Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

இயேசுவின் வழியினிலே

 

✠ புனிதர் விசெலினஸ் ✠(St. Vicelinus)
   
நினைவுத் திருநாள் : (டிசம்பர்/ Dec - 12)
✠ புனிதர் விசெலினஸ் ✠(St. Vicelinus)

 "ஹோல்ஸ்டீன்" அப்போஸ்தலர்/ "ஓல்டேன்பர்க்" ஆயர் :
(Apostle of Holstein and Bishop of Oldenburg)

பிறப்பு : கி.பி. 1086
ஹமெலின், லோவர் ஸக்சொனி, ஜெர்மனி
(Hamelin, Lower Saxony, Germany)

இறப்பு : டிசம்பர் 12, 1154
நியூமுன்ஸ்ட்டர், செல்ச்விக்-ஹோல்ஸ்டீன், ஜெர்மனி
(Neumnster, Schleswig-Holstein, Germany)

ஏற்கும் சமயம் :
ரோமன் கத்தோலிக்க திருச்சபை
(Roman Catholic Church)

நினைவுத் திருநாள் : டிசம்பர் 12

புனிதர் விசெலினஸ், ஜெர்மனியின் "ஹோல்ஸ்டீன்" (Holstein) என்னும் இடத்திலுள்ள "ஓல்டேன்பர்க்" (Oldenburg) மறைமாவட்ட ஆயர் ஆவார். இவரே "ஹோல்ஸ்டீன்" அப்போஸ்தலராகவும் மதிக்கப்படுகிறார்.

கி.பி. 1086ம் ஆண்டு, ஹமெலின் (Hamelin) என்னும் இடத்தில் பிறந்த இவர், சிறுவயதிலேயே அநாதையாகிப் போனார். அருகாமையில் இருந்த ஒரு கிராமத்தில் மத குருவாக பணியாற்றிய தமது மாமன் "லுடோல்ஃப்" (Ludolf) என்பவரின் பராமரிப்பில் வளர்ந்தார். விரைவிலேயே "படேர்போர்ன்" (Paderborn) என்ற நகருக்கு ரகசியமாகச் சென்ற இவர், அங்கேயே வாழத் தொடங்கினார். நண்பர்களையும் இருப்பிடங்களையும் உருவாக்கிக் கொண்ட இவர், அங்குள்ள பேராலய பள்ளியின் நிர்வாகத்தில் உதவி புரியத் தொடங்கினார்.

விரைவில் "ஹம்பர்க்-ப்ரேமென்" (Hamburg-Bremen) என்ற உயர்மறை மாவட்டத்தின் பேராயர் "ஃபிரெடெரிக்" (Archbishop Frederick) அழைப்பின் பேரில் அங்கே சென்ற அவர், அங்குள்ள பள்ளியின் ஆசிரியர் மற்றும் பள்ளி முதல்வர் பணிகள் செய்யப் பணிக்கப்பட்டார்.

கி.பி. 1122ம் ஆண்டு, "லாவோன்" (Laon) நகரில் தமது கல்வியை நிறைவு செய்தார். கி.பி. 1126ல் "மட்கேபர்க்" (Madgeburg) நகருக்கு பயணம் செய்ய தீர்மானித்த விசெலினஸ், அங்கு பேராயராக இருந்த "புனிதர் நார்பர்ட்" (St. Norbert) அவர்களைச் சந்தித்தார். பேராயர் தமக்கு குருத்துவ அருட்பொழிவு செய்வார் எனவும் அதனால் தாம் அங்கே அடிமைகளாக இருந்த மக்களிடம் மறைபோதனை செய்யவும் விரும்பினார். ஆனால், ஒருசில காரணங்களுக்காக அது நடக்காமல் போனது. ஆகவே, அவர் "ப்ரேமன்" (Bremen) நகருக்கு திரும்பினார். அங்கே, ஆயர் "அல்பேரோ" (Bishop Albero) அவருக்கு குருத்துவ அருட்பொழிவு வழங்கினார்.

"ஹம்பர்க்-ப்ரேமென்" (Hamburg-Bremen) உயர்மறை மாவட்டத்தின் பேராயர் "அடால்பெரோ" (Hamburg-Bremen's Archbishop Adalbero) "போலாபியன்" அடிமைகளிடையே (Polabian Slavs) மறைபோதனை செய்ய அவரை அனுப்பினார்.

கி.பி. 1127ம் ஆண்டு, "ப்ரேமன்" (Bremen) திரும்பிய விசெலினஸ் சிறப்பான முறையில் மறை போதனை செய்தார். அவரது பிரசங்கங்கள் மக்களை ஈர்த்தன. சக மத குருக்களும் அவருக்கு புதிதாக ஒரு துறவிமடம் உருவாக்க உதவினர்.

கி.பி. 1149ம் ஆண்டு, பேராயர் "முதலாம் ஹார்ட்விக்" (Archbishop Hartwig I) விசெலினசை ஆயராக நியமனம் செய்தார்.

கி.பி. 1152ம் ஆண்டு, பக்கவாத நோயினால் கடுமையாக பாதிக்கப்பட்ட விசெலினஸ், தமது மரணத்துக்கு முன்னர் சுமார் இரண்டு வருடங்கள் வலி வேதனைகளால் அவஸ்தைப்பட்டார். நோயில் துன்புற்ற விசெலினஸ் கி.பி. 1154ம் ஆண்டு மரித்தார்.
 

துன்பங்கள் தோன்றிடும் வேளையிலே நீ துணை தந்து காத்திட வேண்டுமம்மா