Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 விவிலியம்

   இயேசுவின் குழந்தைப் பருவம்

    இயேசுவின் குழந்தைப் பருவ நிகழ்ச்சிகளை எடுத்துக் கொள்வோம். நான்கு நற்செய்தியாளர்களில் மத்தேயு மற்றும் லூக்கா ஆகிய இருவர் மட்டுமே இயேசுவின் குழந்தைப் பருவத்தைப் பதிவு செய்கின்றனர். இருப்பினும், இருவரும் ஒரே மாதிரியாகப் பதிவு செய்யவில்லை.

உதாரணமாக, மத்தேயு யோசேப்பை மையப்படுத்துகிறார். லூக்காவோ மரியாவை மையப்படுத்துகிறார். யோசேப்புக்கு அனைத்தும் தூதரால் கனவின் மூலமாகவே அறிவிக்கப்படுகிறது அல்லது தௌpவுபடுத்தப்படுகிறது.

ஞானிகள் வருகை, ஏரோதைச் சந்தித்தல், திருக்குடும்பம் எகிப்துக்குத் தப்பிச் செல்லுதல், மாசில்லா குழந்தைகள் படுகொலை, எகிப்திலிருந்து திரும்பி வருதல் போன்றவை மத்தேயு நற்செய்தியில் மட்டுமே காணப்படுகின்றன (மத் 1:18-2:23). மங்கள வார்த்தை நிகழ்ச்சி, மரியாள் எலிசபெத்து சந்திப்பு, மரியாளின் பாடல், பெத்லகேமில் இடம் கிடைக்காதது, தொழுவத்தில் இயேசு பிறந்தது, அதனை இடையர்களுக்கு வானதூதர் அறிவித்தது, அவர்கள் வந்து குழந்தையைக் கண்டு பணிந்து வணங்கியது, குழந்தை இயேசுவைக் கோயிலில் காணிக்கையாக ஒப்புக் கொடுத்தது, இயேசு காணாமல் போய் கண்டுபிடிக்கப்பட்டது போன்றவை லூக்கா நற்செய்தியில் மட்டுமே காணப்படுகின்றன (லூக்கா 2:1-52).

ஞானிகள் விண்மீன் எழக்கண்டு தாங்களாகவே இயேசு பிறந்ததைக் கண்டறிகிறார்கள். இது நற்செய்தியாளர் மத்தேயு சொல்லும் செய்தி. ஆனால், இடையர்களுக்கு இயேசு பிறந்த செய்தி வானதூதரால் அறிவிக்கப்படுகிறது. இது நற்செய்தியாளர் லூக்கா சொல்லும் செய்தி.

ஞானிகள் குழந்தையை வீட்டில் தரிசிக்கிறார்கள் (மத் 2:11). இடையர்களோ தொழுவத்தில் தீவனத் தொட்டியில் கிடத்தப்பட்ட குழந்தையைக் காண்கிறார்கள் (லூக் 2:17). எதனால் இந்த வேறுபாடு? உண்மையில் இயேசுவை வந்து சந்தித்தது யார், ஞானிகளா அல்லது இடையர்களா? இரு குழுக்களும்தான் என்றால், ஏன் நற்செய்தியாளர்கள் ஒரு குழுவினரைப் பதிவு செய்துவிட்டு மற்றொரு குழுவினரைத் தவிர்க்க வேண்டும்? அவ்வாறு செய்வதற்கு ஏதேனும் நோக்கம் இருக்க வாய்ப்புண்டா?

 

ஆகட்டும் என்றொரு சொல்லினிலே, மீட்பினை உலகுக்கு தந்தது  நீயம்மா