✠ புனிதர் அம்புரோஸ் ✠(St.
Ambrose) |
|
|
|
நினைவுத் திருநாள் :
டிசம்பர்
07 |
✠ புனிதர் அம்புரோஸ்
✠(St. Ambrose)
✠ மிலன் நகரின் பேராயர்/ திருச்சபையின் மறைவல்லுநர் :
(Archbishop of Milan/ Doctors of the Church)
✠பிறப்பு : கி.பி. 340
ஆகஸ்ட்டா ட்ரெவெரோரும், கல்லியா பெல்ஜிகா, ரோம பேரரசு (தற்போதைய
டிரையர், ஜெர்மனி)
(Augusta Treverorum, Gallia Belgica, Roman Empire (Modern
Trier, Germany)
✠இறப்பு : ஏப்ரல் 4, 397
மெடியோலனும், இடாலியா அன்நோனரியா, ரோம பேரரசு
(தற்போதைய மிலன், இத்தாலி)
(Mediolanum, Italia annonaria, Roman Empire (Modern Milan,
Italy)
✠நினைவுத் திருவிழா : டிசம்பர் 7
✠ஏற்கும் சபை :
கத்தோலிக்க திருச்சபை
(Roman Catholic Church)
கிழக்கு மரபுவழி திருச்சபை
(Eastern Orthodox Church)
ஆங்கிலிக்கன் சமூகம்
(Anglican Communion)
லூதரன் திருச்சபை
(Lutheran Church)
ஓரியண்டல் மரபுவழி திருச்சபை
(Oriental Orthodoxy)
✠சித்தரிக்கும் வகைகள் :
தேன் கூடு, குழந்தைகள், சாட்டை, எலும்புகள்
✠பாதுகாவல் :
தேனீ வளர்ப்பு; தேனீக்கள்; மெழுகுவர்த்தி தயாரிப்பாளர்கள்;
வீட்டு விலங்குகள்; கற்றல்; மிலன்; மாணவர்கள்; ஆயர்கள்;
வாத்துக்கள்; கால்நடை; காவல் அதிகாரிகள்; மெழுகு சுத்திகரிப்பாளர்கள்;
✠முக்கிய திருத்தலங்கள் :
அம்புரோசு பேராலயம்
(Basilica of Sant'Ambrogio)
"ஆரேலியஸ் அம்புரோசியஸ்" (Aurelius Ambrosius) என்னும் இயற்பெயருடைய
புனிதர் அம்புரோஸ், "மிலன் நகரின் கத்தோலிக்க பேராயரும்" (Archbishop
of Milan), கி.பி. நான்காம் நூற்றாண்டின் திருச்சபை தலைவர்களுள்
குறிப்பிடத்தக்க ஒருவரும் ஆவார். இவர் பேராயராகும் முன்னர்,
வடமேற்கு இத்தாலியின் கடற்கரைப் பிராந்தியமான "லிகுரியா" (Liguria)
மற்றும் வட இத்தாலியின் சரித்திர பிராந்தியமான "எமிலியா"
(Emilia) ஆகியவற்றின் "ரோமன் ஆளுநராக" (Roman governor) பதவியேற்றிருந்தார்.
மிலன் நகர் இவரது தலைமையிடமாக இருந்தது.
திருச்சபையின் முதல் நான்கு அசல் "மறைவல்லுநர்களுள்" (Doctors
of the Church) இவரும் ஒருவர். இவர் மிலன் நகரின் பாதுகாவலர்
ஆவார். அகுஸ்தீனுக்கு இவரால் ஏற்பட்ட தாக்கத்துக்காக இவர்
பெரிதும் அறியப்படுகின்றார்.
இவர் பல விவிலிய விளக்க உரைகளை எழுதியுள்ளார். இவற்றில் இவரின்
வாழ்கை குறித்த செய்திகள் பல காணக் கிடைக்கின்றன. இவரின்
முன்னோர்கள் ரோமக்குடிமக்களாகவும், தொடக்கத்திலேயே கிறிஸ்தவ மறையினை
தழுவியவர்களாகவும், அரசின் உயர் அதிகாரிகளாகவும் கிறிஸ்தவ மறைசாட்சிகளாகவும்
இருந்துள்ளனர். "ஔரெலியஸ் அம்ப்ரோசியஸ்" (Aurelius Ambrosius)
எனும் பெயரால் அறியப்படும் இவரது தந்தை, ரோமப்பேரரசின் "கௌல்"
பிராந்தியத்தின் (Praetorian prefecture of Gaul) ஆளுநராக இருந்தார்.
இப்பதவி ரோமக்குடிமக்கள் வகிக்கக்கூடிய மிக உயரிய பதவி ஆகும்.
இவரது மூத்த சகோதரியான "மார்செல்லினா" (Marcellina) மற்றும் சகோதரர்
"சாடிரஸ்" (Satyrus of Milan) ஆகிய இருவருமே புனிதர்களாவர்.
இவரது குழந்தைப்பருவத்தில் ஒருநாள் இவர் தொட்டிலில் படுத்திருக்கையில்,
தேனீக்களின் கூட்டமொன்று இவருடைய முகத்தைச் சூழ்ந்து
மூடிக்கொண்டதாகவும், அவருடைய முகத்தில் ஒருதுளி தேனை விட்டுச்
சென்றதாகவும் கூறப்படுகிறது. இதனைக் கண்ட இவரது தந்தையார், இக்குழந்தை
எதிர்காலத்தில் இனிமையாகவும் எளிமையாகவும் பேசக்கூடிய நாவன்மை
கொண்டதாக வளருவதற்கான இது ஒரு அறிகுறியாகும் என்று குழந்தையின்
தந்தை எண்ணினார்.
இவரது தந்தையின் மரணத்தின் பின்பு இவரின் குடும்பம் ரோமில்
குடியேறியது. இலக்கியம், சட்டம், சொல்லாட்சி ஆகியவற்றைக் கற்ற
இவரை, நான்காம் நூற்றாண்டின் பிற்பகுதியில், செல்வம், அதிகாரம்
மற்றும் சமூக தொடர்புகளுக்கு புகழ்பெற்ற ரோமானிய உயர்குடித் தலைவரான
"செக்ஸ்டஸ் கிளாடியஸ் பெட்ரோனியஸ் ப்ரோபஸ்" (Sextus Claudius
Petronius Probus) என்பவரும், பிறிதொரு உயர் அதிகாரியும் (Praetorian
Prefect) இணைந்து, முதலில் அரசவையில் (Council) அதிகாரமிக்க
பதவியளித்தனர். பின்னர், 372ம் ஆண்டில் இவரை "லிகுரியா" (Liguria)
மற்றும், "எமிலியா" (Emilia) ஆகிய பிராந்தியங்களின் "ரோமன் ஆளுநராக"
(Roman governor) நியமித்தனர். இப்பிராந்தியங்களின் தலைமையகமாக
மிலன் இருந்தது. இதுவே அக்காலத்தில் இத்தாலியின் இரண்டாம் தலைநகராக
கருதப்பட்டது.
அரசியலில் மிகவும் பிரபலமான நபராக அம்புரோஸ் கருதப்பட்டார். ரோமப்பேரரசன்
(Roman emperor) "முதலாம் வலேண்டினியனுடைய" (Valentinian I)
அரசவையில் இவர் மதிப்புமிக்கவராக இருந்த அம்புரோஸ் எப்போதும்
திருமணம் செய்துகொண்டது கிடையாது.
கி.பி. 374ம் ஆண்டு, மிலன் மறைமாவட்டத்தில் (Diocese of Milan)
அப்போதைய ஆரியனிச ஆயர் "ஆக்சென்ஷியஸ்" (Auxentius) என்பவர் இறந்தார்.
அப்போது அடுத்து அப்பதவியினை ஏற்கப்போவது யார் என்பது குறித்து
ஆரியனிச (Arians) கொள்கை உடையவர்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும்
(Nicene Christianity) இடையே பெரும் சிக்கல் உருவானது. அரச ஆளுநரான
அம்புரோஸ், கலகம் ஏற்படாதிருக்க இரு தரப்பினருக்கிடையே அமைதி
ஏற்படுத்த முனைந்தார். ஆனால் இப்பேச்சுவார்த்தையின்போது அனைவராலும்
அம்புரோஸ் ஆயராக தேர்வு செய்யப்பட்டார்.
ஆயராக விரும்பாததால் ஓடி ஒளிந்த அம்புரோஸ், பேரரசர் கிரேஷியன்
(Emperor Gratian) கடிதம் கொடுத்து அனுப்பிய காரணத்தால், வேறு
வழியின்றி ஆயர் பதவியினை ஏற்றார். அப்போது அவர்
திருமுழுக்குகூட பெற்றிருக்கவில்லை என்பதும் திருமுழுக்கு பெற
ஆயத்தம் செய்து கொண்டிருந்தார் என்பதுவும் குறிக்கத்தக்கது.
திருமுழுக்கு பெற்று, குருத்துவம் பெற்று, எட்டு நாட்களுக்குப்பின்
கி.பி. 374ம் ஆண்டு, டிசம்பர் மாதம், 7ம் நாள், ஆயர்நிலை
திருப்பொழிவு பெற்றார். இரண்டே ஆண்டுகள் ஆளுநராக பதவி வகித்த
அம்புரோஸ், கி.பி. 374ம் ஆண்டு, மிலன் நகரின் ஆயராக நியமிக்கப்பட்டார்.
இன்னாளிலேயே கிழக்கு மற்றும் மேற்கு கிறிஸ்தவ பிரிவுகள் இவரின்
விழா நாளை கொண்டாடுகின்றனர்.
ஆயராகப் பதவியேற்றதுமே சட்டென தம்மை ஆன்மீக வாழ்வுக்கு
மாற்றிக்கொண்ட அம்புரோஸ், அவரிடமிருந்த பணத்தை ஏழைகளுக்கு வழங்கினார்.
அவரது நிலம் அனைத்தையும் நன்கொடையாக வழங்கினார். தமது மூத்த சகோதரி
"மார்செல்லினாவுக்கு" (Marcellina) வேண்டியதை மட்டுமே
விட்டுவைத்தார். (ஆனால், பின்னர் அவரும் அருட்சகோதரியாக துறவறம்
பெற்றார்). குடும்பப் பொறுப்புகளை சகோதரர் "சாடிரஸ்" (Satyrus
of Milan) ஏற்றுக்கொண்டார். இதனால், அவருடைய செல்வாக்கு இன்னும்
அதிகரித்தது. பேரரசருக்கும் அவர்மீது கணிசமான அரசியல்
செல்வாக்கு இருந்தது. அம்புரோஸ், "மரணத்தின் நன்மை" (The
Goodness of Death) என்றோர் ஆய்வுக் கட்டுரை எழுதினர்.
அம்புரோஸ், மிலன் மறைமாவட்டத்தில் ஆரியனிச (Arianism) செயல்பாடுகளை
வலுக்கட்டாயமாக நிறுத்தினார். அக்காலத்தில், மேற்குலகில் அரிதாக
இருந்த கிரேக்க மொழியில் தமக்கிருந்த மிகுந்த அறிவைப் பயன்படுத்தி,
தமது அனுகூலத்திற்காக பழைய ஏற்பாட்டினை படித்தார். இவ்வறிவை பிரசங்கங்கள்
செய்வதற்கு உபயோகப்படுத்தினார். குறிப்பாக பழைய ஏற்பாட்டின்
வெளிப்பாடுகளில் விசேட கவனம் செலுத்தினார். அவரது சொல்லாட்சி
திறன், அதுவரை கிறிஸ்தவ பிரசங்கிகளை மோசமாக எண்ணியிருந்த அகுஸ்தினாரை
(Augustine of Hippo) கவர்ந்தது.
ஆயராக அரும்பணிகள் பல செய்துள்ள இவரது மறையுரைகள் மற்றும்
விவிலிய விளக்க உரைகள் இன்றளவும் பயன்படுகின்றன. கி.பி. 387ம்
ஆண்டு, உயிர்த்தெழுந்த திருவிழாவன்று புனிதர் அகுஸ்தீனுக்கு
திருமுழுக்கு அளித்தவர் இவரேயாவார். இவரை அகுஸ்தீன், தன்வரலாற்று
நூலில் போற்றி குறிப்பிட்டுள்ளார். ஆரியனிச பதிதக் கொள்கையினை
இவர் சீராக்க பாடுபட்டார்.
கி.பி. 397ம் ஆண்டு, ஏப்ரல் மாதம், 4ம் தேதி மரித்த இவரது உடல்,
மிலன் நகரிலுள்ள "அம்புரோஸ் பேராலயத்தில்" (Church of Saint
Ambrogio) பாதுகாக்கப்பட்டு வருகின்றது.
===============================================================================
* தூய அம்புரோஸ்
நிகழ்வு
அம்புரோஸ் மிலன் நகரில் ஆளுநராக இருந்தபோது அங்கு இருந்த (ஆரியப்
பதிதத்தைப் பின்பற்றிவந்த) ஆயர் திடிரென இறந்துபோனார். எனவே மிலன்
நகரின் ஆயர் பதவியானது வெற்றிடமாக இருந்தது. அந்த இடத்தில்
யாரை நியமிப்பது என்று திருச்சபைக்கும் ஒரு குழப்பமாக இருந்தது.
மக்களில் ஒருபிரிவினர் எங்களுக்கு ஒரு கத்தோலிக்க சபையைச்
சேர்ந்த ஆயர்தான் வேண்டும் எனவும், இன்னொரு பிரிவினர் எங்களுக்கு
ஆரிய பதிதத்தைப் பின்பற்றும் ஆயர்தான் வேண்டும் என கோஷம் எழுப்பிக்கொண்டிருந்தார்கள்.
அம்புரோஸ் தான் அதில் தலையிட்டு அந்தப் பிரச்சனைக்கு ஒரு
முற்றுப்புள்ளி வைத்தார். ஆம், அவர் இரு தரப்பினருக்கும் இடையே
பேச்சு வார்த்தை நடத்திக்கொண்டிருந்தபோது கூட்டத்திலிருந்த ஒரு
குழந்தை "அம்புரோஸ் தான் எங்கள் ஆயர்" என்று குரல் எழுப்பியது.
இக்குரலைக் கேட்ட எல்லாரும் அது கடவுளின் குரலாகவே நினைத்து,
சத்தமாக "அம்புரோஸ்தான் எங்கள் ஆயர" என்று உரக்கக் கத்தினர்.
இவ்வாறு மக்கள் அனைவரும் அம்புரோசை மிலன் நகரின் ஆயராக ஏற்றுக்கொண்டார்கள்.
ஆனால் அம்புரோசோ திருமுழுக்குக்கூட பெறாத தான் அதற்குத் தகுதியில்லை
என நினைத்து லியோன்சியஸ் என்ற அரச அலுவலரின் வீட்டுக்கு ஓடிப்போனார்.
இச்செய்தியைக் கேள்விப்பட்ட அரசர் வலன்டியன் அங்குசென்று அம்புரோசிடம்,
"நான் ஏற்படுத்திய ஆளுநரே! உங்களை மிலன் நகரின் ஆயராக எண்ணிப்
பார்ப்பதில் பெருமிதம் அடைகிறேன்" என்று சொல்லி, அவரை மிலன்
நகருக்குக் கூட்டி வந்து, அம்புரோசை மிலன் நகரின் ஆயராக
திருநிலைப்படுத்தப்பட பேருதவியாக இருந்தார்.
வாழ்க்கை வரலாறு
அம்புரோஸ் ஜெர்மனியில் உள்ள டிரியர் என்னும் இடத்தில் 340 ஆம்
ஆண்டு பிறந்தார். இவருடைய தந்தை ஆரேலியுஸ் அம்புரோசியுஸ் ஆளுநராக
இருந்தவர். அம்புரோசுக்கு ஒரு சகோதரி உண்டு. சிறுவயதிலேயே அம்புரோஸ்
தன்னுடைய தந்தையை இழந்ததால், இவருடைய குடும்பம் உரோமை நகருக்குக்
குடிபுகுந்தது. அம்புரோஸ் சிறுவயதிலே மிகவும் திறமையுள்ளவராக
விளங்கினார். சிறப்பாக எழுதுவதிலும் பேசுவதிலும் அவர் வல்லவராக
விளங்கினார். இவருடைய திறமையைப் பார்த்துதான் இவருக்கு 32 வயது
நடக்கும்போதே மன்னன் வலண்டின் இவரை மிலன் நகரின் ஆளுநராக நியமித்தார்.
374 ஆம் ஆண்டு மிலன் நகரின் ஆயர் இறந்துபோக அம்புரோஸ் மிலன்
நகரின் ஆயராக நியமிக்கப்பட்டார். அப்போது இவர் ஒரு சாதாரண
கிறிஸ்தவராகவே இருந்தார். அதன்பிறகுதான் இவர் தன்னையே தயார்படுத்திக்கொண்டு,
மிகச் சிறந்த ஓர் ஆயராக விளங்கினார். அம்புரோஸ் ஆயராக உயர்த்தப்பட்ட
பிறகு தன்னிடம் இருந்த உடமைகளில் ஒரு சிறு பகுதியை மட்டும் தன்னுடைய
சகோதரிக்குக் கொடுத்துவிட்டு மற்ற அனைத்தையும் ஏழைகளுக்குக்
கொடுத்துவிட்டார்.
ஆயராக உயர்ந்தபிறகு அம்புரோஸ் பல்வேறு பணிகளை சிறப்பாகச்
செய்தார். குறிப்பாக இவர் தன்னுடைய போதனையினால்
- மறையுரையினால்
- ஆரிய பதிதத்தைக் கடுமையாகச் சாடினார். இவருடைய மறையுரை எப்போதும்
மக்களின் மனதைத் தொடுவதாக இருந்தது. இவருடைய மறையுரையால் தொடப்பட்டவர்தான்
ஹிப்போ நகரின் ஆயரான தூய அகுஸ்தினார். அம்புரோஸ் எப்போதும் ஏழை
எளியவர் மீது அதிக அன்பும் அக்கறையும் கொண்டு வாழ்ந்துவந்தார்.
ஒரு சமயம் மிலன் நகரில் கடுமையான பஞ்சம் ஏற்பட்டபோது ஏழைகள் மிகவும்
கஷ்டப்பட்டார்கள். இதைப் பார்த்த ஆயர் அம்புரோஸ் ஆலயத்தில் இருக்கும்
தங்கப் பாத்திரங்களை விற்று, அதிலிருந்து கிடைத்த பணத்தை
வைத்து ஏழைகளுக்கு உதவினார். இவர் சொன்ன "ஏழைகளுக்குக்
கொடுக்கும்போது நீங்கள் உங்களுக்கு உரியவற்றைக் கொடுக்கவில்லை;
அவர்களுக்கு உரியவற்றைதான் அவர்களுக்குக் கொடுக்கிறீர்கள்"
(You are giving to the poor not what is yours; You are
giving them what is theirs) என்ற வார்த்தைகள் எப்போதும் நம்முடைய
சிந்தனைக்கு உரியதாக இருக்கின்றது.
ஆயர் அம்புரோஸ் ஒருபோதும் அதிகாரத்திற்குப் பயப்படாமல் கடவுளின்
வார்த்தையை எடுத்துரைத்து வந்தார். உரோமையை ஆண்ட ஜஸ்டினியன் என்ற
மன்னன் ஒருமுறை ஆயர் அம்புரோசைச் சந்தித்து, ஆரிய பதத்த்திற்கு
ஒத்துழைப்புத் தருமாறு கேட்டுக்கொண்டபோது, "நான் ஆண்டவர் ஒருவருக்கு
மட்டுமே அடிபணிவேனே தவிர வேறு யாருக்கும் அடிபணிய மாட்டேன்" என்று
தீர்க்கமாகச் சொல்லி வெளியே அனுப்பினார். அந்தளவுக்கு நாட்டு
அரசனுக்குக்கூட பயப்படாத துணிச்சல் ஆயர் அம்புரோசிடம் இருந்தது.
இப்படி உண்மையான கடவுளின் தூதராய் வாழ்ந்து வந்த அம்புரோஸ் 397
ஆம் ஆண்டு டிசம்பர் 7 ஆம் நாள் இந்த மண்ணுலக வாழ்வைத் துறந்தார்.
ஆயர் அம்புரோஸ் தொடக்கத் திருச்சபையில் தோன்றிய முக்கியமான
நான்கு மறைவல்லுனர்களில் ஒருவர். ஏனையோர் தூய அகுஸ்தினார், தூய
எரோனிமுஸ், பெரிய கிரகோரியார்.
கற்றுக்கொள்ளவேண்டிய பாடம்
தூய அம்புரோசின் விழாவைக் கொண்டாடும் இந்த நாளில் அவரிடமிருந்து
என்ன பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம் என சிந்தித்துப் பார்த்து
நிறைவு செய்வோம்
யாருக்கும் அஞ்சாமல், துணிவோடு நற்செய்திப் பணி செய்தல்
ஆயர் தூய அம்புரோஸ் தன்னுடைய வாழ்நாள் முழுவதும் துணிச்சல்
மிக்க ஒரு நற்செய்திப் பணியாளராக வாழ்ந்து வந்தார் என்று
சொன்னால் அது மிகையாகாது. அவர் கடவுளைத் தவிர வேறு யாருக்கும்
அஞ்சி வாழவில்லை.
ஒருசமயம் தியோடோசியுஸ் என்ற மன்னன் அடக்குமுறை என்ற பெயரில்
7000 கிறிஸ்தவர்களைக் கொன்றொழித்தான். இச்செய்தியைக் கேட்டு
ஆயர் அம்புரோஸ் கொதித்தெழுந்தார். "அவன்செய்த இந்த பாதகச் செயலுக்காக
எல்லாருக்கும் முன்பாக பொதுமன்னிப்புக் கேட்கவேண்டும், இல்லையென்றால்
அவன் திருச்சபையிலிருந்து தூக்கியெறியப்படுவான்" என்று முழங்கினார்.
தியோடோசியுசோ பயந்துபோய் மக்கள் அனைவருக்கும் முன்பாக விழுந்து
பொது மன்னிப்புக் கேட்டான். இவ்வாறு ஆயர் அம்புரோஸ் யாருக்கும்
பயப்படமால் அஞ்ச நெஞ்சத்தினராய் வாழ்ந்து வந்தார்.
அம்புரோசின் விழாவை நினைவுகூரும் இந்த நாளில், நாம் அவரைப்
போன்று துணிச்சலாக இறைவார்த்தையை எடுத்துரைக்கின்றோமா? அல்லது
துணிச்சல்மிக்க இறை மனிதர்களாக வாழ்கின்றோமா? என சிந்தித்துப்
பார்க்கவேண்டும். நற்செய்தியில் ஆண்டவர் இயேசுகூறுவார்,
"ஆன்மாவைக் கொல்ல இயலாமல், உடலை மட்டும் கொல்பவர்களுக்கு அஞ்ச
வேண்டாம். ஆன்மாவையும் உடலையும் நரகத்தில் அழிக்க வல்லவருக்கே
அஞ்சுங்கள்" என்று. இப்படிச் சொல்லிவிட்டு இயேசு தொடர்ந்து
சொல்வார், "காசுக்கு இரண்டு சிட்டுக்குருவிகள் விற்பதில்லையா?
எனினும் அவற்றுள் ஒன்றுகூட உங்கள் தந்தையின் விருப்பமில்லாமல்
தரையில் விழாது.... சிட்டுக் குருவிகள் பலவற்றையும்விட நீங்கள்
மேலானவர்கள். எனவே, அஞ்சாதீர்கள்" என்று (மத் 10:29 -31). ஆம்,
கடவுள் நம்மோடு இருக்கின்றார் என்பதை உணர்கின்றபோது, நாம்
யாருக்கும் அஞ்சத் தேவையில்லை என்பதே ஆண்டவர் இயேசுவும் ஆயர்
அம்புரோசின் வாழ்வும் நமக்கு எடுத்துக்கூறுகின்றது.
ஆகவே, தூய அம்புரோசின் விழாவைக் கொண்டாடும் இந்த நாளில் இறைப்பணியைத்
துணிவுடன் செய்வோம், எதிர்வரும் தடைகளை இறைவனின் துணையால்
துணிவோடு வெற்றிகொள்வோம். அதன்வழியாக வெற்றி
==================================================================================
தூய அம்புரோஸ் (டிசம்பர் 07)
நிகழ்வு
அம்புரோஸ் மிலன் நகரில் ஆளுநராக இருந்தபோது அங்கு இருந்த
(ஆரியப் பதிதத்தைப் பின்பற்றிவந்த) ஆயர் திடிரென இறந்துபோனார்.
எனவே மிலன் நகரின் ஆயர் பதவியானது வெற்றிடமாக இருந்தது. அந்த
இடத்தில் யாரை நியமிப்பது என்று திருச்சபைக்கும் ஒரு குழப்பமாக
இருந்தது. மக்களில் ஒருபிரிவினர் எங்களுக்கு ஒரு கத்தோலிக்க
சபையைச் சேர்ந்த ஆயர்தான் வேண்டும் எனவும், இன்னொரு பிரிவினர்
எங்களுக்கு ஆரிய பதிதத்தைப் பின்பற்றும் ஆயர்தான் வேண்டும் என
கோஷம் எழுப்பிக்கொண்டிருந்தார்கள். அம்புரோஸ் தான் அதில்
தலையிட்டு அந்தப் பிரச்சனைக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்தார்.
ஆம், அவர் இரு தரப்பினருக்கும் இடையே பேச்சு வார்த்தை
நடத்திக்கொண்டிருந்தபோது கூட்டத்திலிருந்த ஒரு குழந்தை
'அம்புரோஸ் தான் எங்கள் ஆயர்' என்று குரல் எழுப்பியது.
இக்குரலைக் கேட்ட எல்லாரும் அது கடவுளின் குரலாகவே நினைத்து,
சத்தமாக 'அம்புரோஸ்தான் எங்கள் ஆயர்' என்று உரக்கக் கத்தினர்.
இவ்வாறு மக்கள் அனைவரும் அம்புரோசை மிலன் நகரின் ஆயராக
ஏற்றுக்கொண்டார்கள்.
ஆனால் அம்புரோசோ திருமுழுக்குக்கூட பெறாத தான் அதற்குத்
தகுதியில்லை என நினைத்து லியோன்சியஸ் என்ற அரச அலுவலரின்
வீட்டுக்கு ஓடிப்போனார். இச்செய்தியைக் கேள்விப்பட்ட அரசர்
வலன்டியன் அங்குசென்று அம்புரோசிடம், "நான் ஏற்படுத்திய
ஆளுநரே! உங்களை மிலன் நகரின் ஆயராக எண்ணிப் பார்ப்பதில்
பெருமிதம் அடைகிறேன்" என்று சொல்லி, அவரை மிலன் நகருக்குக்
கூட்டி வந்து, அம்புரோசை மிலன் நகரின் ஆயராக
திருநிலைப்படுத்தப்பட பேருதவியாக இருந்தார்.
வாழ்க்கை வரலாறு
அம்புரோஸ் ஜெர்மனியில் உள்ள டிரியர் என்னும் இடத்தில் 340 ஆம்
ஆண்டு பிறந்தார். இவருடைய தந்தை ஆரேலியுஸ் அம்புரோசியுஸ்
ஆளுநராக இருந்தவர். அம்புரோசுக்கு ஒரு சகோதரி உண்டு.
சிறுவயதிலேயே அம்புரோஸ் தன்னுடைய தந்தையை இழந்ததால், இவருடைய
குடும்பம் உரோமை நகருக்குக் குடிபுகுந்தது. அம்புரோஸ்
சிறுவயதிலே மிகவும் திறமையுள்ளவராக விளங்கினார். சிறப்பாக
எழுதுவதிலும் பேசுவதிலும் அவர் வல்லவராக விளங்கினார். இவருடைய
திறமையைப் பார்த்துதான் இவருக்கு 32 வயது நடக்கும்போதே மன்னன்
வலண்டின் இவரை மிலன் நகரின் ஆளுநராக நியமித்தார்.
374 ஆம் ஆண்டு மிலன் நகரின் ஆயர் இறந்துபோக அம்புரோஸ் மிலன்
நகரின் ஆயராக நியமிக்கப்பட்டார். அப்போது இவர் ஒரு சாதாரண
கிறிஸ்தவராகவே இருந்தார். அதன்பிறகுதான் இவர் தன்னையே
தயார்படுத்திக்கொண்டு, மிகச் சிறந்த ஓர் ஆயராக விளங்கினார்.
அம்புரோஸ் ஆயராக உயர்த்தப்பட்ட பிறகு தன்னிடம் இருந்த
உடமைகளில் ஒரு சிறு பகுதியை மட்டும் தன்னுடைய சகோதரிக்குக்
கொடுத்துவிட்டு மற்ற அனைத்தையும் ஏழைகளுக்குக்
கொடுத்துவிட்டார்.
ஆயராக உயர்ந்தபிறகு அம்புரோஸ் பல்வேறு பணிகளை சிறப்பாகச்
செய்தார். குறிப்பாக இவர் தன்னுடைய போதனையினால்
மறையுரையினால் - ஆரிய பதிதத்தைக் கடுமையாகச் சாடினார். இவருடைய
மறையுரை எப்போதும் மக்களின் மனதைத் தொடுவதாக இருந்தது. இவருடைய
மறையுரையால் தொடப்பட்டவர்தான் ஹிப்போ நகரின் ஆயரான தூய
அகுஸ்தினார். அம்புரோஸ் எப்போதும் ஏழை எளியவர் மீது அதிக
அன்பும் அக்கறையும் கொண்டு வாழ்ந்துவந்தார். ஒரு சமயம் மிலன்
நகரில் கடுமையான பஞ்சம் ஏற்பட்டபோது ஏழைகள் மிகவும்
கஷ்டப்பட்டார்கள். இதைப் பார்த்த ஆயர் அம்புரோஸ் ஆலயத்தில்
இருக்கும் தங்கப் பாத்திரங்களை விற்று, அதிலிருந்து கிடைத்த
பணத்தை வைத்து ஏழைகளுக்கு உதவினார். இவர் சொன்ன "ஏழைகளுக்குக்
கொடுக்கும்போது நீங்கள் உங்களுக்கு உரியவற்றைக் கொடுக்கவில்லை;
அவர்களுக்கு உரியவற்றைதான் அவர்களுக்குக் கொடுக்கிறீர்கள்"
(You are giving to the poor not what is yours; You are
giving them what is theirs) என்ற வார்த்தைகள் எப்போதும்
நம்முடைய சிந்தனைக்கு உரியதாக இருக்கின்றது.
ஆயர் அம்புரோஸ் ஒருபோதும் அதிகாரத்திற்குப் பயப்படாமல்
கடவுளின் வார்த்தையை எடுத்துரைத்து வந்தார். உரோமையை ஆண்ட
ஜஸ்டினியன் என்ற மன்னன் ஒருமுறை ஆயர் அம்புரோசைச் சந்தித்து,
ஆரிய பதத்த்திற்கு ஒத்துழைப்புத் தருமாறு கேட்டுக்கொண்டபோது,
"நான் ஆண்டவர் ஒருவருக்கு மட்டுமே அடிபணிவேனே தவிர வேறு
யாருக்கும் அடிபணிய மாட்டேன்" என்று தீர்க்கமாகச் சொல்லி
வெளியே அனுப்பினார். அந்தளவுக்கு நாட்டு அரசனுக்குக்கூட
பயப்படாத துணிச்சல் ஆயர் அம்புரோசிடம் இருந்தது.
இப்படி உண்மையான கடவுளின் தூதராய் வாழ்ந்து வந்த அம்புரோஸ் 397
ஆம் ஆண்டு டிசம்பர் 7 ஆம் நாள் இந்த மண்ணுலக வாழ்வைத்
துறந்தார். ஆயர் அம்புரோஸ் தொடக்கத் திருச்சபையில் தோன்றிய
முக்கியமான நான்கு மறைவல்லுனர்களில் ஒருவர். ஏனையோர் தூய
அகுஸ்தினார், தூய எரோனிமுஸ், பெரிய கிரகோரியார்.
கற்றுக்கொள்ளவேண்டிய பாடம்
தூய அம்புரோசின் விழாவைக் கொண்டாடும் இந்த நாளில்
அவரிடமிருந்து என்ன பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம் என
சிந்தித்துப் பார்த்து நிறைவு செய்வோம்.
யாருக்கும் அஞ்சாமல், துணிவோடு நற்செய்திப் பணி செய்தல்
ஆயர் தூய அம்புரோஸ் தன்னுடைய வாழ்நாள் முழுவதும் துணிச்சல்
மிக்க ஒரு நற்செய்திப் பணியாளராக வாழ்ந்து வந்தார் என்று
சொன்னால் அது மிகையாகாது. அவர் கடவுளைத் தவிர வேறு யாருக்கும்
அஞ்சி வாழவில்லை.
ஒருசமயம் தியோடோசியுஸ் என்ற மன்னன் அடக்குமுறை என்ற பெயரில்
7000 கிறிஸ்தவர்களைக் கொன்றொழித்தான். இச்செய்தியைக் கேட்டு
ஆயர் அம்புரோஸ் கொதித்தெழுந்தார். "அவன்செய்த இந்த பாதகச்
செயலுக்காக எல்லாருக்கும் முன்பாக பொதுமன்னிப்புக்
கேட்கவேண்டும், இல்லையென்றால் அவன் திருச்சபையிலிருந்து
தூக்கியெறியப்படுவான்" என்று முழங்கினார். தியோடோசியுசோ
பயந்துபோய் மக்கள் அனைவருக்கும் முன்பாக விழுந்து பொது
மன்னிப்புக் கேட்டான். இவ்வாறு ஆயர் அம்புரோஸ் யாருக்கும்
பயப்படமால் அஞ்ச நெஞ்சத்தினராய் வாழ்ந்து வந்தார்.
அம்புரோசின் விழாவை நினைவுகூரும் இந்த நாளில், நாம் அவரைப்
போன்று துணிச்சலாக இறைவார்த்தையை எடுத்துரைக்கின்றோமா? அல்லது
துணிச்சல்மிக்க இறை மனிதர்களாக வாழ்கின்றோமா? என சிந்தித்துப்
பார்க்கவேண்டும். நற்செய்தியில் ஆண்டவர் இயேசுகூறுவார்,
"ஆன்மாவைக் கொல்ல இயலாமல், உடலை மட்டும் கொல்பவர்களுக்கு அஞ்ச
வேண்டாம். ஆன்மாவையும் உடலையும் நரகத்தில் அழிக்க வல்லவருக்கே
அஞ்சுங்கள்" என்று. இப்படிச் சொல்லிவிட்டு இயேசு தொடர்ந்து
சொல்வார், "காசுக்கு இரண்டு சிட்டுக்குருவிகள் விற்பதில்லையா?
எனினும் அவற்றுள் ஒன்றுகூட உங்கள் தந்தையின் விருப்பமில்லாமல்
தரையில் விழாது.... சிட்டுக் குருவிகள் பலவற்றையும்விட நீங்கள்
மேலானவர்கள். எனவே, அஞ்சாதீர்கள்" என்று (மத் 10:29 -31). ஆம்,
கடவுள் நம்மோடு இருக்கின்றார் என்பதை உணர்கின்றபோது, நாம்
யாருக்கும் அஞ்சத் தேவையில்லை என்பதே ஆண்டவர் இயேசுவும் ஆயர்
அம்புரோசின் வாழ்வும் நமக்கு எடுத்துக்கூறுகின்றது.
ஆகவே, தூய அம்புரோசின் விழாவைக் கொண்டாடும் இந்த நாளில்
இறைப்பணியைத் துணிவுடன் செய்வோம், எதிர்வரும் தடைகளை இறைவனின்
துணையால் துணிவோடு வெற்றிகொள்வோம். அதன்வழியாக வெற்றிகொள்வோம்.
- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம். |
|
|