✠ அருளாளர் ஜேகபோன் ✠(Blessed Jacopone da
Todi) |
|
|
|
நினைவுத் திருநாள் :
(டிசம்பர்/
Dec -
22) |
✠ அருளாளர் ஜேகபோன்
✠(Blessed Jacopone da Todi)
✠ ஃபிரான்சிஸ்கன் பொதுநிலை சகோதரர்
:
(Franciscan Friar/ Lay Brother)
✠பிறப்பு : கி.பி. 1230
டோடி, ஊம்பிரியா, திருத்தந்தையர் மாநிலங்கள்
(Todi, Umbria, Papal States)
✠இறப்பு : டிசம்பர் 25, 1306
கோல்லாசோன், ஊம்பிரியா, திருத்தந்தையர் மாநிலங்கள்
✠முக்கிய திருத்தலம் :
சான் ஃபோர்ச்சுநெட்டோ தேவாலயம், டோடி, பெருஜியா, இத்தாலி
(Church of San Fortunato, Todi, Perugia, Italy)
✠நினைவுத் திருநாள் : டிசம்பர்
22
அருளாளர் "ஃப்ரா ஜேகபோன்" (Fra Jacopone of Todi), இத்தாலி
நாட்டின் "உம்ப்ரியா" (Umbria) பிராந்தியத்தைச் சேர்ந்தவரும்,
ஃபிரான்சிஸ்கன் சபை பொதுநிலை சகோதரருமாவார். (Franciscan friar/
Lay Brother). இவர், ஆண்டவரைப் புகழ்ந்து உள்ளூர் மொழியில் பல்வேறு
பாடல்களை எழுதியவராவார். இத்தாலிய அரங்கங்களின் ஆரம்பகால
முன்னோடியான இவர், சுவிசேஷ (நற்செய்தி) பாடங்களை நாடகப்படுத்திய
முந்தைய அறிஞர்களில் ஒருவர் ஆவார்.
"ஜேகபோ டேய் பெனெடெட்டி" (Jacopo dei Benedetti) எனும் இயற்பெயர்
கொண்ட இவர், பிரபுக்களின் குடும்பமொன்றின் உறுப்பினர் ஆவார்.
வடக்கு இத்தாலியின் "எமிலியா-ரொமாக்னா" (Emilia-Romagna)
பிராந்தியத்தின் தலைநகரான "பொலோக்னாவில்" (Bologna) சட்டம் பயின்ற
இவர், ஒரு வெற்றிகரமான வழக்குரைஞர் ஆனார். இவர், தமது வயது இருபதுகளில்
இருக்கையில் ஒரு சமயம், பக்தியும், தாராள குணமும் கொண்ட "வண்ணா"
(Vanna) என்றொரு இளம் பெண்ணை திருமணம் செய்ததாக குறிப்புகள்
கூறுகின்றன. இவ்வுலக ஆசைகள் மற்றும் வெற்றிகரமான வழக்குரைஞர்
ஆகிய காரணங்களால், இவரது மனைவி தமக்குத் தாமே அந்தரங்க துறவற
வாழ்க்கை வாழ்ந்தார்.
திருமணத்திற்குப் பிறகு, பெனடேட்டி ஒரு முறை, பொது பல்திறன்
போட்டியொன்றில் பங்கேற்க தனது மனைவியை வற்புறுத்தினார். ஒரு
காட்சியொன்றில், உட்கார்ந்து கொண்டிருந்த நிலையில் இருந்தபோது
அவள் கொல்லப்பட்டாள். அவளது பக்கத்திற்கு அவசர அவசரமாக ஜேகபோன்
ஒடி வந்தபோது, அவள் ஒரு மயிராடை அணிந்திருந்ததை கண்டுபிடித்தார்.
அதிர்ச்சியடைந்த அவர், தமக்காகவே தமது மனைவி இங்கனம் நோன்பு
வாழ்க்கை வாழ்வதை அவர் உணர்ந்தார்.
பெனடெட்டி, தமது சட்ட பணிகளை கைவிட்டார். தம்மிடமிருந்த அனைத்தையும்
தானமாக அளித்த இவர், கி.பி. 1268ம் ஆண்டு முதல் ஒரு நடமாடும்
துறவியாக வாழ்ந்தார். மூன்றாம் நிலை தூய ஃபிரான்சிஸின் சபையில்
(Third Order of St. Francis) சேர்ந்தார். இந்த காலகட்டத்தில்,
அவர் ஒரு சித்தம் கலைந்தவராக புகழ் பெற்றார். அவரது விசித்திரமான
நடத்தை காரணமாகவும், அவரது ஆன்மீக செயல்பாடுகள் காரணமாகவும்
அவருக்கு "பித்துப்பிடித்த மனிதன்" (Jacopone) எனும் புனைப்பெயர்
கிட்டியது. உதாரணமாக, "டோடி" (Todi) நகரின் பொது இடங்களில்
குதிரைச் சவாரி புரிபவர் அமரும் சேணம் (Saddle) அணிந்துகொண்டு
நான்கு கால்களில் ஊர்ந்து செல்வது போன்ற காரியங்களில் ஈடுபடுவார்.
மற்றொரு சந்தர்ப்பத்தில், தனது சகோதரர் வீட்டில் ஒரு திருமணத்தில்
தோன்றிய இவர், நிலக்கரியில் இருந்து எடுக்கப்பட்ட கரிய பொருள்
மற்றும் இறகுகளை தலை குத்தல் கால்வரை அணிந்துகொண்டு சுற்றித்
திரிந்தார்.
சுமார் பத்து வருடங்கள் இதுபோன்ற வாழ்க்கை வாழ்ந்ததன் பிறகு,
பெனெடெட்டி இளம் துறவியர் சபையில் (Friars Minor" இணைய முயன்றார்.
ஆனால் அவருடைய நடவடிக்கைகள் காரணமாக அவரை ஏற்றுக்கொள்ள தயக்கம்
காட்டினர். அவர் விரைவில் தற்பெருமை கொண்ட விசித்திரமான உலகைப்
பற்றின ஒரு அழகான கவிதையை எழுதினார். இது, கி.பி. 1278ம் ஆண்டில்
சபைக்குள் சேர்வதற்கு வழிவகுத்தது. அவர், ஒரு பொதுநிலை சகோதரராக
(Lay Brother) வாழ தேர்வு செய்தார்.
இந்த நேரத்தில், ஃபிரான்சிஸ்கன் சபையில் இரண்டு பரந்த பிரிவுகளும்
எழுந்தன. கடுமையான போக்குகளற்ற (More Lenient), மற்றும்
குறைந்த மாயத் தோற்ற மனப்பாங்குகள் (Less Mystical Attitude)
கொண்டது ஒரு பிரிவாகவும், மற்றது மிகவும் கடுமையான வாழ்க்கை
முறைகளைக் கொண்டது. முழுமையான எளிமை மற்றும் பச்சாதாபத்துடன்
பிரசங்கித்தல் மற்றொரு பிரிவாகும். ஜேகபோன், பிந்தைய குழு இணைக்கப்பட்டார்.
கி.பி. 1294ம் ஆண்டு, அவர்கள் திருத்தந்தை ஐந்தாம் செலஸ்டின்
(Pope Celestine V) அவர்களிடம் ஒரு பிரதிநிதியை அனுப்பினர். மற்ற
துறவியர்களிலிருந்து தனித்தனியாக வாழவும், ஃபிரான்சிஸ்கன் சபையின்
சட்டதிட்டங்களை பரிபூரணமாக கடைப்பிடிக்க அனுமதி கேட்டனர்.
அவர்களது கோரிக்கை ஒப்புக்கொள்ளப்பட்டது. ஆனால், நடவடிக்கை எடுக்கப்படுவதற்கு
முன்னரே, ஐந்தாம் செலஸ்டின் தமது திருத்தந்தைப் பதவியை இராஜிநாமா
செய்தார். அவருக்குப் பின்வந்த திருத்தந்தை எட்டாம் போனிஃபேஸ்
(Pope Boniface VIII), மேலும் கடுமையான கருத்துக்களை எதிர்த்தார்.
தொடர்ந்து வந்த போராட்டங்களின்போது, ஜேகபோன், குறிப்பிட்ட சில
விவிலிய வார்த்தைகளை எழுதியதன்மூலம், ஆன்மீகவாதிகளின் காரணங்களை
வெளியிட்டார். திருத்தந்தையால் சேர்க்கப்பட்டவர்களையும், எதிர்த்தவர்களையும்
மிகக் கடுமையாக விமர்சித்தார். இரண்டு சகோதர-கர்தினால்கள் மற்றும்
கொலோனாஸ், ஆகியோர் பிரான்சின் மன்னருடன் சேர்ந்து, திருத்தந்தை
எட்டாம் போனிஃபேஸ் (Pope Boniface VIII) எதிரானபோது, ஜேகபோன்
கொலோனாஸுக்கு தமது ஆதரவளித்த தெரிவித்தார். அரசியல் மற்றும்
யுத்த நிலைமை ஏற்பட்டது. திருத்தந்தை அவர்களை வெளியேற்றினார்.
இவற்றின் விளைவுகளால், இரண்டு போட்டியிடும் கட்சிகளுக்கு இடையேயான
ஒரு போரை தொடங்கிய இது, கி.பி. 1298ம் ஆண்டு, பாலஸ்தீன
முற்றுகை மற்றும் ஜேகபோனை வெளியேற்றி, கைது செய்து, சிறையிலடைத்ததுடன்
முடிவுக்கு வந்தது. ஐந்து வருடங்களுக்குப் பிறகு, கி.பி.
1303ம் ஆண்டு, திருத்தந்தை எட்டாம் போனிஃபேஸ் மரணமடைந்ததன்
பின்னர் ஜேகபோன் விடுதலை செய்யப்பட்டார்.
உடல்நலம் கெட்டு, உடைந்துபோன ஜேகபோன், "பெருஜியா" (Perugia) மற்றும்
"டோடி" (Todi) நகரங்களுக்கு இடையேயுள்ள சிறு மலை வாசஸ்தலமான
"கொல்லஸ்ஸோன்" (Collazzone) நகரில் ஓய்வு பெற சென்றார். அங்கே,
அவர் "எளிய கிளாரா" (Poor Clares) சமூகத்தினரால் கவனித்துக்கொள்ளப்பட்டார்.
கி.பி. 1306ம் ஆண்டின் இறுதியில் அவருடைய நிலை மோசமடையவே, தமது
பழைய நண்பரான "லா வர்னா நகர அருளாளர் ஜான்" (Blesse John of La
Verna) என்பவருக்கு தகவல் அனுப்பி, தமக்கு இறுதி சடங்குகளை வழங்கும்படி
கேட்டுக்கொண்டார். கிறிஸ்து பிறப்பு தினத்துக்கு முன்தினம் வந்து
சேர்ந்த ஜான், அவரை ஆறுதல்படுத்தினார். ஆனாலும் ஜேகபோன் நள்ளிரவில்
மரித்துப் போனார்.
ஜேகபோன் உடல், முதலில் மடாலய தேவாலயத்தில் அடக்கம் செய்யப்பட்டது.
கி.பி. 1433ம் ஆண்டு, அவரது கல்லறை கண்டுபிடிக்கப்பட்டது. அவரது
மிச்சங்கள், "டோடி" (Todi) நகரில் உள்ள "சேன் ஃபோர்ச்சுனேட்டோ"
"ஃபிரான்சிஸ்கன் ஆலயத்திலுள்ள" (Franciscan Church of San
Fortunato) ஒரு நிலவறைக்கு மாற்றப்பட்டது. |
|
|