✠ அருளாளர் ராணி மரியா ✠(Blessed Rani
Maria) |
|
|
|
நினைவுத் திருநாள் :
(ஏப்ரல்
/ Avril-
11) |
✠ அருளாளர் ராணி மரியா ✠(Blessed Rani
Maria)
அருட்கன்னியர்/ மறைசாட்சி:
(Religious/ Martyr)
பிறப்பு: ஜனவரி 29, 1954
புல்லுவழி, எர்ணாகுளம் மாவட்டம், கேரள மாநிலம், இந்தியா
(Pulluvazhy, Ernakulam district, Kerala, India)
இறப்பு: ஃபெப்ரவரி 25, 1995 (வயது 41)
நச்சின்போர் குன்று, இந்தோர், மத்தியபிரதேச மாநிலம், இந்தியா
(Nachanbore Hill, Indore, Madhya Pradesh, India)
ஏற்கும் சமயம்/ சபை:
சிரோ மலபார் திருச்சபை
(Syro Malabar Church)
ரோமன் கத்தோலிக்க திருச்சபை
(Roman Catholic Church)
முக்திப்பேறு பட்டம்: நவம்பர் 4, 2017
இந்தோர், இந்தியா
(Indore, India)
கர்தினால் ஆஞ்செலோ அமெட்டோ
(By Cardinal Angelo Amato)
நினைவுத் திருநாள்: ஃபெப்ரவரி 25
பாதுகாவல்:
உதவி பணியாளர்கள் (Aid workers)
மிஷனரிகள் (Missionaries)
அருளாளர் ராணி மரியா, இந்திய சீரோ மலபார் அருட்சகோதரியும்,
ஃபிரான்சிஸ்கன் கிளாரிஸ்ட் சபையின் சமூக சேவகரும் ஆவார். இவர்,
மத்திய பிரதேசம் மாநிலத்திலுள்ள இந்தூர் மறைமாவட்டத்தில் ஏழை
மக்களுக்காகப் பணிபுரிந்தார். அருட்சகோதரியான இவர், கற்பித்தல்
உருவாக்கம் மற்றும் கல்வி அறிவுறுத்தல்கள் பணிகளில் ஈடுபட்டார்.
நாட்டின் பல்வேறு பகுதிகளில் கற்பிப்பதற்காக இடம் பெயர்ந்த இவர்,
சமூக நீதி மற்றும் சமூக செயல்பாடுகளுக்காக குரல் கொடுத்தார்.
ஏழைகள் மற்றும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு உதவுவினார். இதனால்,
இவரது பிறரன்புப் பணிகளை விரும்பாத எதிராளிகளால் கொல்லப்பட்டார்.
இந்தியாவின் கேரள மாநிலத்தில், திரு. பெய்லி (Paily) மற்றும்
அவரது மனைவியான திருமதி. எலிஸ்வா வட்டலில் (Eliswa Vattalil)
ஆகியோரின் ஏழு குழந்தைகளில், இரண்டாவது குழந்தையாக, 1954ம் ஆண்டு,
ஜனவரி மாதம், 29ம் தேதி, பிறந்தார். ஃபெப்ரவரி மாதம், 5ம்
தேதி, புனித தாமஸ் தேவாலயத்தில் திருமுழுக்கு பெற்றார். தனது
முதல் புதுநன்மை, மற்றும் உறுதிப்பூசுதல், இரண்டையும், 1966ம்
ஆண்டு, ஏப்ரல் மாதம், 30ம் தேதி பெற்றார். இவர் உயர்நிலைப் பள்ளி
படிப்பைத் தொடங்குவதற்கு முன்பு அரசு நடத்தும் ஆரம்பப் பள்ளியில்
படித்தார். இவருடைய முதன்மை நோக்கம் கடவுளுக்கு சேவை செய்வதாக
இருந்தது.
கோட்டயம் மாவட்டத்திலுள்ள கிடங்கூர் (Kidangoor) கிராமத்திலுள்ள
ஃபிரான்சிஸ்கன் கிளாரிஸ்ட் சபையில் இணைந்த இவர், உத்தர பிரதேசம்
மாநிலத்திலுள்ள பிஜ்னோர் (Bijnor) எனுமிடத்திலுள்ள தூய மரியாள்
மடாலயத்தில், 1974ம் ஆண்டு, மே மாதம், 1ம் தேதி, தனது இறை
வாழ்க்கையினைத் துவங்கினார். 1978ம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம், 7ம்
தேதி வரை, அங்கேயே ஆசிரியராக பணியாற்றினார்.
அங்கமாலி என்னுமிடத்திலுள்ள தூய ஹார்மிசு தேவாலயத்தில் 1980ம்
ஆண்டு, மே மாதம், 22ம் நாளன்று, தமது இறுதி பிரமாணங்களை
மேற்கொண்டார்.
1983ம் ஆண்டு, ஜூலை மாதம், 21ம் நாள், "ஓடகாடி" என்னுமிடத்திற்கு
மாற்றல் பெற்று, ஜூலை 25 அன்று அங்கு வந்தார். அங்கே, இவர் சமூக
நல்லிணக்க நடவடிக்கைகளின் ஒருங்கிணைப்பாளராக பணியாற்றினார்.
1989ம் ஆண்டு, மே மாதம், 30 முதல் 1992ம் ஆண்டு, மே மாதமும்,
15 வரையிலான காலத்தில், உள்ளூரிலுள்ள உயர் ரேவா பல்கலைக்கழகத்தில்
கற்று, சமூகவியலில் பட்டம் பெற்றார். அதே மாதம், 18ம் நாள்,
உதயநகர் என்னுமிடத்திற்கு மாற்றல் பெற்று வந்து சேர்ந்தார்.
அங்கே, பெண்கள் மத்தியில் சுய உதவி குழுக்களை அமைத்து தீவிரமாக
செயல்பட்டு வந்தார். இதன் காரணமாக அங்கு வட்டி தொழிலில் ஈடுபட்டு
வந்தவர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டது.
1995ம் ஆண்டு, ஃபெப்ரவரி மாதம், 25ம் தேதி, அதிகாலையில் எழுந்து
காலை தியானத்திற்குச் சென்றார். அவரும் அவருடன் வந்த இரு அருட்சகோதரிகளும்
பேருந்து நிறுத்தத்தினை அடைந்தனர். அப்போது இவர்களுக்கு
பேருந்து பயணம் தடை செய்யப்பட்டதாக கூறப்பட்டது. இவர் பயணம்
செய்யவிருந்த பேருந்தைக் கண்டதும் மூவரும் மடாலய பள்ளிக்குத்
திரும்ப முடிவு செய்தனர்.
அருட்சகோதரி ராணி மரியா, வட்டி தொழில் பாதிக்கப்வர்களால் ஏவப்பட்ட
சமுந்தர் சிங் என்பவரால் கீழே ரோடில் இழுத்து தள்ளி கத்தியால்
குத்தி கொலை செய்யப்பட்டார்.
இந்த கொலை சம்பவம் தொடர்பாக சமுந்தர் சிங் கைது செய்யப்பட்டார்.
2006ம் ஆண்டு ராணி மரியா குடும்பத்தினர் சிறையில் இருந்த சமுந்தர்
சிங்குக்கு மன்னிப்பு அளித்ததால் அவர் விடுதலை செய்யப்பட்டார்.
முன்னதாக சிங் கேரளா சென்று ராணி மரியா குடும்பத்தினரிடம் மன்னிப்பு
கோரியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
திருத்தந்தை ஃபிரான்சிஸ் (Pope Francis) அவர்களுடைய அங்கீகாரத்தின்பேரில்,
2017ம் ஆண்டு, நவம்பர் மாதம், 4ம் தேதி, அருட்சகோதரி ராணி மரியா
அருளாளராக முக்திப்பேறு நிலைக்கு உயர்த்தப்பட்டார்.
|
|
|