Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

இயேசுவின் வழியினிலே

 

✠ புனிதர் ஆங்கில்பெர்ட் ✠ (St. Angilbert)
   
நினைவுத் திருநாள் : பெப்ரவரி 18
  ✠ புனிதர் ஆங்கில்பெர்ட் ✠ (St. Angilbert)

*பிறப்பு : 760

*இறப்பு : ஃபெப்ரவரி 18, 814
 ரிக்குயர் (Riquier), ஃபிரான்ஸ்

*ஏற்கும் சமயம் :
ரோமன் கத்தோலிக்க திருச்சபை (Roman Catholic Church)

*புனிதர் பட்டம் : 1100
திருத்தந்தை இரண்டாம் அர்பன் (Pope Urban II)

புனிதர் ஆங்கில்பெர்ட், "நார்தும்ப்ரியாவைச்" (Northumbria) சேர்ந்த பிரபல ஆங்கிலேய அறிஞரும், கவிஞரும், ஆசிரியருமான "அல்குயின்" (Alcuin) என்பவரிடம் கல்வி கற்ற ஒரு உன்னதமான ஃபிரான்கிஷ் கவிஞர் ஆவார். இவர், "ஃபிராங்க்ஸ்" (Franks) மற்றும் "லொம்பார்ட்ஸ்" (Lombards) அரசனும், கி.பி. 800ம் ஆண்டுமுதல் தூய ரோமப் பேரரசருமான (Holy Roman Emperor) "சார்ல்மக்ன்" (Charlemagne) என்றழைக்கப்படும் "முதலாம் சார்லசின்" (Charles I) மருமகனும், அவரது அரசவையில் பணியாற்றிய அரசு செயலாளரும், ராஜதந்திரியுமாவார்.

அரசன் முதலாம் சார்லசால் (Charles I) வளர்க்கப்பட்ட ஆங்கில்பெர்ட், அரண்மனை பள்ளியிலேயே கல்வியும் கற்றார். பிரபல ஆங்கிலேய அறிஞர் "அல்குயின்" (Alcuin) மாணவரான இவர், பின்னாளில் அவரது நண்பருமானார். அரசன் முதலாம் சார்லஸ், தமது இளைய மகனான "பெபின்" (Pepin) என்பவரை "லொம்பார்ட்ஸ்" (King of the Lombards) அரசனாக பதவியேற்க இத்தாலி அனுப்பினார். அப்போது, அவருக்கு துணையாகவும், அரசவையின் உயர் நிர்வாகியாகவும் ஆங்கில்பெர்ட்டை உடன் அனுப்பினார். அரசன் பெபினின் நண்பராகவும், ஆலோசகராகவும் இத்தாலியின் ஆட்சியிலும், அரசாங்கத்திலும் உதவினார். இவர், மேற்கு ஜெர்மனியின் (Western Germany) "ஃபிரான்க்ஃபர்ட்" (Frankfurt) நகரில் நடந்த ஆலோசனை சபையின் (Synod) அறிக்கைகளை (Document on Iconoclasm) திருத்தந்தை முதலாம் அட்ரியானிடம் (Pope Adrian I) கையளித்தார். பின்னர், 792, 794, மற்றும் 796ம் ஆண்டுகளின் நடந்த மூன்று முக்கிய வெளிநாட்டு தூதரகங்களுக்கு அனுப்பப்பட்டார். ஒரு சமயம், அவர் கடல் மாகாணங்களில் ஒரு அதிகாரியாகவும் பணியாற்றினார். அவர் 800ம் ஆண்டு, முதலாம் சார்லசுடன் ரோமுக்குச் சென்றார். 811ம் ஆண்டு, "சார்ல்மக்ன்" (Charlemagne) என்றழைக்கப்படும் தூய ரோமப் பேரரசர் (Holy Roman Emperor) "முதலாம் சார்லசின்" (Charles I) சொத்து உரிமை ஏற்பாடுகளான மரண சாசனத்தை (Testament of Charlemagne) நேரில் பார்த்த பதினோரு சாட்சிகளின் இவரும் ஒருவராவார்.

முதலாம் சார்லசின் மகளான "பெர்த்தாவுக்கும்" (Bertha) ஆங்கில்பெர்ட்டுக்குமான உறவுகளைப் பற்றின வெவ்வேறு மரபுகள் உள்ளன. அவர்கள் திருமணம் செய்து கொண்டார்கள் என்று ஒரு மரபும், இல்லையென்று பிறிதொன்றும் கூறுகின்றன. எவ்வாறாயினும், அவர்களுக்கு இரண்டு மகன்களும் ஒரு மகளும் பிறந்தனர். அதிலொருவர், ஒன்பதாம் நூற்றாண்டின் மத்தியில் பிரபலமான "நிதார்ட்" (Nithard) ஆவார். பின்னர், பெர்த்தா, பிரபுவான "இரண்டாம் ஹெல்கௌட்" (Helgaud II, count of Ponthieu) என்பவரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்தின் கட்டுப்பாடுகள் மற்றும் சட்டபூர்வமான அர்த்தங்கள் மத்திய காலங்களில் கடுமையாக போட்டியிட்டன. பெர்த்தா மற்றும் ஆங்கிள்ட்பெர்ட், திருச்சபைகள் நடத்தும் புனிதமான திருமண அருட்சாதன யோசனைக்கு எவ்வாறு எதிர்ப்புத் தெரிவிப்பது என்பதற்கான ஒரு எடுத்துக்காட்டு ஆவர். மறுபுறம், சார்ல்மக்ன் தனது மகள்களுக்கான தகுதிவாய்ந்த திருமணங்களை எதிர்த்து நின்றார் என்று, சில வரலாற்றாசிரியர்கள் யூகிக்கின்றனர். திருமண ஏற்பாடுகளின் அரசியல் வாய்ப்புகள் இருந்தாலும், சார்ல்மக்ன் மகள்களில் யாரும் திருமணம் செய்து கொள்ளவில்லை.

790ம் ஆண்டு, அவர் தமது பரபரப்பான அரசியல் வாழ்க்கையிலிருந்து ஓய்வு பெற்று, "சென்டுலும் மடாலயம்" (Abbey of Centulum) என்றழைக்கப்படும் "தூய ரிச்சாரியஸ் துறவு மடம்" (Monastery of St Richarius) சென்றார். 794ம் ஆண்டு, மடாதிபதியாக தேர்வு செய்யப்பட்டார். அவர் மடாலயத்தை மீண்டும் கட்டியெழுப்பினார் மற்றும் 200 பாகங்களுடன் கூடிய ஒரு நூலகத்தையும் அதற்கு வழங்கினார். உள்ளூர் சிறுவர்களுக்காக ஒரு பள்ளியையும் நிறுவி நடத்தினார்.

அவரது லத்தீன் கவிதைகள், அரச குடும்பங்களுடன் நெருங்கிய உறவை அனுபவிக்கும் உலகின் மனிதனின் கலாச்சாரம் மற்றும் சுவைகளை வெளிப்படுத்துகின்றன.
 

துன்பங்கள் தோன்றிடும் வேளையிலே நீ துணை தந்து காத்திட வேண்டுமம்மா