✠ அருளாளர் மரியா ஏஞ்சலா அஸ்டோர்ச்
✠ (Blessed Maria Angela Astorch) |
|
|
|
நினைவுத் திருநாள் :
டிசம்பர்
02 |
✠ அருளாளர் மரியா ஏஞ்சலா அஸ்டோர்ச்
✠(Blessed Maria Angela Astorch)
* மறைப்பணியாளர்/
சபை நிறுவனர் :
(Religious and Foundress)
* பிறப்பு
: செப்டம்பர் 1, 1592
பார்சிலோனா, ஸ்பெயின்
(Barcelona, Spain)
* இறப்பு
: டிசம்பர் 2, 1665
முர்சியா, ஸ்பெயின்
(Murcia, Spain)
*
முக்திபேறு பட்டம்: மே 23 1982
திருத்தந்தை 2ம் ஜான் பவுல்
(Pope John Paul II)
அருளாளர் மரியா ஏஞ்சலா அஸ்டோர்ச், ஒரு ஸ்பேனிஷ் துறவியும் "சரகோசா"
(Zaragoza) மற்றும் "மூர்சியா" (Murcia) ஆகிய இடங்களிலுள்ள "எளிய
சகோதரியருக்கான கப்புச்சின் துறவு சபையின்" (Capuchin Poor
Clares) நிறுவனரும் ஆவார். "மூர்சியாவில்" (Murcia) மரித்த இவர்,
மே 1982ம் ஆண்டு, மே மாதம், 23ம் நாள், திருத்தந்தை "இரண்டாம்
ஜான் பவுல்" (Pope John Paul II) அவர்களால் அருளாளராக அருட்பொழிவு
செய்யப்பட்டார்.
பார்சிலோனாவில் வசதியான குடும்பத்தில் பிறந்த ஏஞ்சலாவின் தந்தை
"கிறிஸ்டோபல் கோர்டி" (Cristbal Cortey) ஒரு புத்தக வியாபாரி
ஆவார். இவரது தாயாரின் பெயர் "கேடலினா அஸ்ட்ரோக்" (Catalina
Astroch) ஆகும். இவர்களுக்குப் பிறந்த நான்கு குழந்தைகளில் ஆஞ்சலா
கடைக்குட்டி குழந்தை ஆவார்.
இவருக்கு நான்கு வயதாகியபோதே இவரது பெற்றோர் இருவரும் மரித்துப்
போயினர். அனாதையாக தனித்து விடப்பட்ட மரியா, இவர்களது வீட்டின்
பணிப்பெண்ணின் பாதுகாவலில் விடப்பட்டார்.
1599ம் ஆண்டு, தமது ஏழு வயதில் விஷமருந்திய ஏஞ்சலா, மரித்த
நிலையில் காணப்பட்டார். அப்போது, பார்சிலோனாவில் புதிதாய் நிறுவப்பட்டிருந்த
"கபுச்சின் துறவு சபையில்" (Capuchin Monastery) அருட்சகோதரியாக
இருந்த இவரது சகோதரி "இசபெல் அஸ்டோர்ச்" (Isabel Astorch), மரியாவின்
இறுதிச் சடங்குக்கு ஏற்பாடுகள் செய்தார். இறுதி ஊர்வலத்தின் தயாரிப்புக்களுக்கு
இடையே மரியாவின் சகோதரி "இசபெலின்" (Isabel) ஜெபத்தினால் அதிசயிக்கும்
வகையில் மரியா உயிருடன் மீண்டு வந்தார்.
புத்துயிர் பெற்ற மரியா பிரம்மாண்ட சாத்தியக்கூறுகளுடன் மேம்பட்ட
முதிர்ச்சி பெற்றார். லத்தீன் மொழியிலுள்ள புத்தகங்களை படிக்கவும்
கடினமாக உழைக்கவும் கற்றார்.
1603ம் ஆண்டு, செப்டம்பர் மாதம், 16ம் தேதி, தமது பதினோரு வயதில்,
"அன்னை ஏஞ்செலா செரஃபினா ப்ராட்" (Mother Angela Serafina
Prat) அவர்களால் நிறுவப்பட்ட "பார்சிலோனாவின் புனிதர் மார்கரெட்"
(Monastery of St. Margaret of Barcelona) துறவற மடத்தில் இணைந்தார்.
பார்சிலோனாவில் இருந்த கப்புச்சின் துறவற சபையில் தனது 17ம்
வயதில் துறவற வார்த்தைப் பாடுகளைப் பெற்றார். தான் துறவியான 8
ஆண்டுகள் கழித்து, சரகோசா (Saragossa) என்ற ஊரில் துறவற மடம்
ஒன்றைக்கட்டினார். அதன்பிறகு அவ்வில்லத்திற்கு தானே தலைமை
பொறுப்பையும் ஏற்றார்.
ஞானத்தாலும், அறிவாலும் சிறந்து விளங்கி தன் மடத்தை வழிநடத்தினார்.
அதன்பின்னர், ஸ்பெயின் நாட்டின் "சரகோஸா" (Zaragoza) என்ற இடத்தில்
"தூய மார்கரிட்டா" (Monastery of Santa Margarita) எனும் பெயரில்
ஒரு துறவு மடத்தை நிறுவினார். இவர் அம்மடத்திலிருந்த காலத்தில்,
அம்மடம் அடித்தளங்களின் ஒரு செழுமையான மையமாக மாறியது.
1614-1623 ஆண்டு காலத்தில் புகுமுக பயிற்சித் துறவியரின் (Mistress
of Novices) தலைமையேற்றார். 1623-1626 ஆண்டு காலத்தில் பயிற்சி
முடித்த இளம் துறவியரின் (Teacher of young Professed) ஆசிரியையாக
இருந்தார். 1626-1642 ஆண்டு காலத்தில் மடாதிபதியாக (Abbess) பணியாற்றினார்.
மரியா ஏஞ்சலாவின் ஆன்மீக முன்னேற்றம் அவரது சுயசரித கதைகளில்
பதிவு செய்யப்பட்டுள்ளன. அவற்றில், அவர் தமக்கு 1626-1656 ஆண்டு
காலத்தில் ஏற்பட்ட ஆன்ம பலம் கொண்ட இறை அனுபவங்களைப் பற்றி
சொல்கிறார். அவர், எண்ணிலடங்கா இயேசுவின் திருக்காட்சிகளை
பெற்றார். அவைகளை தானே தன் கைப்பட எழுதியும் வைத்தார்.
1640ம் ஆண்டு, அருட்சகோதரி மரியா ஏஞ்சலா, ஸ்பெயின் நாட்டின்
மூர்சியா எனும் இடத்தில் புதிதாய் ஒரு துறவற மடத்தினை
நிறுவினார். அதற்கு "தூய அருட்சாதனங்களின் பெரு மகிழ்ச்சிநிலை"
(Exaltation of the Holy Sacrament) என்று பெயர் சூட்டினார்.
மீண்டும் இங்கேயும் புகுமுக துறவியரின் பயிற்சி கால தலைவராகவும்,
மடாதிபதியாகவும் பணியாற்றினார். ஏஞ்சலா இங்கேயிருந்த காலகட்டத்தில்,
வெள்ளம் - கொள்ளைநோய் போன்ற கடினமான தருணங்களையும் சந்தித்தார்.
1648ம் ஆண்டு பிளேக் கொள்ளை நோய் வேகமாக பரவியிருந்தது. பின்னர்
1651 மற்றும் 1653 ஆண்டுகளில் "சேகுரா" (River Segura) நதியில்
வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதுபோன்ற அவசர காலங்களில் மக்களுக்கு
சலிக்காது சேவையாற்றினார்.
1655ம் ஆண்டு, அருட்சகோதரி மரியா ஏஞ்சலா தமது மோசமான உடல்நிலையால்
எழுத்துப் பணிகளை நிறுத்தினார். 1660ம் ஆண்டில் தமது மன நலனை
இழந்த அருட்சகோதரி, ஒரு குழந்தை போல நடந்துகொள்ள ஆரம்பித்தார்.
1661ம் ஆண்டில் தமது மடாதிபதி பொறுப்பை விட்டு விலகினார்.
1665ம் ஆண்டு நவம்பர் மாதம், 21ம் தேதி, உடலின் ஒரு பக்கம் செயலற்றுப்
போக வைக்கும் (Hemiplegia) வாத நோயால் பாதிக்கப்பட்டார்.
அவரது மனநிலை தேறாமலே போனது. தமது இறுதி அருட்சாதனங்களைப்
பெற்றுக்கொண்ட அருட்சகோதரி ஏஞ்சலா, டிசம்பர் மாதம் 2ம் தேதி
கிறிஸ்துவுக்குள் மரித்தார். |
|
|