Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

இயேசுவின் வழியினிலே

 

✠ புனிதர் மரியா டி ரோஸா ✠(St. Maria Di Rosa)
   
நினைவுத் திருநாள் : (டிசம்பர்/ Dec - 15)
✠ புனிதர் மரியா டி ரோஸா ✠(St. Maria Di Rosa)

 நிறுவனர் :
(Foundress)

பிறப்பு : நவம்பர் 6, 1813
ப்ரேசியா, இத்தாலி
(Brescia, Italy)

இறப்பு : கி.பி. 1855
ப்ரேசியா, இத்தாலி
(Brescia, Italy)

ஏற்கும் சமயம் :
ரோமன் கத்தோலிக்க திருச்சபை
(Roman Catholic Church)

முக்திபேறு பட்டம் : மே 26, 1940
திருத்தந்தை பன்னிரெண்டாம் பயஸ்
(Pope Pius XII)

புனிதர் பட்டம் : ஜூன் 12, 1954
திருத்தந்தை பன்னிரெண்டாம் பயஸ்
(Pope Pius XII)

நினைவுத் திருநாள் : டிசம்பர் 15

"பௌலினா ஃபிரான்ஸிஸ்கா டி ரோஸா" (Paolina Francesca di Rosa) எனும் இயற்பெயர் கொண்ட இத்தாலிய புனிதரான "மரிய டி ரோஸா", கி.பி. 1839ம் ஆண்டு, இத்தாலியின் "ப்ரேசியா" (Brescia) என்ற இடத்திலுள்ள "கருணையின் பணிப்பெண்கள்" (Handmaids of Charity) என்ற துறவற இல்லத்தினை நிறுவியவர் ஆவார்.

இத்தாலியின் "ப்ரேசியா" (Brescia) எனும் இடத்தில், ஒரு வசதி வாய்ந்த குடும்பத்தில் பிறந்த பௌலினா", தமது ஆரம்பக் கல்வியை "வருகையின் சகோதரிகள்" (Visitation Sisters) நடத்தும் பள்ளியில் பயின்றார்.

பதினேழு வயதில் இவரது தாயார் மரணமடைந்ததால் பள்ளியை விட்ட இவர், தமது தந்தையின் வீட்டுப் பணிகள், ஆலை மற்றும் தோட்டங்களில் பணி புரியும் பெண்களை கவனிக்கும் பணிகளைச் செய்ய ஆரம்பித்தார்.

கி.பி. 1836ம் ஆண்டில் நேர்ந்த காலரா நோய்த் தொற்றின்போது, (Cholera Epidemic) அவர் "ப்ரேசியாவிலுள்ள" (Brescia) மருத்துவமனையில் சேவை செய்தார். இதன் காரணமாக, இவர் பெண்களுக்கான இல்லத்தினை நிர்வகிக்கும் அனுபவம் பெற்றார். காது கேளா மற்றும் பேசும் சக்தியற்ற இளம் பெண்களுக்கான (Residence for Deaf and Mute young ladies) ஒரு இல்லத்தினை தொடங்கினார்.

கி.பி. 1840ம் ஆண்டில், தமது முப்பது வயதில், சமய சமாஜத்தின் பரிணாம வளர்ச்சியுற்ற ஒரு சமூகத்தின் தலைமைப் பொறுப்பினை ஏற்றார். இச்சமயத்தில் இவர் "மரிய க்ரோஸிஃபிஸ்ஸா டி ரோஸா" (Maria Crocifissa di Rosa) என்ற பெயரை ஏற்றார்.

"கருணையின் பணிப்பெண்கள்" (Handmaids of Charity) இல்லத்தின் தலையாய பணியானது, ஏழைகளையும், நோயுற்றோரையும், துயருற்றோரையும், பராமரிப்பதேயாகும். இவர்கள் வட இத்தாலியில் ஏற்பட்ட போரின்போது காயமுற்றோருக்கு மருத்துவமனைகளில் பணிவிடை செய்தனர்.

இவரது ஆன்மீக அடித்தளமானது, கிறிஸ்துவின் சிலுவைப்பாடுகளின் சாயலாக அமைந்தது. இதுவே இவரது கற்பித்தலும், சிந்தனையாகவும் அமைந்தது. சிலுவைப்பாடு கொண்ட கிறிஸ்துவின் மீது கொண்ட இவரது அன்பின் அடிப்படையை இவர் தமது சேவையாக அர்ப்பணித்தார். இவரது இல்லங்கள் மற்றும் சேவைகளுக்கான திருத்தந்தையின் ஒப்புதல் கி.பி. 1850ம் ஆண்டில் அருளப்பட்டது. "பௌலினா ஃபிரான்ஸிஸ்கா டி ரோஸா" கி.பி. 1855ம் ஆண்டு, டிசம்பர் மாதம், 15ம் நாள் மரித்தார்.
 

துன்பங்கள் தோன்றிடும் வேளையிலே நீ துணை தந்து காத்திட வேண்டுமம்மா