✠அருளாளர் திருத்தந்தை 5ம் அர்பன்
✠ (Blessed Pope Urban V) |
|
|
|
நினைவுத் திருநாள் :
டிசம்பர்
19 |
*
200வது திருத்தந்தை : (200th Pope)
*
ஆறாவது அவிக்னான் திருத்தந்தை :(6th
Avignon Pope)
*
பிறப்பு : கி.பி. 1310
கிரிஸாக், லான்குடோக், ஃபிரான்ஸ் அரசு
(Grizac, Languedoc, Kingdom of France)
*
இறப்பு : டிசம்பர் 19, 1370 (வயது 60)
அவிக்னான், திருத்தந்தையர் மாநிலங்கள்
(Avignon, Papal States)
*
ஏற்கும் சமயம் :
ரோமன் கத்தோலிக்க திருச்சபை (Roman Catholic Church)
*
முக்திபேறு பட்டம் : மார்ச் 10, 1870
திருத்தந்தை ஒன்பதாம் பயஸ் (Pope Pius IX)
*
பாதுகாவல் :
கட்டிட கலைஞர் (Architects), கல்வியாளர்கள் (Educators), ஆசீர்வாதப்பர்
சபைத் துறவியர் (Benedictines), மறைப்பணியாளர்கள் (Missionaries)
"கில்லௌம் டி க்ரிமோர்ட்" (Guillaume de Grimoard) எனும் இயற்பெயர்
கொண்ட திருத்தந்தை அருளாளர் ஐந்தாம் அர்பன், கத்தோலிக்க திருச்சபையின்
திருத்தந்தையாக 1362ம் ஆண்டு, செப்டம்பர் மாதம், 28ம் நாள் முதல்
1370ம் ஆண்டில் தமது மரணம்வரை ஆட்சி செய்தவர் ஆவார். பெனடிக்டைன்
(Order of Saint Benedict) சபையைச் சேர்ந்த இவர், அன்றைய
"ஆர்ல்" (Kingdom of Arles) அரசின், (தற்போதைய ஃபிரான்ஸ்)
"அவிக்னான்" எனுமிடத்திலிருந்து ஆட்சி செய்த ஏழு திருத்தந்தையரில்
ஆறாவது திருத்தந்தை (Sixth Avignon Pope) ஆவார்.
இவர் பேரறிஞராகவும், புனிதராகவும் பலராலும் போற்றப்பட்டவர்.
திருத்தந்தையாக தேர்வான பின்பும் இவர் பெனடிக்டைன் சபை சட்டங்களைப்
பின்பற்றி எளிய வாழ்வு வாழ்ந்தார். திருத்தந்தை ஒன்பதாம் பயஸ்
1870ம் ஆண்டு, இவருக்கு அருளாளர் பட்டம் அளித்தார்.
"அவிக்னான்" எனுமிடத்திலிருந்து ஆட்சிசெய்த ஏழு திருத்தந்தையருள்
முக்திபேறு பட்டம் பெற்ற ஒரே திருத்தந்தை இவர் ஆவார்.
இவர் தமது ஆட்சிக்காலத்தில் திருச்சபையினைச் சீரமைக்க முயன்றார்.
பல ஆலயங்களையும் மடங்களையும் புதுப்பித்தார். இவர் தமது ஆட்சிப்பொறுப்பை
ஏற்கும்போது கொண்ட குறிக்கோளான, பிரிந்து சென்ற இருபெரும் கிழக்கத்திய
மற்றும் மேற்கத்திய திருச்சபைகளை (Eastern and Western
Churches) ஒன்றிணைக்க பெரிதும் முயன்றார். ஆயினும் இவரின் முயற்சி
பலனளிக்கவில்லை.
1310ம் ஆண்டு, அப்போதைய ஃபிரான்ஸ் பிராந்தியத்தில் பிறந்த இவரது
தந்தை, "பெல்லேகார்ட்" (Lord of Bellegarde) என்ற குறுநில பிரபு
ஆவார். இவரது தாயாரின் பெயர் "அம்ஃபெலிஸ்" (Amphlise de
Montferrand) ஆகும். இவருக்கு, "எட்டியேன்" (tienne) மற்றும்
பின்னாளைய கர்தினால் "ஆங்கிலிக்" (Anglic), எனும் இரண்டு சகோரர்களும்,
"டெல்ஃபின்" (Delphine) என்றொரு சகோதரியும் இருந்தனர்.
தமது பதினேழாம் வயதில், தமது ஊரிலேயே அமைந்துள்ள சிறு துறவிகள்
மடத்தில் பெனடக்டைன் (Benedictine monk) துறவியாக இணைந்தார்.
1334ம் ஆண்டு குருத்துவ அருட்பொழிவு பெற்ற இவர், இலக்கியமும்
சட்டமும் பயின்றார். 1342ம் ஆண்டு, அக்டோபர் மாதம், 31ம் தேதி,
"கிறிஸ்தவச் சமயச் சட்டத்தின்" மறைவல்லுனர் (Doctorate in
Canon Law) பட்டம் வென்றார்.
1362ம் ஆண்டு, திருத்தந்தை "ஆறாம் இன்னொசென்ட்" (Pope Innocent
VI) அவர்களின் மரணத்தின்பின் நடந்த தேர்தலில் வெற்றி பெற்ற
"கில்லௌம் டி க்ரிமோர்ட்" திருத்தந்தையாக "ஐந்தாம் அர்பன்" என்ற
பெயரை ஏற்றார். மிகவும் எளிய வாழ்வினை வாழ்ந்த திருத்தந்தை ஐந்தாம்
அர்பன், 1370ம் ஆண்டு, டிசம்பர் மாதம், 19ம் நாள், மரணமடைந்தார். |
|
|