Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

இயேசுவின் வழியினிலே

 

✠ புனிதர் படபியொஸ் ✠(St. Patapios of Thebes)
   
நினைவுத் திருநாள் : (டிசம்பர்/ Dec - 08)
✠ புனிதர் படபியொஸ் ✠(St. Patapios of Thebes)

 துறவு மட நிறுவனர் :

பிறப்பு : கி.பி. நான்காம் நூற்றாண்டு
திபெஸ், எகிப்து
(Thebes, Egypt)

இறப்பு : எகிப்து (Egypt)

நினைவுத் திருநாள் : டிசம்பர் 8

புனிதர் படபியொஸ், நான்காம் நூற்றாண்டைச் சேர்ந்த துறவியும், கிறிஸ்தவ புனிதரும் ஆவார். இவரது நினைவுத் திருநாள் டிசம்பர் மாதம் எட்டாம் தேதி அனுசரிக்கப்படுகின்றது.

இவரது உடலின் மிச்சங்கள் (Relic) இன்றும் கிரேக்கத்தில் ஏதென்ஸ் நகரின் அருகேயுள்ள "லௌட்ரகி" (Loutraki, a spa town near Athens, Greece) என்னும் இடத்திலுள்ள பெண்களுக்கான "புனிதர் படபியொஸ் துறவு மடத்தில்" (Monastery of Saint Patapios) வைக்கப்பட்டுள்ளன.

கி.பி. நான்காம் நூற்றாண்டில் எகிப்து நாட்டின் "திபெஸ்" (Thebes) நகரில் வசதி வாய்ந்த கிறிஸ்தவ பெற்றோருக்கு பிறந்த புனிதர் படபியோஸ், சிறு வயதிலேயே பாலைவனங்களில் ஒரு துறவியாக ஒதுங்கி வாழ்ந்தார். அவரது அறிவுரைகளைக் கேட்கவும், அவரது போதனைகளைக் கேட்கவும் மக்கள் கூட்டம் அவரைக் காண சென்று கொண்டிருந்தது. அவரது வாழ்க்கையில் பிறகு, அவர் திபெஸ் நகரையும் பாலைவனங்களையும் விட்டு "காண்ஸ்டன்டினோபில்" (Constantinople) சென்றார். அங்கே அவர், பின்னாளில் புனிதர்களாக அருட்பொழிவு செய்யப்பட்ட "வாராஸ்" (Varas) மற்றும் "ரெவௌலஸ்" (Ravoulas) ஆகிய இரு துறவிகளைச் சந்தித்தார். புனிதர் ரெவௌலஸ், "ரோமனோஸ் நுழைவுவாயில்" (Gate of Romanos) என்னுமிடத்தில் துறவியாக இருந்தார். புனிதர் வாராஸ், "பெட்ரியோன்" (Petrion) என்னுமிடத்திலுள்ள "ஸ்நாபக அருளப்பரின் துறவு மடத்தை" (Monastery of St John the Baptist) கட்டியவராவார்.

"ப்லாச்செர்னா" (Blachernae) என்ற இடத்திலுள்ள உலர் மலைப் பகுதிகளில் வசித்த புனிதர் படபியோஸ், "எகிப்தியர்களின் துறவு மடத்தினை" (Monastery of the Egyptians) கட்டினார். இறுதியில் அவர் அங்கேயே மரித்தார்.

536ம் ஆண்டு, புனிதர் படபியோஸ் கட்டிய எகிப்தியர்களின் துறவு மடம் இடிக்கப்பட்டபோது, அவரது உடலின் மிச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டு, புனிதர் வாராஸால், "பெட்ரியோன்" (Petrion) என்னுமிடத்திலுள்ள "ஸ்நாபக அருளப்பரின் துறவு மடத்துக்கு" (Monastery of St John the Baptist) கொண்டு செல்லப்பட்டன.

"காண்ஸ்டன்டினோபில்" (Constantinople) நாட்டை ஆண்ட "பைஸன்டைன் பேரரசின்" (Byzantine Empire) இறுதி நூற்றாண்டான அக்கால கட்டத்தில், புனிதர் படபியோஸின் உடலின் மிச்சங்கள் அரச பாதுகாவலுடன் கொண்டுபோகப்பட்டன. அப்போதைய பேரரசர் "பதினொன்றாம் காண்ஸ்டன்டைன் பலையோலோகோஸ்" (Constantine XI Palaiologos) அவர்களின் தாயாரும் பின்னாளில் கத்தோலிக்க அருட்சகோதரியான "புனிதர் ஹிபோமோன்" (Saint Hypomone) அதற்கு பேருதவிகள் செய்தார்.

"ஓட்டமோன்" பேரரசால் (Ottoman Empire) காண்ஸ்டன்டினோபில் வெற்றிகொள்ளப்பட்டதன் பிறகு, கி.பி. 1453ம் ஆண்டில் புனிதர் படபியோஸின் மிச்சங்கள் "பலையோலோகோஸ்" பேரரசரின் உறவினர் ஒருவரால் கடத்தப்பட்டு தென் கிரேக்கப் பகுதியிலுள்ள "ஜெரனியா" மலையிலுள்ள (Mount Geraneia) ஒரு குகையில் மறைத்து வைக்கப்பட்டது. சில நூற்றாண்டுகளின் பிறகு அது கைவிடப்பட்டது.

கி.பி. 1904ம் ஆண்டு, "லௌட்ரகி" (Loutraki) நகர மக்களால் அந்த குகையும் அதில் மறைத்து வைக்கப்பட்டிருந்த மிச்சங்களும் கண்டு பிடிக்கப்பட்டன. பின்னாளில் புனிதர் ஜெரோம் அவர்களின் மாணவர்களில் ஒருவரான அருட்தந்தை "நேக்டரியோஸ்" (Father Nektarios) என்பவர் புனிதர் படபியோஸின் மிச்சங்கள் மீட்கப்பட்ட அதே குகையில் ஒரு பெரும் துறவு மடத்தினை அமைத்தார். அங்கேயே மிச்சங்கள் திரும்ப வைக்கப்பட்டன.

புனிதர் படபியோஸ் அற்புதங்கள் நிகழ்த்துவதில் பிரசித்தி பெற்றவராவார். அவர் நிகழ்த்திய அற்புதங்கள் அங்குள்ள துறவு மடத்திலேயே பட்டியலிடப்பட்டுள்ளன. அவர் பெயரால் இன்றளவும் அதிசயங்களும் அற்புதங்களும் நடக்கின்றன.
 

துன்பங்கள் தோன்றிடும் வேளையிலே நீ துணை தந்து காத்திட வேண்டுமம்மா