Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

இயேசுவின் வழியினிலே

 

✠புனிதர் யூச்சரியஸ் ✠(St. Eucharius of Trier)
   
நினைவுத் திருநாள் : (டிசம்பர்/ Dec - 08)
✠புனிதர் யூச்சரியஸ் ✠(St. Eucharius of Trier)

டிரையர் மறைமாவட்ட முதல் ஆயர் :
(First Bishop of Trier)

பிறப்பு : ----

இறப்பு : கி.பி. 250

ஏற்கும் சமயம் :
ரோமன் கத்தோலிக்க திருச்சபை
(Roman Catholic Church)

நினைவுத் திருநாள் : டிசம்பர் 8

புனிதர் யூச்சரியஸ், டிரையர் மறைமாவட்ட முதல் ஆயராக (First Bishop of Trier)  வணங்கப்படுகிறார். மூன்றாம் நூற்றாண்டின் பிற்பகுதியில், வாழ்ந்திருந்த இவர், பழமையான புராணங்களின்படி, கிறிஸ்துவின் எழுபத்திரெண்டு சீடர்களில் ஒருவராவார். புனிதர் பேதுருவால் ஆயராக அருட்பொழிவு செய்விக்கப்பட்ட இவர், இரும்பு யுகத்தின்போது, "கௌல்" (Gaul) என்னும் மேற்கு ஐரோப்பாவின் பிராந்தியத்திற்கு மறைபரப்பும் பணிகளுக்காக அனுப்பப்பட்டார். இவருடன், "திருத்தொண்டர் வலேரியஸும்" (Deacon Valerius), "துணைத் திருத்தொண்டர் மெட்டர்னஸும்" (Subdeacon Maternus) நற்செய்தி அறிவிக்கும் பணிகளுக்காக அனுப்பப்பட்டனர்.

கிழக்கு ஃபிரான்சின் பண்பாட்டு மற்றும் வரலாற்று பிராந்தியமான "அல்ஸாசிலுள்ள" (Alsace) "ரைன்" (Rhine) எனும் ஐரோப்பிய நதி படுக்கைக்கும், பின்னர் அங்கிருந்து "எல்லேலும்" (Ellelum) எனும் இடத்திற்கும் வந்தபோது, "துணைத் திருத்தொண்டர் மெட்டர்னஸும்" (Subdeacon Maternus) மரித்துப்போனார். புனிதர் பேதுருவிடமே திரும்பி விரைந்த அவரது தோழர்களிருவரும், இறந்தவரை உயிருடன் மீட்டுத் தருமாறு அவரை வேண்டினர். புனிதர் பேதுரு, யூச்சரியஸுக்கு தன்னுடைய வல்லமையை தந்தருளினார். அதனால் தொடப்பட்டபோது, நாற்பது நாட்களாக கல்லறையில் இருந்த மெட்டர்னஸ் உயிரோடு திரும்பினார். அதன்பின்னர், "ஜென்டைல்" (Gentile) எனப்படும் யூதரல்லாத இன மக்கள், பெருமளவில் கத்தோலிக்கர்களாக மனமாற்றம் செய்விக்கப்பட்டனர்.

பல்வேறு ஆலயங்காலை நிறுவயதன்பின்னர், தோழர்கள் மூவரும் "டிரையர்" (Trier) மாகாணத்திற்கு சென்றனர். அங்கே, சுவிசேஷ பணிகள் மிக விரைவாக முன்னேறி வந்தது. யூச்சரியஸ், தமது ஆயர் குடியிருப்புக்காக அந்த நகரத்தையே தேர்ந்தெடுத்தார். புராணத்தில் தொடர்புடைய மற்ற அற்புதங்களுடன், அவர் இறந்தவர் ஒருவரை உயிரோடு எழுப்பினார். ஒரு தேவதூதன், அவருடைய மரணவேளை நெருங்கி வந்ததையும், வலேரியஸை அவருடைய வாரிசாக சுட்டிக்காட்டினார்.

ஆயராக இருபத்தைந்து வருடங்களுக்கும் மேலாக பணியாற்றிய யூச்சரியஸ், டிசம்பர் மாதம் எட்டாம் தேதி, மரணமடைந்தார். நகருக்கு வெளியேயிருந்த தூய யோவான் தேவாலயத்தில் (Church of St. John) அவர் நல்லடக்கம் செய்யப்பட்டார்.
 

துன்பங்கள் தோன்றிடும் வேளையிலே நீ துணை தந்து காத்திட வேண்டுமம்மா