4)
சுவாசிக்க வேண்டும்...
விவிலியத்தை வாசித்தால் மட்டும் போதாது. என்றுமில்லாத அளவ, இன்று
பலரும் விவிலியத்தை வாசிக்கிறார்கள். ஆனால், அவர்களின்
நோக்கம்தான் மாறுபடுகிறது. இன்று விவிலியத்தை வெறுமனே
பட்டப்படிப்புக்காக ஆராய்ச்சி செய்பவர்கள் உண்டு. பிழைப்பு
நடத்துவதற்காக வெறுமனே ஒருசில பகுதிகளை மனப்பாடம் செய்து, தங்களது
மொழிப் புலமையையும் பேச்சாற்றலையும் பயன்படுத்தி, விவிலியத்தைச் சிறந்த
மூலதனமாகப் பயன்படுத்துவோரும் உண்டு. பிரச்சனைகள் வரும்போதும் மட்டும்
வாசிப்பதன் மூலமாக விவிலியத்தை ஒரு நிவாரனப் பொருளாகப்
பயன்படுத்துவோரும் உண்டு. வெறுமனே வாசிப்பதும் யோசிப்பதும் மட்டும்
போதாது. அனைத்திற்கும் மேலாக விவிலியத்தைச் சுவாசிக்க வேண்டும்.
சுவாசித்தல் என்றால் என்ன?
சுவாசித்தல் என்பது காற்றை உள்வாங்கி வெளிவிடும் அனிச்சை செயல். உயிர்
வாழக் காற்றை உள்வாங்குவதும், உள்வாங்கப்பட்ட காற்றை வெளியிடுவதும்
அவசியம். உயிர் வாழ வேண்டுமானால் இந்த இரு செயல்களும் தங்கு
தடையின்றிச் சீராக, இயல்பாக எப்பொழுதும் நடைபெற்றுக் கொண்டேயிருக்க
வேண்டும். இதில் ஓர் இயக்கம் நின்றுவிட்டாலும் உயிரை இழக்க நேரிடும்.
இதைப் போலவே, கிறிஸ்தவ வாழ்விற்கு விவிலியத்தைச் சுவாசித்தல் மிக மிக
அவசியம். உள்வாங்கிய விவிலிய வார்த்தையை வாழ்வாக்க வேண்டும். பின்னர்,
செயல்களின் மூலம் அதை வெளிப்படுத்த வேண்டும். இறைவார்த்தையைக்
கேட்பதால் மட்டுமே, அறிந்து வைத்திருப்பதால் மட்டுமே ஒருவருக்கு வாழ்வு
வந்துவிடாது. விவிலிய வார்த்தையைச் செயல்படுத்துகிறவர்களே பாறைமீது தம்
வீட்டைக் கட்டிய அறிவாளிக்கு ஒப்பாவார் (மத் 7:24-27).
இறைவார்த்தையைக் கேட்பவர்களாக மட்டும் இருந்து உங்களை ஏமாற்றிக்கொள்ள
வேண்டாம். அதன்படி நடக்கிறவர்களாயு ம் இருங்கள். ஏனென்றால்
வார்த்தையைக் கேட்டு அதன்படி நடவாதோர், கண்ணாடியிலே தம் முகத்தைப்
பார்த்துவிட்டுச் சென்று, உடனே தாம் எவ்வாறு இருந்தார் என்பதை
மறந்துவிடும் ஒரு மனிதருக்கு ஒப்பாவார் என்று புனித யாக்கோபு
தௌpவுபடுத்துகிறார் (யாக் 1:22-24).
உண்மையிலேயே பாசத்தோடும் நேசத்தோடும் உள்வாங்கப்பட்ட இறைவார்த்தையை
எவரும் அடக்கி வைத்திருக்கமுடியாது. அதற்கு விவிலியத்தில் பல்வேறு
எடுத்துக்காட்டுகள் உண்டு. நான் உம் சொற்களைக் கண்டடைந்தேன், அவற்றை
உட்கொண்டேன், உம் சொற்கள் எனக்கு மகிழ்ச்சி தந்தன, என் உள்ளத்திற்கு
உவகை அளித்தன என்கிறார் இறைவாக்கினர் எரேமியா (எரே 15:16). தொடர்ந்து,
உம் சொல் என் இதயத்தில் பற்றியெரியும் தீ போல இருக்கின்றது. அது என்
எலும்புலுக்குள் அடைபட்டுக் கிடக்கின்றது. அதனை அடக்கிவைத்துச்
சோர்ந்து போனேன். இனி என்னால் பொறுத்துக்கொள்ள முடியாது என்கிறார் (எரே
20:9). இறைவார்த்தை சுவாசத்தை எந்த அதிகாரத்தாலும் அடக்குமுறையாலும்
தடைசெய்ய முடியாது. உங்களுக்குச் செவிசாய்ப்பதா? கடவுளுக்குச்
செவிசாய்ப்பதா? இதில் கடவுள் பார்வையில் எது முறையானது என நீங்களே
தீர்மானித்துக் கொள்ளுங்கள். என்ன ஆனாலும் நாங்கள் கண்டதையும்
கேட்டதையும் எடுத்துரைக்காமலிருக்க எங்களால் முடியாது என்று தலைமைச்
சங்கத்தாரிடமே பேதுருவும் யோவானும் சவாலிடுகின்றனர் (திப 4:19-20).
என்னைச் சிறைப்பிடிக்கலாம். ஆனால், இறைவார்த்தையைச் சிறைப்பிடிக்க
முடியாது என்று சவால் விடுகிறார் புனித பவலடியார் (2திமோ 2:9).
அதே நேரத்தில், இறைவார்த்தையை வாழ்வாக்குவது அவ்வளவு
எளிதான செயல் அல்ல. இறைவார்த்தை வாயில் இனிக்கும். ஆனால் வயிற்றில்
கசக்கும் (திவெ 10:10). கேட்கும் போது எளிதானதாகத் தோன்றும். ஆனால் அதை
வாழ முற்படும்போது பல சவால்களைத் தியாகங்களை, எதிர்ப்புகளை,
விமர்சனங்களைச் சந்திக்க நேரலாம். இறைவார்த்தையை முன்னிட்டே தான்
சிறைவாசம் அனுபவிப்பதாகத் திருத்தூதர் பவல் சொல்கிறார் (2திமோ 2:9).
இறைவார்த்தையை அறிவி. வாய்ப்பு கிடைத்தாலும் கிடைக்காவிட்டாலும் இதைச்
செய்வதில் நீ கருத்தாயிரு என்று திமோத்தேயுவுக்கு அறிவு
றுத்துகிறார் (2திமோ 4:2). எனவே வாசித்த, யோசித்த இறைவார்த்தையை
உள்வாங்கப்பட்ட இறைவார்த்தையைச் சொல்லாலும் செயலாலும் அறிக்கையிட
வேண்டிய கடமையும் கட்டாயமும் அனைவருக்கும் உண்டு.
|