✠ அருளாளர் நிகோலஸ் ஸ்டெனோ ✠(Blessed Nicolas Steno) |
|
|
|
நினைவுத் திருநாள் :
(டிசம்பர்/
Dec -
05) |
✠ அருளாளர் நிகோலஸ் ஸ்டெனோ ✠(Blessed
Nicolas Steno)
✠ மருத்துவர்/ கத்தோலிக்க ஆயர் :
(Physician and Catholic Bishop)
✠பிறப்பு : ஜனவரி 1, 1638
கோபென்ஹகன், டென்மார்க்-நார்வே
(Copenhagen, Denmark-Norway)
✠இறப்பு : நவம்பர் 25, 1686 (வயது 48)
ச்வேரின், மெக்லன்பர்க்
(Schwerin, Duchy of Mecklenburg-Schwerin)
✠ஏற்கும் சமயம் :
ரோமன் கத்தோலிக்க திருச்சபை
(Roman Catholic Church)
✠முக்திபேறு பட்டம்: அக்டோபர் 23, 1988
திருத்தந்தை 2ம் ஜான்பவுல்
(Pope John Paul II)
✠நினைவுத் திருநாள் : டிசம்பர் 5
"நீல்ஸ் ஸ்டீன்சென்" (Niels Steensen) எனும் இயற்பெயர் கொண்ட
அருளாளர் நிகோலஸ் ஸ்டெனோ, ஒரு "டேனிஷ்" விஞ்ஞானி (Danish
Scientis) ஆவார். உடற்கூறியல், புதைபடிமவியல், புவியியல் ஆகியவற்றில்
முன்னோடியாகத் திகழ்ந்த இவர் பின்னாளில் "முன்ஸ்டர்" (Mnster)
மறைமாவட்டத்தில் கத்தோலிக்க ஆயராக பணியாற்றினார். இவர் அறிவியலில்
பாரம்பரிய நூல்களைக் கற்றவர். நிகோலஸ் ஸ்டெனோ, நவீன புதைபடிமவியல்
(Modern Stratigraphy) மற்றும் நவீன புவியியல் (Modern Geology)
ஆகியனவற்றின் கண்டுபிடிப்பாளர் என்ற பெயர் பெற்றவர்.
கி.பி. 1638ம் ஆண்டு, புத்தாண்டு தினத்தில், "டென்மார்க்" (Denmark)
நாட்டின் தலைநகரான "கோபென்ஹகன்" (Copenhagen) நகரில், ஒரு லூதரன்
கிறிஸ்தவ குடும்பத்தில் பிறந்த அருளாளர் நீல்ஸ் ஸ்டீன்செனின்
தந்தை ஒரு பொற்கொல்லர் ஆவார். "டென்மார்க்" அரசன் "நான்காம்
கிறிஸ்டியன்" (King Christian IV of Denmark) என்பவருக்காக தொடர்ந்து
பணியாற்றிய இவரது தந்தை பெயர், "ஸ்டீன் பெடேர்சென்" (Steen
Pedersen) ஆகும். இவரது தாயாரின் பெயர் "அன்னி நீல்ஸ்டட்டர்"
(Anne Nielsdatter) ஆகும். தமது மூன்று வயதிலேயே பெயர் அறியாத
ஒரு நோயால் தாக்குண்ட இவர், நோய் தீராததால் தனிமையிலே வாழ்ந்து
வந்தார். கி.பி. 1644ம் ஆண்டு, இவருக்கு ஆறு வயதாகையில், இவரது
தந்தை மரித்துப் போனார். இவரது தாயாரோ, வேறொரு பொற்கொல்லரை மறுமணம்
செய்துகொண்டார்.
ஸ்டெனோ, தமது பத்தொன்பது வயதில் "கோபென்ஹகன் பல்கலையில்" (University
of Copenhagen) இணைந்து மருத்துவம் கற்றார். மருத்துவ படிப்பை
பூர்த்தி செய்ததும் ஐரோப்பிய நாடுகள் முழுதும் பயணித்தார். இதனால்
இவருக்கு நெதர்லாந்து (Netherlands), ஃபிரான்ஸ் (France), இத்தாலி
(Italy) மற்றும் ஜெர்மனி (Germany) நாடுகளிலுள்ள முக்கிய மருத்துவர்கள்
மற்றும் விஞ்ஞானிகளுடன் தொடர்பு கிட்டியது. இந்த தாக்கங்கள்,
முக்கியமான அறிவியல் கண்டுபிடிப்புகள் செய்வதற்கும் அவரின்
சொந்த கூர்நோக்கும் சக்தியை உபயோகிப்பதற்கும் வழிநடத்தியது.
ஸ்டெனோவின் கேள்வி கேட்கும் குணம், அவரது மதம் சம்பந்தமான
பார்வையிலும் தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது. லூதரன் கிறிஸ்தவ
சபை குடும்பத்தில் பிறந்து வந்திருந்த அவர், ஆனாலும் அதன் போதனைகளை
கேள்விக்குட்படுத்தினார், ரோமன் கத்தோலிக்கத்தை எதிர்கொண்டபோது
பற்றியெரியும் பிரச்சினையாக மாறியது. திருச்சபை தந்தையர் மற்றும்
இயற்கை இயல்பான திறன்களைப் பயன்படுத்துவது உள்ளிட்ட இறையியல்
ஆய்வுகளை ஒப்பிட்டதன் பின்னர், லூதரனியம் அல்லாது, கத்தோலிக்கம்
தனது தொடர்ச்சியான ஆர்வத்துக்கு இன்னும் அதிகமான உணவை வழங்கிடுமென
முடிவு செய்தார். அத்துடன், மத்திய இத்தாலியின் "டுஸ்கனி" (Tuscany)
பிராந்தியத்தின் "லூக்கா" (Lucca) நகர பிரபுத்துவ பெண்மணியான
"லாவினியா" (Lavinia Cenami Arnolfini) என்பவரின் வற்புறுத்தலின்பேரில்,
1667ம் ஆண்டு, அனைத்து ஆன்மாக்கள் தினத்தன்று, கத்தோலிக்க
கிறிஸ்தவ விசுவாசத்தை ஏற்று கத்தோலிக்க மறையை தழுவினார்.
விஞ்ஞானத்தில் நாட்டம் கொண்டிருந்த ஸ்டெனோவின் ஆர்வம் இறையியல்
கற்பதில் மாறியது.
கி.பி. 1675ன் ஆரம்பத்தில் கத்தோலிக்க குருவாக வேண்டுமென்ற
ஆர்வம் கொண்டார். அதே வருடம் உயிர்த்தெழுதல் திருவிழாவன்று
குருத்துவ அருட்பொழிவு பெற்றார். பின்னாளில், திருத்தந்தை
பதினொன்றாம் இன்னொஸன்ட் (Pope Innocent XI) இவரை ஆயராக நியமனம்
செய்தார். ஒரு மதகுருவாக, இவர் வட ஜெர்மனியில் செய்த
எதிர்-சீர்த்திருத்த பணிகளில் முக்கிய பங்காற்றினார்.
பல்வேறு ஐரோப்பிய நாடுகளில் பயணம் மேற்கொண்டு மறைபோதனையாற்றிய
ஸ்டெனோ நெடிய அனுபவங்களைப் பெற்றார். தமது கடைசி காலத்தில்
இத்தாலிக்கு திரும்ப விரும்பிய அவரால் அது இயலாமல் போனது.
வயிற்று வழியால் வேதனையுற்ற இவரது வயிறு, நாளுக்கு நாள்
வீக்கம் கொண்டது. வலி வேதனைகளால் மிகவும் துயருற்ற இவர்,
கி.பி. 1686ம் ஆண்டு, நவம்பர் மாதம், 25ம் நாள், ஜெர்மனியில்
மரித்தார். |
|
|