Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

இயேசுவின் வழியினிலே

 

✠ அருளாளர் அடால்ஃப் கொல்பிங் ✠(Blessed Adolph Kolping)
   
நினைவுத் திருநாள் : (டிசம்பர்/ Dec - 10)
✠ அருளாளர் அடால்ஃப் கொல்பிங் ✠(Blessed Adolph Kolping)

 குரு மற்றும் நிறுவனர் :
(Priest and Founder)

பிறப்பு : டிசம்பர் 8, 1813
கெர்பென், ரெய்ன்-எர்ஃப்ட்-க்ரெய்ஸ், ரைன் கூட்டமைப்பு
(Kerpen, Rhein-Erft-Kreis, Confederation of the Rhine)

இறப்பு : டிசம்பர் 4, 1865
கொலோன், வடக்கு ரைன்-வெஸ்ட்ஃபாலியா, ஜெர்மன் கூட்டமைப்பு
(Cologne, North Rhine-Westphalia, German Confederation)

ஏற்கும் சமயம் :
ரோமன் கத்தோலிக்க திருச்சபை
(Roman Catholic Church)

முக்திபேறு பட்டம் : அக்டோபர் 27, 1991
திருத்தந்தை இரண்டாம் ஜான் பவுல்
(Pope John Paul II)

நினைவுத் திருநாள் : டிசம்பர் 10

பாதுகாவல் :
உலக இளைஞர் தினம் (World Youth Day)
பணிபயில்பவர் (Apprentices)
தொழிலாளர்கள் (Labourers)
சமூக தொழிலாளர்கள் (Social workers)
கத்தோலிக்க தொழில் முனைவோர் (Catholic Entrepreneurs)

அருளாளர் அடால்ஃப் கொல்பிங், ஒரு ஜெர்மன் ரோமன் கத்தோலிக்க குருவும், "கொல்பிங் சங்கத்தின்" (Kolping Association) நிருவனருமாவார். இவர், தொழில்சார்ந்த நகரங்களில் உள்ள தொழிலாளர்களுக்கு சமூக ஆதரவு வழங்குவதற்கும், ஊக்குவிப்பதற்குமான பணிகளில் பொறுப்பேற்று தலைமை தாங்கி வழி நடத்தினார்.

கி.பி. 1813ம் ஆண்டு, டிசம்பர் மாதம், 8ம் தேதி ஏழை கால்நடை மேய்க்கும் "பீட்டர் கொல்பிங்" (Peter Kolping) என்பவரின் மகனாக பிறந்தார். இவரது தாயாரின் பெயர், "அன்னா மரியா" (Anna Maria Zurheyden) ஆகும். தமது பெற்றோருக்குப் பிறந்த ஐந்து குழந்தைகளில் நான்காவதாகப் பிறந்த இவர், தமது குழந்தைப் பருவத்தில் அடிக்கடி நோய்வாய்ப்பட்டிருந்தார்.

கி.பி. 1820ம் ஆண்டு முதல், 1826 ஆண்டு வரையான ஆரம்பப் பள்ளிக் கல்வியில் தாம் ஒரு நல்ல மாணவன் என்பதை நிரூபித்த இவரால் தமது ஏழ்மை காரணமாக மேலே படிக்க இயலவில்லை.

கி.பி. 1831ம் ஆண்டு, தமது பதினெட்டு வயதில், ஒரு செருப்பு தைப்பவரின் உதவியாளராக "கொலோன்" (Cologne) நகருக்கு பயணித்த இவர், அங்கு வாழ்ந்த தொழிலாள வர்க்கத்தின் வாழ்க்கை நிலைமைகளால் அதிர்ச்சியடைந்தார். இதனால் இவர் ஒரு குருவாக முடிவெடுப்பதில் உறுதியாக இருந்தார் என்பதை நிரூபித்தது. கி.பி. 1841ம் ஆண்டுவரை சுமார் பத்து வருடங்கள் அவர் செருப்பு தைக்கும் பணி செய்தார். கி.பி. 1834ம் ஆண்டு கோடை முதல், "மூன்று அரசர்கள் பள்ளியில்" (Three Kings School) கல்வி கற்ற இவர், கி.பி. 184142 ஆண்டுகளில் "மியூனிச்" (Munich) நகரில் இறையியல் கற்றார்.

கி.பி. 1845ம் ஆண்டு, ஏப்ரல் மாதம், 13ம் நாள், கொலோன் நகரில் குருத்துவ அருட்பொழிவு பெற்றார். இவர் குருத்துவ அருட்பொழிவு பெறுவதன் முதல் நாள் இரவு, இவரது தந்தையார் மரித்துப் போனார். ஆகவே, இவரது குருத்துவ அருட்பொழிவு நிகழ்வுகள் குழப்பமான உணர்ச்சிக்கலவைகளாகவே இருந்தன.

ஜெர்மனியின் (Germany) "வடக்கு ரைன் வெஸ்ட்பாலியாவிலுள்ள" (North Rhine-Westphalia) "வுப்பெர்டல்" (Wuppertal) நகரின் சித்ராலய குருவாக ஆன்மீக வாழ்க்கையை தொடங்கிய இவர், கி.பி. 1849ம் ஆண்டுவரை அங்கேயே இருந்தார். கி.பி. 1847ம் ஆண்டு, "கெசெல்லேன்ன்வெரியன்" (Gesellenverein) என அழைக்கப்படும் ஜெர்மனியின் ரோமன் கத்தோலிக்க சமூகங்களின் கூட்டமைப்பின் இரண்டாவது தலைவராக பொறுப்பேற்றார். இதன் காரணமாக, அதன் உறுப்பினர்களுக்கு சமய மற்றும் சமூக ஆதரவு கிட்டியது. கி.பி. 1849ம் ஆண்டு, தேவாலய துணைத் தலைவராக கொலோன் திரும்பினார். கி.பி. 1854ம் ஆண்டு "ரைன் பிராந்திய மக்கள் பத்திரிகை" (Rhine Region People's Paper) எனும் பெயரில் ஒரு பத்திரிகை தொடங்கினார். கி.பி. 1852 1853 ஆண்டு காலத்தில், "கத்தோலிக்க மக்களின் காலண்டரின்" (Catholic People's Calendar) ஆசிரியராக பணியாற்றினார். கி.பி. 1862ம் ஆண்டு, "செயின்ட் மரியா எம்பஃபேன்கினிஸ் தேவாலயத்தின்" (Saint Maria Empfngnis Church) அதிபரானார்.

நுரையீரல் புற்றுநோயால் (Lung Cancer) பாதிக்கப்பட்டிருந்த இவர், கி.பி. 1865ம் ஆண்டு, டிசம்பர் மாதம், 4ம் தேதி மரித்தார்.
 

துன்பங்கள் தோன்றிடும் வேளையிலே நீ துணை தந்து காத்திட வேண்டுமம்மா