Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

இயேசுவின் வழியினிலே

 

✠ புனிதர் ஏத்தல்பெர்ட் ✠ (St. Ethelberht of Kent)
   
நினைவுத் திருநாள் : பெப்ரவரி 24
  ✠ புனிதர் ஏத்தல்பெர்ட் ✠ (St. Ethelberht of Kent)

*கென்ட் நாட்டின் அரசன் : (King of Kent)

*பிறப்பு : கி.பி. 6ம் நூற்றாண்டு
கென்ட், இங்கிலாந்து

*இறப்பு : ஃபெப்ரவரி 24, 616
இங்கிலாந்து

புனித ஏத்தல்பெர்ட், கிறிஸ்தவ மதத்திற்கு மாறிய முதல் ஆங்கிலேய அரசனாவார். ஆங்கிலேய அரசரான "எயோர்மென்ரிக்" (Eormenric) அவர்களுக்குப் பின்னர் அரசாளும் உரிமையை அவரது மகனான ஏத்தல்பெர்ட் பெற்றார். இவரது ஆட்சியின்போதுதான் "கென்ட்" (Kent) மாநிலத்தில் முதன்முதலாக பணப்பரிமாற்றம் நிகழத் தொடங்கியது. இது, "ஆங்கிலோ - சாக்ஸன்" (Anglo-Saxon) படையெடுப்பின் பின்னர் தொடங்கியது. கிறிஸ்தவ மதத்தை நிறுவுவதில் இவர் ஆற்றிய பெரும்பங்கின் காரணமாக, பின்னாளில் இவர் கிறிஸ்தவ புனிதராக மதிக்கப்படுகின்றார்.

"ஃப்ராங்க்ஸ்" (Franks) நாட்டு அரசன் "சாரிபெர்ட்டின்" கிறிஸ்தவ மகளான "பெர்த்தாவை" (Bertha) ஏத்தல்பெர்ட் திருமணம் செய்தார். பெர்த்தாவின் செல்வாக்கினால் திருத்தந்தை முதலாம் கிரகொரி (Pope Gregory I) "அகுஸ்தினாரை" (Augustine) ரோம் நகரிலிருந்து மறை பரப்பாளராக அனுப்பினார்.

597ல் அகுஸ்தினார் சுமார் நாற்பது துறவியருடன் "கிழக்கு கென்ட்" பிராந்தியத்தில் வந்து இறங்கினார். அவர் வந்து சேர்ந்த சிறிது காலத்திலேயே ஏத்தல்பெர்ட் கிறிஸ்தவராக மதம் மாறினார். அவரது இராச்சியத்தில் எண்ணற்ற தேவாலயங்கள் கட்டப்பட்டன. பரவலாக கிறிஸ்தவ மத மாற்றம் நிகழ்ந்தது. "காண்டர்பரி" (Canterbury) மாநிலத்தில் நிலங்களுடன் தேவாலயம் கட்டி கொடுத்தார். அவர் ஆரம்பித்து வைத்த இப்பணி, இறுதியில் "ஆங்கிலிக்கன் சமூகம்" (Anglican Communion) உருவாக காரணியானது.

ஆதியில், பிரிட்டன் நாட்டவர் ரோமன் சட்டங்களின்படி (Roman rule) கிறிஸ்தவர்களாக மதம் மாற்றம் செய்யப்பட்டனர். "ஆங்கிலோ - சாக்ஸன்" (Anglo-Saxon) படையெடுப்பு, பிரிட்டன் திருச்சபையை ஐரோப்பிய திருச்சபையிடமிருந்து நூற்றாண்டுகளுக்கு பிரித்து வைத்தது. ரோம ஆட்சியாளர்கள், பிரிட்டனில் தமது பிரதிநிதிகளோ, அதிகாரமோ இல்லாத காரணத்தாலும், பிரிட்டன் திருச்சபையைப் பற்றி ஏதும் அறியாத காரணத்தாலும் பிரிட்டன் நாட்டின் பழக்க வழக்கங்களில் ஏற்பட்ட பிளவுகளை அறியமுடியாமல் போனது.

இருப்பினும், ஏத்தல்பெர்ட் ரோம திருச்சபைகளைப் பற்றி தமது "ஃபிராங்கிஷ்" மனைவியான (Frankish wife) "பெர்த்தா" (Bertha) மூலம் சிறிது அறிந்து வைத்திருந்ததாலும் "பெர்த்தா" மூலம் "லியுதர்ட்" (Liudhard) என்ற கத்தோலிக்க ஆயரை அழைத்துவந்து "புனித மார்ட்டின்" (St Martin ) தேவாலயத்தை கட்டினார்.

24 ஃபெப்ரவரி 616 அன்று ஏத்தல்பெர்ட் மரணமடைந்தார். ரோம மறைசாட்சிகளின் (Edition 2004 of Roman Martyrology) 2004ம் பதிப்பின்படி, ஏத்தல்பெர்ட் 24 ஃபெப்ரவரி அன்று பட்டியலிடப்பட்டுள்ளார்.

 
 

துன்பங்கள் தோன்றிடும் வேளையிலே நீ துணை தந்து காத்திட வேண்டுமம்மா