✠ புனிதர் யூலேலியா ✠(St. Eulalia of
Merida) |
|
|
|
நினைவுத் திருநாள் :
(டிசம்பர்/
Dec -
10) |
✠ புனிதர் யூலேலியா ✠(St. Eulalia of
Merida)
✠மெரிடா நகர் மறைசாட்சி :
(Martyr of Merida)
✠பிறப்பு : கி.பி. 290
மெரிடா, ஸ்பெயின்
(Merida, Spain)
✠இறப்பு : கி.பி. 304
மெரிடா, ஸ்பெயின்
(Merida, Spain)
✠ஏற்கும் சமயம் :
ரோமன் கத்தோலிக்க திருச்சபை
(Roman Catholic Church)
மரபுவழி கத்தோலிக்க திருச்சபை
(Orthodox Catholic Church)
✠முக்கிய திருத்தலம் :
சேன் சல்வேடோர் தேவாலயம்
(Cathedral of San Salvador)
✠நினைவுத் திருநாள் : டிசம்பர் 10
✠பாதுகாவல்:
மெரிடா, ஸ்பெயின், ஒவியேடோ, வீட்டை விட்டு ஓடிப்போனவர்கள்,
துன்புருத்தப்பட்டோர், கைம்பெண்.
(Mrida, Spain, Oviedo, Runaways, Torture Victims; Widows)
புனிதர் யூலேலியா, அந்நாளைய "லூசிடானியாவின்" (Lusitania) தலைநகரான
"எமெரிடாவில்" (Emerita) (தற்போதைய "ஸ்பெயின்" (Spain)
நாட்டின் "மெரிடா" (Mrida) நகர்) "டயோக்லேஷியன்" (Diocletian)
மற்றும் "மேக்ஸிமியன்" (Maximian) ஆகியோரால் துன்புறுத்தப்பட்டு
மறைசாட்சியாக கொல்லப்பட்ட, பதினாலே வயதான ஒரு இளம் ரோமன் கத்தோலிக்க
புனிதர் ஆவார்.
ஓர் பக்தியுள்ள கிறிஸ்தவ குடும்பத்தில் பிறந்த இவர், குழந்தைப்
பருவத்திலிருந்தே தனிமையில் செபிக்கும் வழக்கம்
கொண்டிருந்தார். அக்காலத்தில் கத்தோலிக்க எதிர்ப்பு நிலவிய காரணத்தால்,
அவரது தாயார் அவரை கிராமப் புறங்களில் மறைத்து வைத்திருந்தார்.
ஆனால் அதையும் மீறி ஓடிப்போன பதினாலே வயதான கன்னிப் பெண்ணான
யூலேலியா, "எமெரிடாவிலுள்ள" (Emerita) "கவர்னர் டாசியானின்" (Governor
Dacian) அரசவைக்கு சென்றார். அங்கே, பலர் அறிய தான் ஒரு கிறிஸ்தவர்
என பிரகடணம் செய்தார். பாகன் மதத்தினரையும் பேரரசன்
"மாக்ஸிமியானையும்" (Maximian) இழித்துப் பேசினார். அவரது தைரியம்
அனைவரையும் பிரமிக்கச் செய்தது. தம்மை மறைசாட்சியாக வதைத்துக்
கொல்லும்படி சவால் விடுத்தார்.
கிறிஸ்தவ மறையை பின்பற்றக்கூடாது என்றும், பாகன் மதத்துக்கு வந்துவிடும்படியும்
எவ்வளவோ நயமாகவும் பயமுறுத்தியும் பார்த்த நீதிபதியின் முயற்சிகள்
யாவும் வீணாயின. யூலேலியா இதை மீறியதால் சிறைப்பிடித்து செல்லப்பட்டார்.
படைவீரர்கள் இவரை கொண்டு சென்று தனிமையான சிறையில் அடைத்தனர்.
அவரின் ஆடைகள் களையப்பட்டன. வியக்கத்தக்க வகையில் பனித்துகள்கள்
அவரது நிர்வாண உடலை மறைத்து அவர் ஒரு தேவதை போல காட்சியளித்தார்.
உயிருள்ள உடலின்மேல் நெருப்பு மூட்டினர். நெருப்பினாலும்
புகையாலும் மூச்சு திணறியது. அப்போதும் கூட அவரின் நா இறைவனை
புகழ்ந்து கொண்டே இருந்தது. இதனால் ஆத்திரமடைந்த படைவீரர்கள்
அவரை அடுப்பிலிட்டு உயிரோடு எரித்துக் கொன்றனர். யூலேலியா
மரித்த வேளையில், அவரது வாயிலிருந்து ஒரு புறா பறந்து வெளியே
சென்றது.
யூலேலியாவின் கல்லறையின் மீது விரைவிலேயே ஒரு திருத்தலம்
அமைக்கப்பட்டது. ஐந்தாம் நூற்றாண்டின் ஸ்பேனிஷ்-ரோமன் கவிஞர்
"ப்ருடென்ஷியஸ்" (Prudentius) எழுதிய கவிதைகளில் யூலேலியாவை
புகழ்ந்து பாடியுள்ள ஏடுகள் இன்றளவும் உள்ளன. அவரது கவிதைகள்
யூலேலியாவின் புகழை மென்மேலும் உயர்த்தின. கி.பி. 560ம் ஆண்டு,
'மெரிடா' மறை மாவட்டத்தின் ஆயர் "ஃபிடேலிஸ்" (Bishop Fidelis
of Mrida) யூலேலியாவின் கல்லறை மீதிருந்த திருத்தலத்தை
புணரமைத்தார். ஸ்பெயின் நாட்டின் "விஸிகோதிக்" (Visigothic)
எனுமிடத்திலுள்ள இவரது திருத்தலம் மிகவும் பிரபலம் பெற்றது.
கி.பி. 780ம் ஆண்டு, இவரது உடலை "ஒவியேடோ" (Oviedo) என்னும்
இடத்திற்கு அரசன் "சிலோ" (King Silo) கொண்டு சென்றார். அது
தற்போது, கி.பி. 1075ம் ஆண்டு, "ஆறாம் அல்ஃபோன்சோ" (Alfonso
VI) தானமாக அளித்த அரபு வெள்ளி சவப்பேழையில் (Coffin of Arab
silver) இருக்கிறது. |
|
|