Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

இயேசுவின் வழியினிலே

 

 
   
நினைவுத் திருநாள் : பெப்ரவரி 24
   ✠ அருளாளர் தாமஸ் மரிய ஃபஸ்கோ ✠ (Bl. Tommaso Maria Fusco)

*குரு, நிறுவனர் : (Priest and Founder)

*பிறப்பு : டிசம்பர் 1, 1831
பகனி, சலெர்னோ, இரண்டு சிசிலிக்களின் அரசு
(Pagani, Salerno, Kingdom of the Two Sicilies)

*இறப்பு : ஃபெப்ரவரி 24, 1891 (வயது 59)
பகனி, சலெர்னோ, இத்தாலி அரசு (Pagani, Salerno, Kingdom of Italy)

*ஏற்கும் சமயம் :
ரோமன் கத்தோலிக்க திருச்சபை (Roman Catholic Church)

*முக்திபேறு பட்டம் : அக்டோபர் 7, 2001
திருத்தந்தை இரண்டாம் ஜான் பவுல் (Pope John Paul II)

*பாதுகாவல் :
மிக மதிப்புமிக்க திருஇரத்தத்தின் கருணையின் மகள்கள் சபை
(Daughters of Charity of the Most Precious Blood)

அருளாளர் தாமஸ் மரிய ஃபஸ்கோ, ஒரு இத்தாலிய ரோமன் கத்தோலிக்க குருவும், "மிக மதிப்புமிக்க திருஇரத்தத்தின் கருணையின் மகள்கள்"(Daughters of Charity of the Most Precious Blood) எனும் சபையின் நிறுவனருமாவார்.

1831ம் ஆண்டு, டிசம்பர் மாதம், முதல் நாள், அன்றைய இரண்டு சிசிலிக்களின் அரசின் சலெர்னோவின் (Salerno) பகனி (Pagani) நகரில் பிறந்த தாமஸின் தந்தையார் பெயர், "அந்தோனியோ ஃபஸ்கோ" (Antonio Fusco) ஆகும். தாயாரின் பெயர், ஸ்டெல்லா ஜியோர்டேனோ" (Stella Giordano) ஆகும். இவர், தமது பெற்றோருக்குப் பிறந்த எட்டு குழந்தைகளில் ஏழாவது குழந்தை ஆவார். இவருக்கு ஆறு வயதாகையில் இவரது தாயார் மரித்துப் போனார். பத்து வயதாகையில் இவரது தந்தையும் மரித்துப் போனார். இதன்காரனத்தால் இவரது தாய்மாமனான "ஜியுசெப்"(Giuseppe) இவரையும் இவரது சகோதரர்களையும் தத்தெடுத்தார்.

1847ம் ஆண்டு, தென் இத்தாலியின் "கம்பானியா"(Campania) பிராந்தியத்திலுள்ள "நோசேரா"(Nocera) நகரில் தமது குருத்துவக் கல்வியை தொடங்கினார். அதே வருடம், அவரது தாய்மாமனும் மரித்துப் போனார். 1855ம் ஆண்டு, டிசம்பர் மாதம், 22ம் நாளன்று, தமது இருபத்துநான்கு வயதில் குருத்துவ அருட்பொழிவு பெற்றார்.

தமது சொந்த ஊரிலேயே பங்குத் தந்தையாக சேவையாற்றிய தாமஸ், அங்கேயே ஒரு பள்ளியையும் திறந்தார். 1857ம் ஆண்டு, "நோசேரா" (Nocera) நகரின் "மிஷனரிகளின் சபை"(Congregation of the Missionaries) உறுப்பினரானார். தென்திசை ஊர்களில் பிரசங்கிப்பதற்காக பயணிக்கத் தொடங்கினார். இவர், மிஷனரிகளின் சபையை ஆதரிப்பதற்காக, கத்தோலிக்க அப்போஸ்தலப் பணிகளுக்கான ஒரு குருக்களின் (Priestly Society of the Catholic Apostolate) சமுதாயத்தையும் நிறுவினார். 1874ம் ஆண்டு, இதற்கான ஒப்புதலும் திருத்தந்தை "ஒன்பதாம் பயசிடமிருந்து"(Pope Pius IX) பெறப்பட்டது.

அதன்பின்னர், 1873ம் ஆண்டு, ஜனவரி மாதம், 6ம் நாளன்று, "மிக மதிப்புமிக்க திருஇரத்தத்தின் கருணையின் மகள்கள்"(Daughters of Charity of the Most Precious Blood) எனும் சபையினை நிறுவிய இவர், 1874 - 1887 ஆண்டு காலத்தில், "பகனி"(Pagani) நகரின் பங்குத் தந்தையாக சேவை புரிந்தார். தார்மீக இறையியல் உள்ளடங்கிய பல்வேறு தலைப்புகளில் அவர் பல பிரசுரங்களை எழுதினார்.

தாமஸ் மரிய ஃபஸ்கோ, 1891ம் ஆண்டின் தொடக்கத்திலேயே மரித்தார்.
 
 

துன்பங்கள் தோன்றிடும் வேளையிலே நீ துணை தந்து காத்திட வேண்டுமம்மா