Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

இயேசுவின் வழியினிலே

 

✠ புனிதர் இஸபெல் ✠(St. Isabelle of France)
   
நினைவுத் திருநாள் : (பெப்ரவரி / Fev- 26)
✠ புனிதர் இஸபெல் ✠(St. Isabelle of France)

  எளிய கிளாரா துறவுமட நிறுவனர் :
(Founder of Poor Clare Monastery of Longchamp)

பிறப்பு : மார்ச் 1225
பாரிஸ், ஃபிரான்ஸ்
(Paris, France)

இறப்பு : பிப்ரவரி 23, 1270 (வயது 45)
லாங்ச்சம்ப், பேஸ் டி ஃபிரான்ஸ், ஃபிரான்ஸ் இராச்சியம்
(Longchamp, Pays de France, Kingdom of France)

ஏற்கும் சமயம் :
ரோமன் கத்தோலிக்க திருச்சபை
(Roman Catholic Church)

முக்திப்பேறு பட்டம் : கி.பி. 1521
திருத்தந்தை பத்தாம் லியோ
(Pope Leo X)

புனிதர் பட்டம் : கி.பி. 1696
திருத்தந்தை பன்னிரெண்டாம் இன்னொசண்ட்
(Pope Innocent XII)

நினைவுத் திருநாள் : ஃபெப்ரவரி 26

பாதுகாவல் :
நோயுற்றோரின் பாதுகாவலர்
(Patroness of the Sick)

இஸபெல், ஃபிரான்ஸ் நாட்டும் அரசன் "எட்டாம் லூயிஸ்" (Louis VIII of France) மற்றும் பிரான்சின் அரசி "பிளான்ச்" (Blanche of Castile) ஆகியோரின் மகளாவார். இவர், ஃபிரான்ஸின் அரசன் "ஒன்பதாம் லூயிஸ்" (King Louis IX of France) (புனிதர் லூயிஸ் - Saint Louis) மற்றும் "போய்ட்டியர்ஸ்" பிரபுவான "அல்ஃபோன்ஸோ" (Alfonso, Count of Poitiers) ஆகியோரின் இளைய சகோதரியும், சிசிலியின் அரசன் "முதலாம் சார்லஸின்" (King Charles I of Sicily) தமக்கையுமாவார். இவர், கி.பி. 1256ம் ஆண்டு, தற்போதைய "போய்ஸ் டி போலோன்" (Bois de Boulogne) என்றழைக்கப்படும் "ரோவரே வனப்பகுதியில் (Forest of Rouvray) "எளிய கிளாரா மடாலயத்தை" (Poor Clare monastery) நிறுவினார். இஸபெல், தன் கன்னித்தன்மையையும் தமது வாழ்நாள் முழுவதையும் கடவுளுக்கு மட்டுமே சொந்தமாக அர்ப்பணித்தார். ஃபிரான்சிஸ்கன் சபையினரால் (Franciscan Order) புனிதராக மதிக்கப்படும் இவரது நினைவுத் திருநாள், ஃபெப்ரவரி மாதம் 26ம் நாளாகும்.

இவரது இரண்டு வயதிலேயே இவரது தந்தையார் மரித்துப் போகவே, இவரது கல்வியில் இவரது தாயாரே கவனம் கொண்டார். இலத்தீன் மற்றும் வட்டார மொழியையும் கற்றறிந்த அவர், மேலும் தற்காப்புக் கதைகள் மற்றும் பக்தி நூல்களையும் வாசித்து அனுபவித்தார். எம்பிராய்டரி போன்ற பெண்களுக்கான பாரம்பரிய ஆடைகள் வடிவமைப்பதில் ஆர்வம் கொண்டிருந்த இவர், குருத்துவ ஆடைகளை மேம்படுத்தும் வேலை செய்வதில் சிறப்பு மகிழ்ச்சி அடைந்தார். குழந்தைப் பருவத்திலேயே ஆன்மீக வழிகாட்டுதல்களை வேண்டிய இவர், ஃபிரான்சிஸ்கன் சபையினரின் வழிகாட்டுதல்களின்படி மேலும் கடவுள் பக்தியுள்ளவரானார். திருத்தந்தை நான்காம் இன்னொசன்ட்டின் (Pope Innocent IV) அனுமதியுடன், சில ஃபிரான்சிஸ்கன் குருக்களை தமது சிறப்பு ஒப்புரவாளர்களாகக் கொண்டிருந்தார். தமது அரச சகோதரர்களைவிட ஃபிரான்சிஸ்கன் சபையினரிடம் அதிக அன்பு கொண்டிருந்தார்.

கி.பி. 1227ம் ஆண்டு, மார்ச் மாத வெண்டோம் உடன்படிக்கையின்படி (Treaty of Vendôme), "லூஸிக்னான் அரசனான பத்தாம் ஹக்" (Hugh X of Lusignan) என்பவரின் மூத்த மகனும், வாரிசுமான "ஹக்" (Hugh) என்பவருடன் திருமணம் ஒப்பந்தம் செய்யப்பட்டது. இவர்களது திருமண ஒப்பந்தம் கி.பி. 1230ம் ஆண்டு, கையழுத்தானது. ஆயினும், அவர் இறுதிவரை ஒரு கன்னியாஸ்திரியாக மாறவில்லை எனினும், அவரது நிலையான உறுதியான முடிவு காரணமாக திருமணத்தை மறுத்துவிட்டார். பின்னர், திருத்தந்தை நான்காம் இன்னொசன்ட் (Pope Innocent IV) உள்ளிட்ட பலரது வற்புறுத்தல்கள் இருந்தும், தூய ரோமப் பேரரசர் (Holy Roman Emperor) இரண்டாம் ஃபிரடெரிக்ட்டின் (Frederick II) மகனும், ஜெர்மனியின் அரசனுமான "நான்காம் கோன்ராட்" (Conrad IV of Germany) என்பவரையும் திருமணம் செய்ய தீர்க்கமாக மறுத்துவிட்டார்.

இஸபெல், எளிய கிளாரா மடாலயத்தை (monastery of Poor Clares) நிறுவ ஆர்வம் காட்டியதால், அவரது சகோதரர் அரசன் லூயிஸ் (King Louis) கி.பி. 1255ம் ஆண்டு, தேவையான நிலம் ஆர்ஜிதம் செய்ய தொடங்கினார். கி.பி. 1256ம் ஆண்டு, ஜூன் மாதம், பத்தாம் தேதி, மடாலய தேவாலயத்தின் முதல் கல் நடப்பட்டது. புனித கிளாராவின் சட்டதிட்டங்களை (Rule of St. Clare) அடிப்படையாகக் கொண்ட சட்டதிட்டங்களை இந்த துறவு மடாலயத்துக்காக "ஃபிரான்சிஸ்கன் மேன்சூட்டஸ்" (Franciscan Mansuetus) வடிவமைத்தனர். இதற்கான அங்கீகாரத்தை கி.பி. 1259ம் ஆண்டு, ஃபெப்ரவரி மாதம், 2ம் தேதி, திருத்தந்தை நான்காம் அலெக்ஸ்சாண்டர் (Pope Alexander IV) அளித்தார். பின்னர், 1259ம் ஆண்டு தொடக்கத்தில் அவர்களது மடாலயம் தயாரானது. இந்த மடாலயம், "ஆசிர்வதிக்கப்பட்ட கன்னிமரியாளின் மனத்தாழ்ச்சியின் மடாலயம்" (Monastery of the Humility of the Blessed Virgin) என பெயரிடப்பட்டது.

சட்டதிட்டங்களின்படி, இம்மடாலயத்தின் அருட்சகோதரியர், "மிகவும் ஆசிர்வதிக்கப்பட்ட கன்னி மரியாளின் ஊழியர்களின் எளிய சபை சகோதரிகள்" (Sisters of the humble order of servants of the most Blessed Virgin Mary) என்று அழைக்கப்பட்டனர். இச்சபையின் அருட்கன்னியர், ஃபிரான்சிஸ்கன் சபைக்கு (Friars Minor) உட்பட்டிருந்தனர். முதல் கன்னியாஸ்திரிகளில் சிலர், "ரெய்ம்ஸ்" (Reims) நகரிலுள்ள எளிய கிளாரா மடாலயத்திலிருந்து (Poor Clare monastery) வந்திருந்தனர்.

இஸபெல், ஒருபோதும் இவர்களது சமூகத்தில் இணைந்தது கிடையாது. ஆனால், மடாலயத்திலேயே கன்னியாஸ்திரிகளின் அறைகளிலிருந்து வேறுபட்டிருந்த ஒரு தனி அறையில் தனிமையில் தங்கியிருந்தார். அவருடைய வாழ்க்கையில் அவர் சில வியாதிகளால் பாதிக்கப்பட்டிருந்தார். அதுவே அவரை கன்னியாஸ்திரிகளின் வாழ்க்கை விதிகளை பின்பற்ற தடுத்தது. அவர் மடாதிபதியாக மறுத்துவந்தார். இதன் காரணமாக, தமது செல்வத்தையும் வளங்களையும் தக்கவைத்துக் கொள்ள இது அனுமதித்ததால், ஏழைகளுக்கு ஆதரவாகவும் தொடர்ந்து கொடுக்கவும் உதவவும் அவரால் முடிந்தது. தமது பெரும்பாலான நாட்களில், மெளனமாக இருக்கும் ஒரு ஒழுக்கத்தை வைத்திருந்தார்.

கி.பி. 1270ம் ஆண்டு, ஃபெப்ரவரி மாதம், 23ம் நாளன்று, "லோங்க்ச்சம்ப்" (Longchamp) நகரில் இஸபெல் மரித்தார். மடாலயத்தின் ஆலயத்தில் இவர் அடக்கம் செய்யப்பட்டார்.

 
 

துன்பங்கள் தோன்றிடும் வேளையிலே நீ துணை தந்து காத்திட வேண்டுமம்மா