Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

இயேசுவின் வழியினிலே

 

✠ புனிதர் அலெக்ஸிஸ் ஃபல்கொனியெரி ✠ (St. Alexis Falconieri)
   
நினைவுத் திருநாள் : பெப்ரவரி 17
    புனிதர் அலெக்ஸிஸ் ஃபல்கொனியெரி ✠ (St. Alexis Falconieri)

*நிறுவனர்/ ஆன்மபலம் கொண்டவர் : (Founder and Mystic)

*பிறப்பு : கி.பி. 1200
ஃப்ளோரன்ஸ் (Florence)

*இறப்பு : ஃபெப்ரவரி 17, 1310
செனாரியோ மலை (Mount Senario)

*ஏற்கும் சமயம் :
ரோமன் கத்தோலிக்க திருச்சபை (Roman Catholic Church)

*முக்திபேறு பட்டம் : டிசம்பர் 1, 1717
திருத்தந்தை பதினோராம் கிளமென்ட் (Pope Clement XI)

*புனிதர் பட்டம் : ஜனவரி 15, 1888
திருத்தந்தை பதின்மூன்றாம் லியோ (Pope Leo XIII)

*முக்கிய திருத்தலங்கள் :
சேன்டிஸ்ஸிமா அன்னுன்ஸியேடா, ஃப்ளோரன்ஸ்
(Santissima Annunziata, Florence)

*பாதுகாவல் :
ஓர்வியேடோ நகர் (இத்தாலி) (City of Orvieto (Italy)

புனிதர் அலெக்ஸிஸ் ஃபல்கொனியெரி, "செர்வைட் துறவிகள்" (Servite Friars) அல்லது "மரியாளின் சேவகர்கள்" (Servants of Mary) என்றழைக்கப்படும் "செர்வைட் சபை"யை (Servite Order) நிறுவிய ஏழு தூய நிறுவனர்களுள் ஒருவராவார். இவர் மரணமடைந்த தினத்தன்று அனைத்து எழுவரினதும் நினைவுத் திருநாள் கொண்டாடப்படுகின்றது.

அலெக்ஸிஸின் தந்தை "பெர்னார்ட் ஃபல்கொனியெரி" (Bernard Falconieri) ஃப்ளோரன்ஸ் (Florence) மாநிலத்தின் வர்த்தக இளவரசரும், குடியரசின் முன்னணி தலைவர்களுள் ஒருவரும் ஆவார். இவர்களது குடும்பம், "குவெல்ஃப்" (Guelph party) என்ற அரசியல் கட்சியை சார்ந்ததாகும். "குவெல்ஃப்" கட்சியானது, பாரம்பரியப்படி, திருத்தந்தைக்கு ஆதரவாகவும், ரோமப் பேரரசுக்கு எதிராகவும் செயல்படுவதாகும். இவர்கள், ஏகாதிபத்தியவாதிகளை எதிர்த்து வந்தனர்.

அலெக்ஸிஸ் ஆழ்ந்த பணிவுடன் வளர்க்கப்பட்டார். இத்தாலி நாட்டின் வசதியான, கலாச்சாரம் மிகுந்த நகரமொன்றின் வசதி வாய்ப்புள்ள பிரபுவாக வளர்ந்தார். அலெக்ஸிஸ், "லௌடெசி" (Laudesi) எனப்படும் "அதிதூய அர்ச்சிஷ்ட கன்னி மரியாளின் தோழமைக் கூட்டுறவு பக்தி"யில் இணைந்தார். அங்கே, அவர் தமது புனித வாழ்க்கையின் துணைவர்கள் ஆறு பேரை சந்தித்தார்.

1233ம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம், 15ம் நாளன்றும், அலெக்ஸிஸ் மற்றும் அவரது துணைவர்கள் ஆறு பேரும் கடவுளின் அதிதூய அன்னை கன்னி மரியாளின் திருக்காட்சி காணும் பேறு பெற்றார்கள். பின்னர், ஏழு பேரும் இணைந்து "செர்வைட்" (Servites) எனப்படும் "மரியாளின் ஊழியர்கள் எனும் துறவற சபையைத் தோற்றுவித்தனர். குடும்பம், வர்த்தகம் என, திடீரென அனைத்தையும் ஒரேநாளில் கைவிட்ட அலெக்ஸிஸ் நகருக்கு வெளியே "லா கமார்ஸியா" (La Camarzia) எனும் இடத்திலுள்ள ஒரு வீட்டில் ஓய்வு பெற சென்றார். பின்னர், ஒரு வருடத்தின் பிறகு "செனாரியோ மலை"யில் (Mount Senario) போய் தங்கினார்.

வசதி வாய்ப்புள்ள குடும்பத்து பிள்ளையாக அவர் வளர்ந்த அதே நகரின் தெருக்களில் ஒரு பிச்சைக்காரனாக அலெக்ஸிஸ் வலம்வந்தார். மிகுந்த உண்மையான தாழ்ச்சியுடன் தமது சகோதரர்களுக்காக பிச்சை வேண்டி சுற்றினார். நூற்றுபத்து வயது வரை அவர் வாழ்ந்திருந்தபோதும், குருத்துவம் பெற எப்போதும் மறுத்து வந்திருக்கிறார். தாம் அதற்கு பொருத்தமானவரில்லை என்றே இறுதிவரை கூறினார்.

ஃப்ளோரன்ஸ் நகரின் புறவழியில் உள்ள "கஃபஜ்ஜியோ" (Cafaggio) எனும் இடத்தில் இவரது நேரடி மேற்பார்வையில் கட்டப்பட்ட தேவாலயம் 1252ம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது. இவரது சொந்த மருமகளான "புனிதர் ஜூலியானா ஃபல்கொனியெரி" (Saint Juliana Falconieri) இவரிடமே துறவற பயிற்சி பெற்றவர் ஆவார்.
 

துன்பங்கள் தோன்றிடும் வேளையிலே நீ துணை தந்து காத்திட வேண்டுமம்மா