Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

இயேசுவின் வழியினிலே

 

✠ புனிதர் எக்வின் ✠(St. Egwin of Evesham)
   
நினைவுத் திருநாள் : (டிசம்பர்/ Dec - 30)
✠ புனிதர் எக்வின் ✠(St. Egwin of Evesham)

 துறவி, ஆயர், நிறுவனர் :
(Monk, Bishop and Founder)

பிறப்பு : ---

இறப்பு : டிசம்பர் 30, 717
ஈவ்ஷாம் துறவு மடம்
(Evesham Abbey)

ஏற்கும் சமயம் :
ரோமன் கத்தோலிக்க திருச்சபை
(Roman Catholic Church)

முக்கிய திருத்தலம் :
ஈவ்ஷாம் துறவு மடம்
(Evesham Abbey)

நினைவுத் திருநாள் : டிசம்பர் 30

புனிதர் எக்வின், ஒரு "பெனடிக்டைன் துறவியும்" (Benedictine monk), "இங்கிலாந்து" (England) நாட்டிலுள்ள "வார்செஸ்டர்" (Worcester) மறைமாவட்டத்தின் ஆயருமாவார்.

இங்கிலாந்தின் "வார்செஸ்டர்" (Worcester) மாகாணத்தின் பிரபுக்கள் குடும்பத்தில் பிறந்த எக்வின், "மெர்சியன்" அரச வம்சத்தைச் (Descendant of Mercian kings) சேர்ந்தவர் ஆவார். அவர் "மெர்சியாவின்" அரசன் (King of Mercia) "எத்தெல்ரெட்டின்" (thelred) மருமகனாக இருக்கலாம் என்று நம்பப்படுகின்றது.

ஏற்கனவே அவர் ஒரு துறவியாகையால், அரச வம்சத்தினரும், குருமாரும், பொதுமக்களும் இணைந்து, அவர் ஆயராக பொறுப்பேற்கவேண்டுமென வலியுறுத்தினர். அவர், கி.பி. 693ம் ஆண்டுக்குப் பின்னர் ஆயராக அருட்பொழிவு பெற்றார்.

ஒரு ஆயராக கைம்பெண்களுக்கும், அனாதைகளுக்கும், நியாயமான நீதிபதிகளுக்கும் பாதுகாவலராக இருந்தார். கிறிஸ்தவ அறநெறியை ஏற்றுக்கொள்வதன் மூலம், குறிப்பாக கிறிஸ்தவ திருமணம் மற்றும் மதகுருக்களுக்காய் உள்ளூர் மக்களுடன் அவர் போராடினார். இவர் மேற்கொண்ட கடுமையான ஒழுக்க நடவடிக்கைகள், இவர்மீது மக்களிடையே ஒரு வெறுப்பை உருவாக்கியது. அரசன் "எத்தெல்ரெட்" (thelred) இவருடைய நண்பரான காரணத்தால், இறுதியில் அவரது திருச்சபை மேலதிகாரிகளுக்கு வழிகாட்டினார். திருத்தந்தையின் நியாய நிருபணம் வேண்டி, ரோம் நகருக்கு திருயாத்திரை மேற்கொண்டார். திருயாத்திரைக்கான பயண தயாரிப்பின்போது, தமது கால்கள் இரண்டிலும் விலங்கிட்டு பூட்டினார். அதன் சாவியை "ஏவன்" (River Avon) நதியில் எறிந்தார்.

எக்வினும் அவரது தோழர்களும் "ஆல்ப்ஸ்" (Alps) மலையை கடக்கும் வேளையில், அவர்களுக்கு தாகம் எடுக்கத் தொடங்கியது. ஆயரின் பரிசுத்தத்தை ஒப்புக் கொள்ளாத அவரது தோழர்களில் ஒருவர், மோசே பாலைவனத்தில் ஒருமுறை செய்ததுபோல் தண்ணீருக்காக ஜெபிப்பதை அவமானமாக நினைத்தார். ஆனால் அவரை விசுவசித்த மற்றவர்கள், அவிசுவாசிகளைக் கடிந்துகொண்டு, உண்மையான நம்பிக்கை மற்றும் நம்பிக்கையுடன் வேறுவிதமான குரலில் அவரைக் கேட்டார்கள். எக்வின் தரையில் சாஷ்டாங்கமாய் விழுந்து செபித்தார். செபித்து எழுகையில், சுத்தமான பளிங்குபோன்ற நீரோடை பீரிட்டு ஊற்றெடுப்பதைக் கண்டனர்.

ரோம் நகரில், அப்போஸ்தலர்களின் கல்லறையின்மீது செபிக்கும்போது, அவர்களுடைய தோழர்களில் ஒருவர், "ஏவன்" (River Avon) நதியில் இவர் விட்டெறிந்த சாவி, இத்தாலியின் "டிபேர்" (Tiber) நதியில் பிடிக்கப்பட்ட மீனின் வாயில் இருந்ததாக கொண்டுவந்து கொடுத்தார். எக்வின் தமக்குத் தாமே போட்டுக்கொண்ட கால் விலங்குகளை விலக்கிக்கொண்டார். உடனடியாக திருத்தந்தையிடமிருந்து, அவரது எதிரிகளுக்கெதிரான ஒரு அதிகாரப்பூர்வ வெளியீடை பெற்றார்.

இங்கிலாந்து திரும்பிய எக்வின், "ஈவ்ஷாம்" (Evesham Abbey) துறவு மடத்தினை நிறுவினார். இது, மத்தியகால இங்கிலாந்தின் மிகப்பெரிய பெனடிக்டைன் துறவு இல்லமாக மாறியது. இம்மடம், அன்னை கன்னி மரியாளுக்கு அர்ப்பணிக்கப்பட்டது. தாம் நிறுவிய மடாலயத்திலேய அவர் மரித்தார். அவரது உடல் அங்கேயே அடக்கம் செய்யப்பட்டது.
 

துன்பங்கள் தோன்றிடும் வேளையிலே நீ துணை தந்து காத்திட வேண்டுமம்மா