Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

இயேசுவின் வழியினிலே

 

✠ ப✠ புனிதர் அடெலெய்ட் ✠(St. Adelaide of Italy)
   
நினைவுத் திருநாள் : (டிசம்பர்/ Dec - 16)
✠ புனிதர் அடெலெய்ட் ✠(St. Adelaide of Italy)

 தூய ரோமப் பேரரசி :
(Holy Roman Empress)

பிறப்பு : கி.பி. 931
ஆர்பே, மேல் பர்கண்டி
(Orbe, Upper Burgundy)

இறப்பு : டிசம்பர் 16, 999 (வயது 68)
செல்ட்ஸ், அல்சேஸ்
(Seltz, Alsace)

ஏற்கும் சமயம் :
கத்தோலிக்க திருச்சபை
(Catholic Church)
கிழக்கு மரபுவழி திருச்சபை
(Eastern Orthodox Church)

புனிதர் பட்டம் : கி.பி. 1097
திருத்தந்தை இரண்டாம் அர்பன்
(Pope Urban II)

நினைவுத் திருநாள் : டிசம்பர் 16

பாதுகாவல் :
துஷ்பிரயோகம் செய்யப்பட்டவர்கள்; மணப்பெண்; பேரரசிகள்; நாடு கடத்தும் தண்டனை; மாமியார் பிரச்சினைகள்; தாய் தந்தையராக இருக்கும் நிலை; பெரிய குடும்பங்களின் பெற்றோர்; இளவரசிகள்; கைதிகள்; இரண்டாவது திருமணம்; வளர்ப்புப் பெற்றோர்; விதவைகள்

"இத்தாலியின் அடெலெய்ட்" (Adelaide of Italy) என்றும், "பர்கண்டியின் அடெலெய்ட்" (Adelaide of Burgundy) என்றும் அழைக்கப்படும் இப்புனிதை, "தூய ரோமப் பேரரசர் ஓட்டோ தி கிரேட்" (Holy Roman Emperor Otto the Great) அவர்களை திருமணம் செய்துகொண்டதால் "தூய ரோமப் பேரரசி" (Holy Roman Empress) ஆனார். இவர்களிருவரும், கி.பி. 962ம் ஆண்டு, ஃபிப்ரவரி 2ம் நாளன்று, திருத்தந்தை பன்னிரெண்டாம் ஜான் (Pope John XII) அவர்களால் முடிசூடப்பட்டார்கள். இவர், தமது பேரனின் பாதுகாவலியாக இருந்த காரணத்தால், கி.பி. 991-995ம் ஆண்டு காலகட்டத்தில், ரோமப் பேரரசின் ஆட்சிப் பிரதிநிதியாகவும் (Regent of the Holy Roman Empire) இருந்தார்.

பண்டைய மேல் பர்கண்டி இராச்சியத்தின் (Kingdom of Upper Burgundy) (தற்போதைய நவீன சுவிட்சர்லாந்து) "ஆர்பே கோட்டையில்" (Orbe Castle) பிறந்த இவர், ஐரோப்பிய பிரபுக்கள் குடும்பமான "மூத்த வெல்ஃப் குடும்பத்தின்" (Elder House of Welf) உறுப்பினரான "இரண்டாம் ரூடோல்ஃப்" (Rudolf II of Burgundy) என்பவரின் மகளாவார். இவரது தாயார், "அலேமன்னிக் ஹன்ஃ பிரைட்டிங் வம்சத்தைச்" (Alemannic Hunfriding dynasty) சேர்ந்த "பெர்த்தா" (Bertha of Swabia) ஆவார். இவர், தமது பதினைந்து வயதில், தமது தந்தையின் இத்தாலியின் போட்டியாளராகிய "ஹக்" (Hugh of Provence) என்பவரின் மகனான "இரண்டாம் லோத்தைர்" (Lothair II) என்பவரை திருமணம் செய்துகொண்டார். இந்த திருமணம், இருவரின் தந்தையரினிடையே சமாதானத்தை ஏற்படுத்த வடிவமைக்கப்பட்ட ஒரு அரசியல் தீர்வுக்கான ஒரு பகுதியாக இருந்தது. இவர்களுக்கு கி.பி. சுமார் 948ம் ஆண்டு பிறந்த குழந்தையே "எம்மா" (Emma of Italy) ஆகும். எம்மா, பின்னாளில் மேற்கத்திய ஃ பிரான்ஸியாவின் மகாராணி (Queen of Western Francia) ஆவார்.

மிகப் பெரிய அரசியல் மற்றும் அரசு பாரம்பரிய பின்னணிகள் கொண்ட பேரரசி, அவரது மருமகனும், பர்கண்டியின் அரசனுமான "மூன்றாம் ரூடோல்ஃப்" (Rudolf III) என்பவரை ஆதரிப்பதற்காக பர்கண்டிக்கு (Burgundy) செல்லும் வழியில், கி.பி. 999ம் ஆண்டு, டிசம்பர் மாதம், 16ம் நாளன்று, "செல்ஸ்" மடாலயத்தில் (Selz Abbey) மரித்தார். ஆயிரம் நாட்களுக்கும் குறைவான நாட்களே கிறிஸ்துவின் வருகைக்கு இருப்பதாக எண்ணியிருந்தார். திருச்சபைக்கும் சமாதானப் பணிகளுக்குமான சேவைகளில் விசுவாசத்துடன் தம்மை அர்ப்பணித்திருந்தார். அதே விசுவாசத்துடன் இரண்டு பேரரசுகளுக்கும் பாதுகாவலராகவும் இருந்தார். அடிமைகளை மனமாற்றம் செய்வதிலும் அவர் ஆர்வம் காட்டினார். மத்திய ஐரோப்பாவின் சமய கலாச்சாரத்தை நிர்மாணிப்பதில் ஆரம்பகால இடைக்காலத்தின் முடிவில், மரபுவழி கத்தோலிக்க திருச்சபையின் பணிகளில் கிட்டத்தட்ட ஒரு உருவகமாக இருந்தார். வடமேற்கு ஜெர்மனியில் (Northwestern Germany) ஒரு தொழில்துறை நகரமான "ஹானோவரில்" (Hanover) உள்ள ஒரு திருத்தலத்தில் இவரது சில புதைபடிவங்கள் பாதுகாக்கப்படுகின்றன.
 

துன்பங்கள் தோன்றிடும் வேளையிலே நீ துணை தந்து காத்திட வேண்டுமம்மா