Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

இயேசுவின் வழியினிலே

 

✠ புனிதர் (சூசையப்பரின்) இகிடியோ மரியா ✠ (St. Egidio Maria of Saint Joseph)
   
நினைவுத் திருநாள் : பெப்ரவரி 13
   ✠ புனிதர் (சூசையப்பரின்) இகிடியோ மரியா ✠ (St. Egidio Maria of Saint Joseph)

*இத்தாலிய ஒப்புக்கொள்ளப்பட்ட அருட் பணியாளர் :
(Italian professed religious)

*பிறப்பு : நவம்பர் 16, 1729
டரன்ட்டோ, அபுலியா, நேப்பிள்ஸ் அரசு
(Taranto, Apulia, Kingdom of Naples)

*இறப்பு : ஃபெப்ரவரி 7, 1812 (வயது 82)
நேப்பிள்ஸ், இரண்டு சிசிலிக்களின் அரசு
(Naples, Kingdom of the Two Sicilies)

*ஏற்கும் சமயம் :
ரோமன் கத்தோலிக்க திருச்சபை (Roman Catholic Church)

*முக்திபேறு பட்டம் : ஃபெப்ரவரி 5, 1888
திருத்தந்தை பதின்மூன்றாம் லியோ (Pope Leo XIII)

*புனிதர் பட்டம் : ஜூன் 2, 1996
திருத்தந்தை இரண்டாம் ஜான் பால் (Pope John Paul II)

*பாதுகாவல் :
டரன்ட்டோ (Taranto)
பாதிக்கப்பட்ட மக்கள் (Ill people)
சமுதாயத்தில் இருந்து ஒதுக்கப்பட்டவர் (Outcast people)
சிறுவர்கள் (Children)
வேலை தேடும் மக்கள் (People looking for work)

"ஃபிரான்ஸிஸ்கோ போஸ்டில்லோ" (Francesco Postillo) எனும் இயற்பெயர் கொண்ட புனிதர் (சூசையப்பரின்) இகிடியோ மரியா, "ஃபிரான்சிஸ்கன் இளம் துறவியர்" (Order of Friars Minor/ Order of Franciscans) சபையைச் சேர்ந்த ஒரு இத்தாலிய ஒப்புக்கொள்ளப்பட்ட அருட் பணியாளர் (Italian professed religious) ஆவார்.

"போஸ்டில்லோ" முறையான கல்வி பெறாத காரணத்தால், அவரால் குருவாக குருத்துவ அருட்பொழிவு பெற இயலவில்லை. ஆயினும் இவர் ஃபிரான்ஸிஸ்கன் சபையின் சகோதரர் ஆவார். இத்தாலியின் தெற்கு பிராந்தியத்திலுள்ள நகரங்களான "டரன்ட்டோ" மற்றும் "நேப்பிள்ஸ்" (Taranto and Naples) ஆகிய இடங்களிலுள்ள ஏழைகள் மற்றும் நோயாளிகளை பாதுகாத்து, கவனித்து, சேவை செய்வதிலும், இவர் தம்மை அர்ப்பணித்துக்கொண்டதால் மக்களிடையே நன்கு அறியப்பட்டவராக இருந்தார். அதனாலேயே மக்கள் இவருக்கு "நேப்பிள்சின் ஆறுதலளிப்பவர்" (Consoler of Naples) என்ற புனைப்பெயர் இட்டு அழைத்தனர்.

வாழ்க்கை :
"ஃபிரான்ஸிஸ்கோ போஸ்டில்லோ" (Francesco Postillo) 1729ம் ஆண்டு, நவம்பர் மாதம், 16ம் நாளன்று, "டரன்ட்டோ" (Taranto) நகரில் பிறந்தார். இவரது தந்தையார் பெயர், "கட்டால்டோ போஸ்டில்லோ" (Cataldo Postillo) ஆகும். தாயாரின் பெயர், "கிரேஸியா" (Grazia Procaccio) ஆகும். இவரது பெற்றோருக்கு பிறந்த நான்கு குழந்தைகளில் இவர் மூத்தவர் ஆவார். இவரது திருமுழுக்குப் பெயர், "ஃபிரான்ஸிஸ்கோ டொமெனிக்கோ அன்டோனியோ பாஸ்குயேல் போஸ்டில்லோ" (Francesco Domenico Antonio Pasquale Postillo) ஆகும்.

1747ம் ஆண்டும், போஸ்டில்லோவின் தந்தையார் மரித்ததால், தமது விதவைத் தாயாரையும், தமது இளைய சகோதரர்களையும் பராமரிப்பதற்காக பணியொன்றை தேட வேண்டிய நிர்ப்பந்தத்துக்கு உள்ளானார். வெகு காலம் வரை இவர் ஒரு கயிறு திரிக்கும் (Rope maker) பணி செய்தார். முறையான கல்வி இல்லாத காரணத்தால் குருத்துவம் பெற இயலாததால் "நேப்பிள்ஸ்" (Naples) நகரிலுள்ள "ஃபிரான்சிஸ்கன் இளம் துறவியர் சபையின்" "ஒப்புக்கொள்ளப்பட்ட அருட் பணியாளராக" (Professed Religious) பணியாற்றினார். சபையில் சேர்வதற்காக 1754ம் ஆண்டு, ஃபெப்ரவரி மாதம், 27ம் நாளன்று விண்ணப்பித்த இவர், சரியாக ஒரு வருடம் கழித்து, 1755ம் ஆண்டு, ஃபெப்ரவரி மாதம், 28ம் தேதியன்று, "கலடோன்" (Galatone) என்னுமிடத்திலுள்ள "புனித மரியாளின்" (Convent of Santa Maria delle Grazie) பள்ளியில் பணியின் தூய்மையைக் காக்கும் பிரமாணத்தை எடுத்தார். இவர், "கடவுளின் அன்னையின் இகிடியோ" ("Egidio of the Mother of God") எனும் பெயரை தமது ஆன்மீக பெயராக ஏற்றுக்கொண்டார். ஆனால், பின்னர் அதனை "புனிதர் சூசையப்பரின் இகிடியோ மரியா" (Egidio Maria of Saint Joseph) என்று மாற்றிக்கொண்டார்.

தமது பள்ளியின் சுமை தூக்குபவராகவும், வாயில் காப்பவராகவும், பணியாற்றிய போஸ்டில்லோ, தொழு நோயாளிகளுக்காக சமையல் பணியும் செய்தார். அடிக்கடி தமது பள்ளி வளாகத்தை விட்டு வெளியே செல்லும் வழக்கமுள்ள இவர், ஒதுக்கப்பட்ட மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட மக்களுக்காக இரந்து தானமாக பொருள் பெற்று வந்தார்.

இடுப்பு கீல் வாயு, நீர்க்கோப்பு மற்றும் சுவாசகாசம் அல்லது ஆஸ்துமா நோய்களால் பாதிக்கப்பட்டிருந்த போஸ்டில்லோ 1812ம் ஆண்டும், நேப்பிள்ஸ் நகரில் மரணமடைந்தார்.
 

துன்பங்கள் தோன்றிடும் வேளையிலே நீ துணை தந்து காத்திட வேண்டுமம்மா