Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 விவிலியம்

கேள்விகளுக்கான பதில் 

                இப்பொழுது இக்கட்டுரையின் துவக்கத்தில் நாம் எழுப்பிய சில கேள்விகளுக்கான பதில்களைப் பார்ப்போம். பழைய ஏற்பாட்டிலிருந்தும் புதிய ஏற்பாட்டிலிருந்தும் ஒரு சில கேள்விகளை எழுப்பியிருந்தோம். நாம் முன்வைக்கப் போகும் பதில்கள் முழுமையானவை என்றோ, இறுதியானவை என்றோ  யாரும் எடுத்துக் கொள்ள வேண்டாம். அவைகளை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற கட்டாயமும் எவருக்கும் இல்லை. இவைகளைவிடத்  தெளிவான, சிறந்த பதில்களை வாசகர் உள்ளத்தில் இப்பக்கங்கள் உருவாக்கும் என்றால், அதைவிட மேலான மகிழ்ச்சி எமக்கு இருக்க வாய்ப்பில்லை. இப்பக்கங்களின் நோக்கம் என்னவெனில், நமக்கு மிகவும் பழக்கமான இப்பகுதிகளைக் கூட நாம் சரியாக வாசிக்காமலும் புரிந்துகொள்ளாமலும் இருந்திருக்கிறோம்.  அப்படியானால் இன்னும் எவ்வளவு     ஆர்வத்தோடும் கவனத்தோடும் விவிலியத்தைப் படிக்க வேண்டும் என்கிற தாகத்தையும் வேகத்தையும் வாசகர்கள் உள்ளத்தில் உருவாக்கி, இன்னும் உன்னிப்போடு கவனமாக வாசிக்க அவர்களைத் தூண்டுவதே நமது நோக்கம்.

 

நித்தம் உன் தாள் தேடி வருவார்கள் கோடி
நெஞ்செல்லாம் இனித்திடும் சுவையாகப் பாடி
முக்திக்கு வழிசொன்ன இறைமகன் தாயே
சத்தியம் வழிந்தோடும் நிறைகுடம் நீயே