Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

இயேசுவின் வழியினிலே

 

✠ புனிதர் மரியா கேதரீனா கேஸ்பர் ✠(St. Maria Katharina Kasper)
 
நினைவுத் திருநாள் : (பெப்ரவரி / Fev - 02)
✠ புனிதர் மரியா கேதரீனா கேஸ்பர் ✠(St. Maria Katharina Kasper)

 மறைப்பணியாளர்/ நிறுவனர் :
  (Religious and Founder)

பிறப்பு : மே 26, 1820
டெர்ன்பச், அம்ட் மொண்டபவ்ர், நஸ்ஸாவு, ஜெர்மன் கூட்டமைப்பு
(Dernbach, Amt Montabaur, Duchy of Nassau, German Confederation)

இறப்பு : பிப்ரவரி 2, 1898 (வயது 77)
டெர்ன்பச், அன்டெர்வெஸ்டெர்வட்க்ரெய்ஸ், ப்ரூஸியா, ஜெர்மன் பேரரசு
(Dernbach, Unterwesterwaldkreis, Prussia, German Empire)

ஏற்கும் சமயம் :
ரோமன் கத்தோலிக்க திருச்சபை
(Roman Catholic Church)

முக்திப்பேறு பட்டம் : ஏப்ரல் 16, 1978
திருத்தந்தை ஆறாவது பவுல்
(Pope Paul VI)

புனிதர் பட்டம் : அக்டோபர் 14, 2018
திருத்தந்தை ஃபிரான்சிஸ்
(Pope Francis)

நினைவுத் திருநாள் : ஃபெப்ரவரி 2

பாதுகாவல் :
இயேசு கிறிஸ்துவின் எளிய பணியாளர்கள் சபை
(Poor Handmaids of Jesus Christ)

புனிதர் மரியா கேதரீனா கேஸ்பர், ஒரு ஜெர்மன் ரோமன் கத்தோலிக்க திருச்சபையின் அருட்சகோதரியும், "இயேசு கிறிஸ்துவின் எளிய பணியாளர்கள் சபையின்" (Poor Handmaids of Jesus Christ) நிறுவனருமாவார். சமய வாழ்வில் ஈடுபட வேண்டுமென்ற ஆவல் சிறுவயதிலிருந்தே இருப்பினும், காலம் தாழ்ந்தே அவர் திருச்சபையின் அருட்சகோதரியானார். இவரது தந்தையும் சகோதரர் ஒருவரும் மரித்துப் போனது, மற்றும் இவரது மோசமான பொருளாதார நிலை ஆகியவற்றின் காரணமாக, இவரது ஆன்மீக ஆசைகள் நிறைவேறுவதில் காலதாமதம் ஏற்பட்டன. தமது அர்ப்பணிப்புள்ள வாழ்க்கையில், ஏழைகளுக்கும் நோயுற்றோர்க்கும் உதவுவது மற்றும் சேவையாற்றுவது ஆகியனவற்றுக்காக அவர் குறிப்பிடப்படுகிறார்.

அன்றைய ஜெர்மன் கூட்டமைப்பின் (German Confederation) "வெஸ்டெர்வட்க்ரெய்ஸ்" (Westerwaldkreis) மாவட்டத்தின் "டெர்ன்பச்" (Dernbach) எனும் நகரில் பிறந்த இவரது திருமுழுக்குப் பெயரும், கேதரீனா (Katharina) ஆகும். பக்திமிகு விவசாயியான "ஹெயின்றிச் கேஸ்பர்" (Heinrich Kasper) இவராதது தந்தையார் ஆவார். தந்தையின் நான்காவது மனைவியான "கேத்ரீனா ஃபஸ்ஸல்" (Katharina Fassel) இவரது தாயார் ஆவார். இவர், தமது பெற்றோரின் நான்கு குழந்தைகளில் மூன்றாவது குழந்தை ஆவார்.

அவருடைய குழந்தை பருவத்தில், விவிலியம் பற்றின் குறிப்பிட்ட முக்கியத்துவம் வாய்ந்தவற்றையும், மற்றும் கிறிஸ்துவின் சாயல்களைப்பற்றியும் கற்றுத் தேர்ந்தார். கேதரின், தார்மீக பாத்திரத்தின் வலுவான உணர்வுடன் வெளிப்படையாக அறியப்பட்டார். உடல்நிலை ஆரோக்கியமற்றிருந்த கேதரின், தமது ஆறு வயது முதல் பதினான்கு வயது வரை, தமது சொந்த ஊரிலுள்ள பள்ளியில் கல்வி கற்றார். பெற்றோரின் உருளைக்கிழங்கு வயலிலும், துணி நெசவு செய்தல் உள்ளிட்ட வீட்டு வேலைகளிலும் பெற்றோருக்கு உதவினார். அயலாரின் குழந்தைகளுக்கு கதைகள் சொல்வதிலும் பாடல்கள் பாடிக் காட்டுவதிலும் மகிழ்ச்சியடைந்தார்.

வயல்வெளிகளில் வேலை செய்துவந்த கேத்தரின், வயல்களை சுற்றிலும் சாலைகள் அமைப்பதற்காக கல் உடைக்கும் வேலையும் செய்தார். அடிக்கடி மரியாளின் திருத்தலமொன்றிற்கு பயணம் செய்த அவர், அடிக்கடி, அருகாமையிலுள்ள குழந்தைகளையும் அழைத்துச் சென்றார். சிறுவயது பருவத்தில், அவரது ஆன்மீக வேலைப்பாடுகள் வெளிப்படுத்தப்பட்டு, "கர்த்தருக்குள் என்னைப் பரிசுத்தம் பண்ணிக்கொள்ளுகிறதற்கான ஒரு பெரிய ஆசை என்னுள் உணர்ந்தபோது," நான் ஒரு சிறுமியாக இருந்தேன்" என்று அவர் பின்னாளில் எழுதினார். பெற்றோரின் கஷ்ட நிலைக்கு உதவுவதற்காக வயல்களில் வேலை செய்து வந்த கேத்தரின், "நான் வேலைக்குச் சென்றபோது எனக்குள் கடவுளின் இருப்பை உணர்ந்தேன்" என்று பின்னாளில் எழுதினர்.

கி.பி. 1841ம் ஆண்டு, அவரது தந்தை இறந்துவிட்டார். மற்றும் கி.பி. 1842ம் ஆண்டு, அவருடைய சகோதரர்களில் ஒருவர், நெதர்லாந்தில் வியாபாரத்தில் இருந்து வீடு திரும்பும் வழியில் இறந்து போனார். இவர்களுடைய இறப்பால், இவர்களுடைய குடும்பம் சிதறிப்போனது. ஏற்கனவே மோசமாயிருந்த அவர்களுடைய பொருளாதார நிலைமை, நிலைமையை மேலும் மோசமாக்கியது. அதனால் கேதரினும், அவருடைய தாயாரும் வீட்டை விட்டு வெளியேறி, வேறு இடத்திற்கு செல்லும் கட்டாயத்துக்குள்ளானார்கள். கேதரினும், அவருடைய தாயாரும் மத்தியாஸ் முல்லர் (Matthias Mller) என்பவரின் வீட்டில் ஒரு அறையை வாடகைக்கு எடுத்துக் கொண்டார்கள். அவர், நெசவுப்பணியை ஒரு வேலையாக செய்யத் தொடங்கினார். கேதரின், தமக்காகவும், தமது தாயாருக்காகவும், பத்து சென்ட் காசுகளுக்காக வேலை செய்தார். சிறிது காலத்தின் பின்னர், அவரது தாயார் மரித்துப் போனார். இதன்காரணமாக தனித்து விடப்பட்ட கேதரின், சுயமாக ஆன்மீக வாழ்க்கைக்கான அழைப்பை ஏற்று நடக்காத தொடங்கினார். கேதரின் ஒரு ஒப்புக்கொள்ளப்பட்ட மறைப்பணியாளராக ஆக விரும்பினார். ஆனால், ஏற்கனவே உள்ள ஆன்மீக சபைகளில் சேர விரும்பவில்லை. இது அவருக்கு கடினமான காரியமாக அமையும் என்று அவர் எண்ணினார். பெண்களுக்கான சபைகள் இல்லை என்பதாலும், மதச்சார்பற்ற தன்மை காரணமாக, தான் தமது சொந்தப் பிரதேசத்தை விட்டு வெளியேற வேண்டி நேரிடும் என்பதாலும் அவர் அதனை விரும்பவில்லை. மேலும், அவருக்கு அருகாமை நகரான "மொண்டபௌர்" (Montabaur) எனும் நகரிலும், ஆண்களுக்கான சபைகளை சேர்ந்த "ஃபிரான்சிஸ்கன்" மற்றும் "சிஸ்டர்ஸியன்" (Franciscan and Cistercians) துறவு மடங்களே இருந்தன. அவர்களின் பிரசன்னம் மற்றும் அவர்களின் தற்போதைய மத நடவடிக்கைகளால் அவர்களின் ஆன்மீக வாழ்வு அமைந்திருந்தது.

கேதரின், உள்ளூர் வாசிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினரின் உதவிகளுடன் தமக்கான சிறு இல்லத்தை "டெர்ன்பச்" (Dernbach) நகரில் கட்டி எழுப்பினார். பிற்காலத்தில், இது, அவர் உருவாக்கின சமூகத்தின் இல்லமாக மாறியது. கிராமத்தில் குழந்தைகளையும் நோயாளிகளையும் பேண உதவிய முதல் உள்ளூர் பெண்கள் தங்களுடைய சொந்த வீடுகளில் வாழ்ந்து வந்தனர்.

குறிப்பாக அவர்களின் நடவடிக்கைகள் வளர்ந்த காரணங்களால், அவரது குழுமத்தின் நடவடிக்கைகள் கவனிக்கப்படாமல் போய்விடவில்லை. உள்ளூர் மாநகராட்சி மன்றத் தலைவர் (Mayor), இவர்களது குழுமத்தைப் பற்றின ஒரு பொது அறிவிப்பை வெளியிட்டார். அவர்களுக்கு சில வழிகாட்டுதல்களை அளித்த அவர், அவர்களுக்கு நன்கொடைகளை வழங்கும்படி கிராமவாசிகளை கேட்டுக்கொண்டார். அருகாமையிலுள்ள "வர்ஜெஸ்" (Wirges) மற்றும் "மாண்டபாவர்" (Montabaur) நகரங்களிலுள்ள கத்தோலிக்க குருக்களுக்கும் இவர்களது குழுமம் பற்றின தகவல்கள் கொடுக்கப்பட்டன. ஏற்கனவே கேதரின் விஜயம் செய்திருந்த "லிம்போவின் ஆயர்" (Bishop of Limburg) "பீட்டர் ஜோசப் ப்ளூம்" (Peter Joseph Blum) என்பவருக்கும் அவர்கள் தகவலளித்தனர். உள்ளூர் கிராமத்திலிருந்தும், சுற்று வட்டார கிராமங்கலிருந்தும் பெண்கள் கேதரினின் இல்லத்தில் இணைந்தனர். ஒழுங்கமைக்கப்பட்ட சமய வாழ்க்கைக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு சங்கமாக மாறிய இது, கேதரின் உருவாக்கும் ஆன்மீக சபைக்கான அடிப்படையை இது உருவாக்கியது.

கி.பி. 1851ம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம், 15ம் தேதி, ஆயர் ப்ளூம் (Bishop Blum), வர்ஜெஸ் ஆலயத்தில் (Wirges Church), குழுவின் முதலாவது உறுதிப்பாடுகளைப் பெற்றார். "இயேசு கிறிஸ்துவின் எளிய பணியாளர்கள் சபை"
(Poor Handmaids of Jesus Christ) நிறுவப்பட்டது. கேதரின் (மற்றும் பிற பெண்கள்) ஒப்புக்கொள்ளப்பட்ட மறைப்பணியாளர்களாக அறிவிக்கப்பட்டார்கள். "கேதரின் கேஸ்பர்", "மரியா" எனும் ஆன்மீகப் பெயரை ஏற்றுக்கொண்டார். இவர்களது சபையானது, மிக விரைவில் வேகமாகப் .பரவியது. அவற்றின் செயல்பாடுகளை பார்வையிடுவதற்காக மரியா கேத்தரின் கேஸ்பர் பல்வேறு இல்லங்களுக்கும் வருகை தந்தார். கி.பி. 1859ம் ஆண்டு, சபையினர் விரைவில் நெதர்லாந்து (Netherlands) நாட்டுக்கும் வந்தனர். கேஸ்பர், சபையின் சுப்பீரியர் ஜெனரலாக (Superior General) ஐந்து முறை தொடர்ச்சியாக சேவை செய்தார். கி.பி. 1854ம் ஆண்டு, சபையின் முதல் பள்ளி திறக்கப்பட்டது. கி.பி. 1860ம் ஆண்டு, மார்ச் மாதம், 9ம் தேதி, திருத்தந்தை ஒன்பதாம் பயஸ் (Pope Pius IX), இவர்களது சபைக்கு பாராட்டு ஆணையை வழங்கினார். கி.பி. 1890ம் ஆண்டு, மே மாதம், 21ம் நாளன்று, திருத்தந்தை "பதின்மூன்றாம் லியோ" (Pope Leo XIII) இச்சபைக்கு அங்கீகாரம் வழங்கினார். கி.பி. 1868ம் ஆண்டு, அமெரிக்காவின் (United States of America) சிகாகோ (Chicago) போன்ற நகரங்களிலும் இச்சபை பரவியது.

கி.பி. 1898ம் ஆண்டு, ஜனவரி மாதம், 27ம் தேதி, டெர்ன்பச் (Dernbach) நகரில், இயேசுவை ஆலயத்தில் அர்ப்பணித்தல் திருநாளன்று, (Presentation Feast) மரியா கேதரின் கேஸ்பர், இருதய நோயினால் பாதிக்கப்பட்டு, மாரடைப்பினால் மரித்துப்போனார். சபையின் தலைமை இல்லத்தின் (Motherhouse) அருகேயுள்ள, அருட்கன்னியரின் தனிப்பட்ட கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டார். அவருடைய மிச்சங்கள், தலைமை இல்லத்திலுள்ள சிற்றாலயத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டது. இவர் உருவாக்கி நிர்மாணித்த சபை, மெக்சிக்கோ (Mexico), இந்தியா (India) உள்ளிட்ட உலக நாடுகளில் செயல்படுகிறது. அவரது மரணத்தின்போது, 193 இல்லங்களில், 1725 மறைப்பணியாளர்களுடன் செயல்பட்ட சபை, 2008ம் ஆண்டு, 104 இல்லங்களில், 690 மறைப்பணியாளர்களாக குறைந்துபோனது.
 

துன்பங்கள் தோன்றிடும் வேளையிலே நீ துணை தந்து காத்திட வேண்டுமம்மா