Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

இயேசுவின் வழியினிலே

 

 ✠ புனிதர் ஜோசஃப் ✠ (St. Joseph of Leonessa)
   
நினைவுத் திருநாள் : பெப்ரவரி 4
 ✠ புனிதர் ஜோசஃப் ✠ (St. Joseph of Leonessa)

*கபுச்சின் துறவி மற்றும் மறைசாட்சி : (Capuchin Friar and Martyr)

*பிறப்பு : 1556
லியோநெஸ்சா, இத்தாலி (Leonessa, Italy)

*இறப்பு : ஃபெப்ரவரி 4, 1612
அமட்ரைஸ், இத்தாலி (Amatrice, Italy)

*ஏற்கும் சமயம் :
ரோமன் கத்தோலிக்க திருச்சபை (Roman Catholic Church)

*புனிதர் பட்டம் : 1746
திருத்தந்தை பதினான்காம் பெனடிக்ட் (Pope Benedict XIV)

லியோநெஸ்சாவின் புனிதர் ஜோசஃப், ரோமன் கத்தோலிக்க திருச்சபையின் புனிதரும் மறைசாட்சியுமாவார். இத்தாலியின் இருபது பிரதேசங்களில் ஒன்றான மத்திய தீபகற்ப பகுதியான (Central Peninsular Section), அந்நாளைய "ஊம்ப்ரியா" (Umbria) (தற்போதைய "லாஸியோ" - Lazio) எனும் பிரதேசத்தின் "லியோநெஸ்சா" எனும் சிறு நகரில் பிறந்தவர் ஆவார். தமது குழந்தை பருவத்தில் இருந்தே அவர் மனதில் ஒரு குறிப்பிடத்தக்க சமய வளைவைக் காட்டினார் என்று கூறப்படுகிறது. அவர், அடிக்கடி சிறு திருப்பலிபீடங்களை எழுப்பவும், அவற்றின் முன்பு ஜெபத்தில் அதிக நேரம் செலவழிக்கவும் பயன்படுத்தினார். பெரும்பாலும் அவர் தம் தோழர்களையும் ஒன்றுசேர்த்து, அவர்களையும் அவருடன் ஜெபம் செய்ய தூண்டுவார்.

ஒரு சிறுவனாக, வெள்ளிக்கிழமைகளில் தூய இரட்சகரின் தோழமைக் கூட்டுறவுக்காக ஒரு ஒழுங்குமுறை கட்டமைப்பை ஏற்படுத்தினார். இவருடைய கல்வி கற்றலை ஏற்றிருந்த இவரது தாய்மாமன், தக்க வயதில் இவருக்கு திருமணம் முடித்து வைக்க காத்திருந்தார். ஆனால், தமது பதினாறு வயதில் விஷ ஜூரத்தால் பாதிக்கப்பட்ட ஜோசஃப், அதிலிருந்து மீண்டபோது, தமது பாதுகாவலரான தாய்மாமனிடம் இதுபற்றி சம்பாஷிக்காமலே "ஃபிரான்சிஸ்கன் சபையின் சீர்திருத்த சபையான கபுச்சின்" (Capuchin reform of the Franciscan Order) சபையில் இணைந்தார். அவர் தமது துறவற "புகுமுகப் பயிற்சியை" (Novitiate) "அசிசியின்" (Assisi) அருகிலுள்ள "கர்செரெல்லா" (Carcerelle) எனுமிடத்திலுள்ள துறவு மடத்தில் செய்தார்.

ஒரு துறவியாக, அவர் தாமிருந்த விரதங்களில் குறிப்பிடத்தக்கவராயிருந்தார்.

1587ம் ஆண்டு, ஜோசஃப், தமது சபையின் தலைவரால் அந்நாளைய "ரோமன்/ பைசான்டைன்" (Roman/Byzantine) தலைநகரான "காண்ஸ்டன்டினோபில்" (Constantinople) நகரில் சிறைபிடிக்கப்பட்டிருந்த கிறிஸ்தவர்களுக்கு ஊழியம் செய்வதற்காக அங்கே அனுப்பினார். "காண்ஸ்டன்டினோபில்" வந்து சேர்ந்த அவரும் அவரது தோழர்களும், "கலாட்டா" (Galata district) மாவட்டத்தில், "பெனடிக்டைன்" (Benedictine monks) துறவியரால் கைவிடப்பட்ட ஒரு வீட்டில் தங்கினார்கள். உண்மையில் அது, "தூய பெனடிக்ட் உயர்நிலை பள்ளி" (St. Benedict high school) ஆகும். அங்கே தங்கியிருந்த துறவியரின் வறுமை நிலையானது உள்ளூர் துருக்கியரின் கவனத்தை ஈர்த்தது. அவர்கள் குழுக்களாக புதிய மிஷனரிகளைக் காணச்சென்றனர். "ஓட்டோமான் பேரரசின்" கடற்படையின் (Ottoman Empire's Navy) சேனலில் உள்ளே சிறைபிடிக்கப்பட்டிருந்த கிறிஸ்தவர்களிடம் அவர் ஊழியம் செய்வதில் மிகவும் கவனமாக இருந்தார். ஒவ்வொரு நாளும் அவர் பிரசங்கிப்பதற்காக நகரத்திற்குள் சென்றார். ஒருநாள், அவர் கைது செய்யப்பட்டு சிறையில் தள்ளப்பட்டார். ஆனால், "வெனிஷியன்" (Venetian agent) முகவர் தலையீட்டின் பேரில் விடுதலை செய்யப்பட்டார்.

கடைசியில். "ஒட்டோமோ" பேரரசின் (Ottoman Empire) பேரரசர், "சுல்தான் மூன்றாம் முராத்" என்பவருக்கு முன்னர் பிரசங்கிக்க அரண்மனையில் நுழைய முயன்றார். ஆனால் பிடிபட்ட அவர், மரண தண்டனைக்கு ஆளானார். கறிக் கடைகளில் தோலுரிக்கப்பட்ட ஆடுகளை தொங்கவிடுவதைப் போல, அவரது வலது கை மற்றும் காலில் இரும்பு கொக்கிகளால் குத்தி மூன்று நாட்கள் தொங்க விடப்பட்டிருந்தார். அதிசயிக்கும் விதமாக, அவர் ஒரு தேவதூதனால் விடுவிக்கப்பட்டதாக புராணங்கள் கூறுகின்றன.

இத்தாலிக்குத் திரும்பிய அவர், தம்முடன் கிரேக்க பேராயர் ஒருவரையும் உடன் அழைத்து வந்தார். ரோம் வந்து சேர்ந்ததும், அப்பேராயர், திருத்தூதுப் பணிகளுக்கு ஏற்றுக்கொள்ளப்பட்டு, திருச்சபைக்கு ஒப்புரவாக்கப்பட்டார். ஜோசப் இப்போது தன்னுடைய சொந்த மாகாணத்தில் வீட்டு ஊழியத்திற்கான பணிகளை எடுத்துக்கொண்டார். சில சமயங்களில் ஒரு நாளில், ஆறு அல்லது ஏழு முறை பிரசங்கித்தார். 1600ம் யூபிலி ஆண்டில், மத்திய இத்தாலியின் "ஊம்ப்ரியா" (Umbria) மாகாணத்தின் "டெர்னி" (Province of Terni) பிராந்தியத்திலுள்ள "ஒற்றிகோலி" (Otricoli) எனும் சிறு நகரத்தில், தவக்கால மறையுரைகளை நிகழ்த்தினார். ரோம் நகரம் பயணிக்கும் யாத்திரிகர்கள் அந்நகரம் வழியாகவே பயணித்தனர். ஜோசஃப், அவர்களுக்கு உணவு மற்றும் நீர் ஆகியன ஏற்பாடு செய்து கொடுத்தார். யாத்திரீகர்களின் தலைமுடி வெட்டியும், அவர்களது ஆடைகளை துவைத்தும் கொடுத்தார். "பெரூஜியா" (Province of Perugia) பிராந்தியத்தின் "டோடி" (Todi) எனும் நகரில் உள்ள ஓர் சிறு நிலத்தில் தமது கைகளாலேயே விவசாயம் செய்தார். அங்கே விளைந்தவற்றை ஏழைகளுக்கு கொடுத்தார்.

1612ம் ஆண்டு, மத்திய இத்தாலியின் (Central Italy) "வடக்கு லாசியோ" (Northern Lazio) மாகாணத்தின் "ரியேட்டி" பிராந்தியத்திலுள்ள (Province of Rieti) "அமட்ரைஸ்" (Amatrice) எனும் நகரில் ஜோசஃப் மரணமடைந்தார்.
 

துன்பங்கள் தோன்றிடும் வேளையிலே நீ துணை தந்து காத்திட வேண்டுமம்மா