✠ புனிதர் அபொல்லோனியா ✠ (St. Apollonia) |
|
|
|
நினைவுத் திருநாள் :
பெப்ரவரி
12 |
✠ புனிதர் அபொல்லோனியா
✠ (St. Apollonia)
*கன்னியர்/ மறை சாட்சி : (Virgin
& Martyr)
*பிறப்பு : இரண்டாம் நூற்றாண்டு
*இறப்பு : 249
அலெக்சாண்ட்ரியா, எகிப்து (Alexandria, Egypt)
*ஏற்கும் சமயம் :
ரோமன் கத்தோலிக்க திருச்சபை (Roman Catholic Church)
காப்டிக் மரபுவழி திருச்சபை (Coptic Orthodox Church)
கிழக்கு மரபுவழி திருச்சபை (Eastern Orthodox Churches)
ஓரியண்டல் மரபுவழி திருச்சபை (Oriental Orthodox Churches)
*பாதுகாவல் :
பல் மருத்துவர்கள் (Dentists)
பல் சம்பந்தமான பிரச்சினைகள் (Tooth problems)
அச்டேர்போஸ், பெல்ஜியம் (Achterbos, Belgium)
அரிக்கியா, இத்தாலி (Ariccia, Italy)
குக்காரோ மோன்ஃபெர்ரடோ, இத்தாலி (Cuccaro Monferrato, Italy)
புனிதர் அபொல்லோனியா, அலெக்சாண்ட்ரியா (Alexandria) நாட்டில்,
"ரோமானிய பேரரசின் பேரரசர்" (Emperor of the Roman Empire)
"டேசியஸ்" (Gaius Messius Quintus Trajanus Decius) என்பவருடைய
ஆட்சிகாலத்தில், கிறிஸ்தவர்களுக்கெதிரான கலகத்தின்போது, உள்ளூர்
கிளர்ச்சியாளர்களால் துன்புறுத்தப்பட்ட கிறிஸ்தவ கன்னியர்களில்
ஒருவர் ஆவார். புராணங்களின்படி, துன்புறுத்தலின்போது அவருடைய
பற்கள் வலுக்கட்டாயமாக பிடுங்கப்பட்டன. இதன்காரணமாக பல் மருத்துவம்,
பல் நோய்களால் துன்புறுவோர் மற்றும் இன்னபிற பல் பிரச்சினைகளால்
துன்புறுவோருக்கு இவர் பாதுகாவலராவார்.
கிறிஸ்தவ வரலாற்றாசிரியர்களின் கூற்றின்படி, "பேரரசன் பிலிப்"
(Emperor Philip the Arab) ஆட்சியின் கடைசி ஆண்டில், ஒரு அலெக்சாண்ட்ரிய
கவிஞர், அலெக்சாண்ட்ரியாவில் கிறிஸ்தவர்களுக்கெதிரான கலகங்கள்
உச்சத்தை எட்டும் என்றும் நாடே இரத்தக்களரியாகும் என்றும்
தீர்க்கதரிசனம் சொன்னார். அதன்படியே கிறிஸ்தவர்களுக்கெதிரான
துன்புறுத்தல்கள் நிகழ்ந்தன. அதனை ஆட்சியாளர்களாலேயே அடக்க இயலாமல்
போனது.
அலெக்சாண்ட்ரியாவின் ஆயர் "டயோனிஸிஸ்" (Dionysius, Bishop of
Alexandria) அந்தியோக்கியாவின் ஆயர் "பாபியசுக்கு" (Fabius,
Bishop of Antioch) எழுதிய கடிதமொன்றில் தமது மக்கள் எவ்வாறெல்லாம்
துன்புறுத்தப்பட்டார்கள், எவ்வாறெல்லாம் அவர்களது வீடுகள் உள்ளிட்ட
உடைமைகள் சூறையாடப்பட்டன என்பவற்றை விளக்கி எழுதியிருந்தார்.
பெண் திருத்தொண்டரான அபொல்லோனியாவை பிடித்து பெண்ணென்றும் பாராமல்
அடித்து துன்புறுத்தினர். மீண்டும் மீண்டும் அடித்து அவரது பற்கள்
முழுவதையும் உடைத்துப் பிடுங்கினர். அவரையும் இன்னும் பல கன்னியரையும்
நகருக்கு வெளியே அமைத்திருந்த விறகுக் குவியலினருகே இழுத்துச்
சென்றனர். விறகுக் குவியலுக்கு தீ மூட்டினர். அவர்கள் சொல்லும்
தூஷண வார்த்தைகளை சொல்லச் சொல்லி வற்புறுத்தினர்.
கிறிஸ்துவுக்கு எதிராக வசை பேசவோ அல்லது அவர்களது தெய்வங்களை
போற்றி பிரார்த்தனை செய்யவோ வற்புறுத்தினர். அல்லது உயிருடன்
தீக்கிரையாக்குவதாக பயமுறுத்தினர். அபொல்லோனியாவின் வேண்டுதலுக்கிணங்க
தமது பிடியிலிருந்து அவரை சிறிதே விடுவித்தனர். அபொல்லோனியா கண்ணிமைக்கும்
நேரத்தில் கொளுந்து விட்டெரியும் தீக்குள் குதித்து உயிருடன்
எரிந்து உயிர்விட்டார்.
|
|
|