமண உறுதி, மயக்கம், தேனீ வளர்ப்பு, மொழி
, காதல்,
கொள்ளைநோய், வலிப்பு நோய், முடக்குவாதம்.
புனிதர் வேலண்டைன் என்பவர், மூன்றாம் நூற்றாண்டின் பரவலாக அறியப்படும்
ரோம புனிதர் ஆவார். உலகின் பல நாடுகளில் இவரின் விழா நாளான
ஃபெப்ரவரி 14ம் நாள், "வேலண்டைன் தினம்" என இவரின் பெயரால் அழைக்கப்பட்டு,
காதலர்கள் மற்றும் காதலுக்கான நாளாகக் கொண்டாடப்படும் வழக்கம்
நடுக்காலம் முதலே உண்டு.
இவரின் பெயர், மற்றும் இவர் ரோம் நகரின் வடக்கு பகுதியில் உள்ள
ஃபிலாமினியாவில் ஃபெப்ரவரி 14ம் நாளன்று கொல்லப்பட்டார் என்பதையும்
தவிர இவரைப்பற்றிய வேறெந்த தகவல்களுக்கும் நம்பத்தகுந்த சான்றுகள்
இல்லை.
புனித வேலண்டைன் என்று ஒரு புனிதரா, அல்லது அதே பெயரில் இரு
புனிதர்கள் உள்ளனரா என்பதும் உறுதியற்றதாக உள்ளது. இவரின் வரலாற்றை
எழுதிய பலர் தரும் தகவல்கள் நம்ப முடியாததாகவும் பின்னர்
சேர்க்கப்பட்டவைகளாகவும் இருக்கலாம்.
இந்த காரணங்களுக்காக இவரின் விழா நாள் 1969ல் திருத்தப்பட்ட
உலகளாவிய கத்தோலிக்க திருச்சபையின் பொது நாள்காட்டியில் இடம்பெறவில்லை.
ஆனாலும் "பெப்ரவரி 14 அன்று ஃபிலாமினியாவில் வழியாக மில்வியான்
பாலத்திற்கு அருகில் கொல்லப்பட்ட மறைசாட்சி வாலெண்டினுஸ்" என்னும்
பட்டத்தில் கத்தோலிக்க திருச்சபையினால் தனித்திருச்சபைகளின்
வணக்கத்திற்காய் அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட புனிதர்களில்
பட்டியலில் இவரின் பெயர் உள்ளது.
புனித வாலன்டைன்
மகிழ்ச்சியான திருமணங்களின் பாதுகாவலர்
காதலைத் தட்டி எழுப்பாதீர்; தானே விரும்பும்வரை அதைத் தட்டி எழுப்பாதீர்
(இபா 3:5)
தொடக்கக்கால மறைசாட்சியாளர்கள் பற்றிய குறிப்பில் புனித வாலன்டைன்
என்ற பெயரில் மூன்று நபர்கள் பிப்ரவரி 14 ஆம் தேதியில்
குறிப்பிடப்படிருக்கிறார்கள் . ஒருவர் ஆப்பிரிக்கா நாட்டில் மறைப்பணியாற்றி
பல்வேறு துன்பங்களை அனுபவித்து இறந்தவர். இவரைப்பற்றி மேலதிக
விபரங்கள் கிடைக்கப் பெறவில்லை .
மற்ற இருவரில் ஒருவர், இன்டெரம்னா என்ற இடத்தின் ஆயராக இருந்தவர்
.மற்றவர் உரோமையில் குருவாகப் பணியாற்றியவர் .இவர்கள் இருவருமே
மறைக்கலகத்தின் போது கொடூர துயரங்களையும் தாங்கிக்கொண்டு நற்செய்தி
போதித்தவர்கள். மூன்றாம் நூற்றாண்டின் பிற்பகுதியில்
கொலையுண்டு மறைசாட்சியானவர்கள் .
உரோமையில் குருவாக இருந்த வாலன்டைன் ஒரு மருத்துவரும் கூட .இவர்
பேரரசர் இரண்டாம் கிளாடியுசின் காலத்தில் நடந்த மறைக்கலகத்தில்
பாதிக்கப்பட்ட மக்களுக்குச் சேவையாற்றினார். எண்ணற்றோர் அத்துன்பக்
கிண்ணத்தைப் பருகாமல் தப்பித்துச் செல்ல வழிவகுத்தார்.
சிறைச்சாலைகளுக்குள் சென்று ஆறுதல் மொழி கூறி ஆற்றுப் படுத்தினார்.
இதே காலத்தில் பெர்சியாவில் இருந்து புனித மாரியுஸ் குடும்பத்தினர்
உரோமைக்குத் திருப்பயணமாக வந்தார்கள் .வந்தவர்கள் வாலன்டைன்
செய்த அரும்பணிகளைப் பார்த்தார்கள் .சவால் நிறைந்த இந்தப் பணிக்கு
புனித மாரியுஸ் மற்றும் அவருடைய குடும்பத்தினர் அனைவருமே வாலன்டைனுக்கு
உதவியாக இருந்தார்கள் .
திருமணமான படை வீரர்களை விட மொழி
ஆகாத வீரர்களே வீரமான
முழு திறனுடன் போராடுவார்கள் என்று நினைத்த பேரரசன் வீரர்கள்
மொழி
செய்வதை தடுத்து வந்தார். இத்தடையை மீறி பல வீரர்களுக்கு
வாலன்டைன் மணமுடித்து வைத்தார்.
வாலன்டைன் செய்வது யெல்லாம் கேட்டறிந்த பேரரசன் அவரைக் கைது
செய்து , உரோமை அளுநனிடம் அனுப்பினார். பொறுமையாக இருந்த அளுநன்
கத்தோலிக்க கிறிஸ்தவ மழையை மறுத்த உரோமை தெய்வத்தை, பேரரசரை
வணங்க கட்டளையிட்டான் . வாலன்டைன் மறுத்தார். துன்புறுத்தினான்
.வாலன்டைன் உறுதியுடன் இருந்தார் . வெகுண்டெழுந்த அளுநன் கொலை
செய்ய ஆணை பிறப்பித்தான் .
வாலன்டைன் ஏறக்குறைய 270 ஆம் ஆண்டு பிப்ரவரி 14 அன்று தலை வெட்டப்பட்டுக்
கொலை செய்யப்பட்டார் . நகர வாயிலில் இருந்து அரை கிலோ மீட்டர்
தள்ளி இருந்த சுரங்கக் கல்லறையில் அவரது உடலை அடக்கம் செய்தார்கள்.
நான்காம் நூற்றாண்டில் அந்த இடத்தை திருத்தந்தை முதலாம் ஜூலியஸ்
பூமிக்கு அடியில் பேராலயம் ஒன்றை எழுப்பினார் .அது திருத்தந்தை
முதலாம் ஹனோரியஸ் என்பவரால் ஏழாம் நூற்றாண்டில் புதுப்பிக்கப்பட்டது.
காலப்போக்கில் காதலர்கள் தங்கள் பாதுகாவலராகவே வாலன்டைனை
நினைத்துப் போற்றினார்கள் .இன்று வரை அது தொடர்கிறது .
காதல் என்பது புனிதமான உணர்வு அதனை இச்சைக்குரியதாய் மாற்றாமல்
உணர்வுப் பரிமாற்றமாக்கிக் கொண்டால் ஆனந்தம் ஆனந்தமே. |
|
|