✠ புனிதர் யூசெபியஸ் ✠(St. Eusebius of
Vercelli) |
|
|
|
நினைவுத் திருநாள் :
(டிசம்பர்/
Dec -
16) |
✠ புனிதர் யூசெபியஸ் ✠(St. Eusebius of
Vercelli)
✠ ஆயர்/ ஒப்புரவாளர் :
Bishop and Confessor)
✠பிறப்பு : மார்ச் 2, 283
சார்டினியா
(Sardinia)
✠இறப்பு : ஆகஸ்ட் 1, 371 (வயது 88)
வெர்செல்லி, பியேமொன்ட்
(Vercelli, Piemonte)
✠ஏற்கும் சமயம் :
ரோமன் கத்தோலிக்க திருச்சபை
(Roman Catholic Church)
✠நினைவுத் திருநாள் : டிசம்பர் 16
✠பாதுகாவல் : வெர்செல்லி (Vercelli)
வெர்செல்லி நகர புனிதர் யூசெபியஸ், இத்தாலியைச் சேர்ந்த ஆயரும்,
ஒப்புரவாளரும், ரோமன் கத்தோலிக்க திருச்சபையின் புனிதரும் ஆவார்.
"புனிதர் அதனாஸியஸுடன்" (Athanasius) இணைந்து, இயேசு
கிறிஸ்துவே உண்மையான ஜீவனுள்ள கடவுள் என்பதை ஆரியனிசத்துக்கு
எதிராக வலியுறுத்தி நிலைநாட்டியவர்.
இவரது தந்தையார் மறைசாட்சியாக மரித்ததன் பின்னர், இவரது தாயார்
இவரை ரோம் நகருக்கு அழைத்துச் சென்றார். கி.பி. 340ம் ஆண்டின்
தொடக்கத்தில் இவர் வட இத்தாலியின் "வெர்செல்லி" நகரின் ஆயராக
அருட்பொழிவு செய்யப்பட்டார். அங்குள்ள மக்களிடையே பக்தியையும்
வைராக்கியத்தையும் கற்பிப்பதில் தமது முழு சக்தியையும் செலவிட்டார்.
இவர் மரித்ததன் சுமார் இருபது வருடங்களின் பின்னர் "புனிதர் அம்புரோஸ்"
(St. Ambrose) அவர்கள் 'வெர்செல்லி' நகரின் ஜெப கூடங்களுக்கு
எழுதியிருந்த கடிதங்களின்படி, வெர்செல்லி நகரத்தின் சமூக தலைவர்கள்
அவரை தேர்ந்தெடுத்திருந்தனர்.
கி.பி. 354ம் ஆண்டில், "திருத்தந்தை லிபெரியஸ்" (Pope Liberius)
அவர்கள், யூசெபியசை "காக்லியரியின் ஆயர் லூஸிஃபர்" (Bishop
Lucifer of Cagliari) அவர்களுடன் இணைந்து, "புனிதர் அதனாசியஸ்"
(St. Athanasius of Alexandria) அவர்களின் நிலைப்பாடு மற்றும்
கிறிஸ்தவத்துக்கு எதிரான ஆரியனிசம் (Arianism) ஆகிய விடயங்களில்
ஒரு முடிவு காணும் பிரச்சினையில் வாதிடும் காரணங்களுக்காக பேரரசன்
"இரண்டாம் கன்ஸ்டான்ஷியசை" (Constantius II) சந்திப்பதற்காக
"மிலன்" (Milan) நகர் அனுப்பினார். இம்மாநாடு மிலன் நகரில்
கி.பி. 355ம் ஆண்டு நடந்தது. யூசெபியஸ் இச்சபையின் ஒரு பகுதி
மட்டும் கலந்துகொண்டார். இவரால் புனிதர் அதனாசியஸ் (St.
Athanasius of Alexandria) அவர்களின் நிலைப்பாட்டுக்கு எதிராக
வாதிடவோ, கண்டிக்கவோ இயலவில்லை. அதனால் இவர் உடனேயே நாடு கடத்தப்பட்டார்.
முதலில் "ஆரியன் ஆயர்" (Arian bishop) "பெட்ரோஃபிலஸின்" (Patrophilus)
மேற்பார்வையில் சிரியாவிலுள்ள (Syria) "சிதோபொலிஸ்" (Scythopolis)
எனுமிடத்துக்கு கடத்தப்பட்டார். இவர், ஆரியன் ஆயரை "சிறைக் காவலர்"
என்றழைத்தார். பின்னர், "கப்படோசியா" (Cappadocia) என்ற
நாட்டுக்கும், அதன்பின்னர், "மேல் எகிப்து" (Upper Egypt)
நாட்டிலுள்ள 'தெபெய்ட்' (Thebaid) என்ற இடத்திற்கும் நாடு கடத்தப்பட்டார்.
மேற்சொன்ன மாநாடு பற்றி இவர் எழுதிய பல கடிதங்கள் - இவர் நாடுகடத்தப்பட்டபோது
எழுதிய இரண்டு கடிதங்கள் உட்பட அனைத்தும் இன்றளவும் உள்ளன.
"பேரரசர் இரண்டாம் கான்ஸ்டான்ஸியசின்" (Emperor Constantius
II) ஆட்சி காலத்தில் யூசெபியஸ் அரை நிர்வாணமாக தெருக்களில்
இழுத்துச் செல்லப்பட்டார். பலவிதங்களிலும்
துன்புறுத்தப்பட்டார். ஆனாலும் இவர் கத்தோலிக்க விசுவாசத்தை
விட்டுத்தர முன்வரவில்லை.
பேரரசர் இரண்டாம் கான்ஸ்டான்ஸியசின் மரணத்தின் பின்னர்,
"ஜூலியன்' உரிமைகளைப் (accession of Julian) பெற்றதால், கி.பி.
362ம் ஆண்டு, நாடு கடத்தப்பட்ட ஆயர்கள் விடுவிக்கப்பட்டனர்.
அவர்கள் தத்தமது நாடுகளுக்கு திரும்பிச் செல்ல
அனுமதிக்கப்பட்டனர்.
அலெக்சாண்ட்ரியா வழியாக நாடு திரும்பிய யூசெபியஸ், கி.பி.
362ம் ஆண்டு புனிதர் அதனாசியஸின் மாநாட்டில் கலந்துகொண்டார்.
அங்கே தூய ஆவியாரின் பக்தியும், ஆச்சாரமான வழக்கமான இறைவனின்
அவதாரம் குறித்த கோட்பாடுகளும் உறுதிசெய்யப்பட்டன. ஆரியனிச
தலைவர்களின் அழுத்தம் காரணமாக அவர்களது கோட்பாடுகளில்
கையெழுத்திட்ட மனம் திருந்திய ஆயர்களை மன்னித்து மென்மையாக
கையாளவும் அம்மாநாடு முடிவு செய்தது. அத்துடன், ஆரியனிச
தலைவர்களை கடுமையாக தண்டிக்கவும் முடிவு செய்யப்பட்டது.
யூசெபியஸ் நாடு திரும்புகையில், மாநாட்டின் தீர்மானங்களை
"அந்தியோக்கியா" (Antioch) எடுத்துச் சென்றார். அங்கு
பிரிவினைகளை சரிசெய்யும் நம்பிக்கையும் அவருக்கு இருந்தது.
"அந்தியோக்கியாவின் யூஸ்டாதியஸின்" (Eustathius of Antioch)
ஆதரவாளர்கள் மற்றும் "மெலடியன்ஸின்" (Meletians) ஆதரவாளர்கள்
ஆகிய இரு பிரிவினரிடையே கிறிஸ்தவ திருச்சபை அன்று பிளவுபட்டு
கிடந்தது. யூசெபியஸால் பிரிவினைகளை சரிசெய்ய இயலாத நிலையில்
அவர் நாடு திரும்பினார். வழியில், பாரம்பரிய விசுவாசத்தினை
நிலைநாட்டும் முயற்சியிலேயே இருந்தார்.
363ம் ஆண்டு, வெர்செல்லி திரும்பிய அவர், ஆரியனிச மேற்கத்திய
திருச்சபையை தோற்கடிக்கும் முயற்சியில் சற்றும் மனம்
தளராதிருந்தார். "ஆரியன் ஆயர்" (Arian bishop) மிலனின்
"ஆக்சென்ஷியசின்" (Auxentius of Milan) எதிர்ப்பாளராகவே தமது
வாழ்நாளை முடித்துக்கொண்டார். வெர்செல்லி பேராலயம் (Vercelli
Cathedral) அவரது பெயரில் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. |
|
|