✠ புனிதர் பார்பட்டஸ் ✠
(St. Barbatus of Benevento) |
|
|
|
நினைவுத் திருநாள் :
பெப்ரவரி
19 |
✠ புனிதர் பார்பட்டஸ் ✠
(St. Barbatus of Benevento)
*பெனவெண்ட்டோ நகர் ஆயர் :
(Bishop of Benevento)
*பிறப்பு : 610
வண்டனோ, செர்ரேட்டோ சன்னிடா, இத்தாலி
(Vandano, Cerreto Sannita, Italy)
*இறப்பு : ஃபெப்ரவரி 19, 682
பெனவெண்ட்டோ, இத்தாலி
(Benevento, Italy)
*ஏற்கும் சமயம் :
ரோமன் கத்தோலிக்க திருச்சபை
(Roman Catholic Church)
கிழக்கு மரபுவழி திருச்சபை
(Eastern Orthodox Church)
*பாதுகாவல் :
பெனவெண்ட்டோ
(Benevento)
புனிதர் பார்பட்டஸ், 663ம் ஆண்டு முதல், 682ம் ஆண்டு வரை
"பெனவெண்ட்டோ" மறை மாவட்டத்தின் (Bishop of Benevento) ஆயராக
பணியாற்றியவர் ஆவார். ஆயர் "ஹில்டேர்ப்ரண்ட்" (Hildebrand) என்பவருக்குப்
பிறகு ஆயராக பதவியேற்ற இவர், "மோனோதெளிட்டஸ்" (Monothelites)
என்பவ்ருக்கெதிராக திருத்தந்தை அகதோ"வால் (Pope Agatho) 680 மற்றும்
681ம் ஆண்டுகளில் நடத்தப்பட்ட மூன்றாம் கான்ஸ்டண்டினோபில் பேரவையில்
(Third Council of Constantinople) உதவிகள் புரிய அழைக்கப்பட்டு
அதில் பங்கேற்றார்.
பின்னாளில் எழுதப்பட்ட இவரது புனித வாழ்க்கையின்படி, இவர்
கிறிஸ்தவ கல்வி கற்றார். சிறந்த வகையில் கிறிஸ்தவ நூல்களைக்
கற்பதில் காலத்தை செலவிட்டார். விரைவிலேயே குருத்துவ
அருட்பொழிவு பெற்ற இவர், உள்ளூர் ஆயரால் மறை போதகராக
நியமிக்கப்பட்டார்.
அக்காலத்தில், பெனவெண்ட்டோ நகர மக்கள் "பாகனிசம்" (Paganism)
என்று சொல்லப்படும் பல தெய்வ வணக்கம் செலுத்தும் வழக்கம்
கொண்டவர்களாயிருந்தனர். அவர்கள் தங்க விரியன் பாம்பு மற்றும்
உள்ளூர் மரம் ஒன்றினை பூஜிக்கும் வழக்கம் கொண்டிருந்தனர்.
இவற்றை பார்பட்டஸ் தீவிரமாக எதிர்த்தார். உள்ளூர் "லொம்பார்ட்"
(Lombard) இன இளவரசனான "முதலாம் ரோமுவால்ட்" (Romuald I) உட்பட
இவ்வழக்கங்களில் ஈடுபட்டிருந்தனர். பார்பட்டஸ் தொடர்ந்து தமது
மறை போதனைகளை செய்துகொண்டிருந்தார்.
நகர மக்களிடம், தாங்கள் இப்பழக்க வழக்கங்களை
கைவிடவில்லையெனில், பெரும் சோதனைகளை சந்திக்க நேரிடும்
என்றும், கிழக்கு ரோமப் பேரரசன் இரண்டாம் காண்ஸ்டன்ஸ் (East
Roman Emperor Constans II) மற்றும் அவரது இராணுவத்தினரால்
துன்புருவீர்கள் என்றும் பார்பட்டஸ் எச்சரித்தார். அவர்
தீர்க்கதரிசனமாக முன்மொழிந்தது போலவே கிழக்கு ரோமப் பேரரசனின்
படைகள் பெனவெண்ட்டோ நகரை முற்றுகையிட்டன. பல்வேறு கஷ்ட
நஷ்டங்களால் துன்புற்ற மக்கள், பார்பட்டஸ் எதிர்த்த பழக்க
வழக்கங்கள் அத்தனையையும் துறந்தனர். அவர்கள் பூஜித்த உள்ளூர்
மரத்தை பார்பட்டஸ் வெட்டி வீழ்த்தினார். தங்க விரியன் பாம்பினை
தீயிலிட்டு உருக்கினார். பின்னர், பார்பட்டஸ் முன்மொழிந்தபடியே
"காண்ஸ்டன்ஸ்" படைகள் தோல்வியுற்று பின்வாங்கின.
பெனவெண்ட்டோ நகர ஆயராக இருந்த "ஹில்டேப்ரென்ட்" (Hildebrand)
"காண்ஸ்டன்ஸ்" படைகளின் முற்றுகையின்போது மரணமடைந்தார்.
முற்றுகையாளர்கள் பின்வாங்கிச் சென்றதன் பின்னர், 633ம் ஆண்டு,
மார்ச் மாதம், பத்தாம் நாள், பார்பட்டஸ் ஆயராக அருட்பொழிவு
செய்யப்பட்டார். இந்த சந்தர்ப்பத்தினை சரியாக
பயன்படுத்திக்கொண்ட பார்பட்டஸ், உள்ளூர் "லொம்பார்ட்"
(Lombard) இன இளவரசனும் உள்ளூர் மக்களும் மறைத்து வைத்திருந்த
"பாகனிச" (Paganism) பொருட்கள் அனைத்தையும் அழித்தார்.
திருத்தந்தை அகதோ"வால் (Pope Agatho) 680 மற்றும் 681ம்
ஆண்டுகளில் நடத்தப்பட்ட "மூன்றாம் கான்ஸ்டண்டினோபில்
பேரவையில்" (Third Council of Constantinople) உதவிகள் புரிந்த
இவர், பேரவை முடிந்த சிறிது காலத்திலேயே, திருத்தந்தை இரண்டாம்
லியோவின் (Pope St. Leo II) ஆட்சி காலத்தில், தமது சுமார்
எழுபது வயதில் மரணமடைந்தார்.
|
|
|