Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

மறைக்கல்வி

விவிலிய வகுப்பு- 1


ஏன் இந்த விவிலிய வகுப்பு ?
1) உண்மையான அர்த்தத்தைப் புரிந்து அதன்படி வாழ,
2) அது நம் வாழ்க்கைக்கு என்ன சொல்கின்றது என்பதை உணர,
3) கற்பிப்பதற்கு, துர்ண்டுவதற்கு, கண்டிப்பதற்கு, சீராக்குவதற்கு முழுமையாக
பயிற்சிப்பதற்கும் உதவுகிறது. (திமோத்தேயு: 2 3:16)
4) வாசிக்க, யோசிக்க, நேசிக்க, புசிக்க.

விவிலியம் (Bible) ஆசிரியர் - கடவுள்
விவிலியம் என்பது மனிதர்களைக் கொண்டு கடவுள் வரைந்த ஓவியம்
விவிலியம் என்றால் கடவுள் தன் பிள்ளைகளுக்கு எழுதிய கடிதம்.

தற்காக எழுதினார்?
மக்கள் இறைவனின் அன்பை உணரவும், இறை உறவை அறியவும்
அதில் அவரது திட்டம் எண்ணம் எல்லாம் அடங்கி இருக்கிறது. (பேதுறு 2 1:21)
விவிலியத்தின் ஒவ்வொரு பகுதியூம் முக்கியமானது. மகத்துவம் வாய்ந்தது. ஏனெனில் இதன் மூல கர்த்தா (ஆசிரியர்) இறைவன்.
கடவுளால் சொல்லக்கூடாததொன்றும் இதில் சொல்லப்படவில்லை.
கடவுளால் சொல்லவேண்டியதெதுவும் இதிலிருந்து விடுபடவில்லை.(திமோத்21 :1)  

விவிலியம் என்பது
விவிலியா (Biblia) என்ற கிறேக்க மொழியில் இருந்து வந்தது.
விவிலியா என்றால் தொகுப்பு (பல புத்தகங்கள் சேர்ந்த ஒரு புத்தகம்) என்று
பொருள்படும. அது 73 (46+27 ) புத்தகங்கள் சேர்ந்த ஒரு நூலகம்.

வரலாறு 
1600 வருடங்களாக வெவ்வேறு மனிதர்களால் வெவ்வேறு காலங்களில் வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு நோக்கங்களுக்காகவும் எழுதப்பட்டு தனித்தனி நூல்களாக (சுருளேடுகளாக) இருந்த இந்த நூல்கள் கி.பி. 397ம் ஆண்டில் கார்த்தேஐ என்ற இடத்தில் நடந்த திருஅவையில் (சங்கத்தின் போது) முழு உருவம் பெற்றது. ஒரே நூலாகத் தொகுக்கப்பட்டது. முதலில் எழுதும்போது கல் களிமண் பானை ஓடு மிருகங்களின் தோல் பப்பியூரஸ் (நாணல்புல்) என்பவற்றை உபயோகப்படுத்தி எழுதினார்கள்.

உடன்படிக்கையின் அடிப்படையில் விவிலியம் 2 பகுதிகளாகப் பிரிக்கப்பட்டது
1) பழைய ஏற்பாடு (46)    2) புதிய ஏற்பாடு (27)

ஏற்பாடு என்றால் உடன்படிக்கை என்று பொருள்படும். இறைவன் மனிதனுடன் செய்த ஒரு ஒப்பந்தம்.
- இறைவாக்கினர் மூலமாக மக்களுடன் செய்த உடன்படிக்கை பழைய ஏற்பாடு .
- இறைமகன் மூலமாக மக்களுடன் செய்த உடன்படிக்கை புதிய ஏற்பாடு.

மொழி
பழைய ஏற்பாடு -  எபிரேய மொழியில் எழுதப்பட்டது.
இணைத் திருமுறைகள் - அரமாயிக் மொழியில் எழுதப்பட்டது.
உன்னதசங்கீதங்கள். தானியேல். பாருக். யூதித் போன்றன.
(கத்தோலிக்க மதத்திலிருந்து பிரிந்த மறு சமயங்கள் இந்த இணைத் திருமுறைகள் அடங்கிய நூல்களை ஏற்றுக் கொள்வதில்லை)

புதிய ஏற்பாடு - கிறேக்க மொழியில் எழுதப்பட்டது.

பின்னணி - ஒரு குறிப்பிட்ட காலத்தில், ஒரு குறிப்பிட்ட நேரத்தில், ஒரு குறிப்பிட்ட இடத்தில், ஒரு குறிப்பிட்ட மனிதரால், ஒரு குறிப்பிட்ட நோக்கத்திற்காக எழுதப்பட்டது விவிலியம். உதாரணம். லூக் 1 :

அசீரியா பபிலோனியா எகிப்து போன்ற பெரிய நாடுகள் பெரிய இராட்சியமாக இருந்து மக்களுக்கு ஒரு பெரிய பாதுகாப்பாக இருந்த வேளையில் அவர்களின் பல எதிர்ப்புகள் இன்னலுகளுக்கிடையில் அவர்களைக் காப்பாற்றுவதற்காகவும் விவிலியம் எழுதப்பட்டது. உதாரணம். (லூக் 1 : 1-5 )

மொத்த அதிகாரங்கள்: 1334   -   வசனங்கள்: 35 487

மிகப் பெரிய அதிகாரம் --தி.பா 119

சிறிய அதிகாரம் (தி.பா 117) பிற இனத்தாரே நீங்கள் ஆண்டவரைப் போற்றுங்கள் மக்களினத்தாரே நீங்கள் அனைவரும் அவரைப் புகழுங்கள். ஏனெனில் ஆண்டவர் நமக்குக் காட்டும் மாறாத அன்பு மிகப் பெரியது. அவரது உண்மை என்றென்றும் நிலைத்துள்ளது அல்லேலூயா.

மிகநீண்ட வசனம் -- (எஸ்தர் 8 .9) சீவான் என்ற மூன்றாம் மாதத்தில் இருபத்து மூன்றாம் நாளன்று மன்னரின் எழுத்தர்கள் வரவழைக்கப்பட்டனர். மொர்தக்காய் இட்ட ஆணையின்படியே யூதர் அனைவருக்கும் இந்தியா தொடங்கி எத்தியோப்பியா வரையிலுள்ள நூற்றிருபத்தேழு மாநிலங்களின் குறுநில மன்னர்களுக்கும் மாநிலங்களின் ஆளுநர் அனைவர்க்கும் மாமன்னர் அகஸ்வேர் பெயரால் எழுதப் பெற்று அரச கணையாழி முத்திரையிடப் பெற்ற இம் மடல்கள் அரசக் கொட்டிலைச் சார்ந்த அரசப் பணிக்குரிய புரவிகள் மீது அமர்ந்தேகும் விரைவு அஞ்சலர் மூலம் அனுப்பப்பட்டன.

குறுகியது:
யோவான் 11 : 35  - அப்போது யேசு கண்ணீர் விட்டு அழுதார்


வார்த்தையின் வல்லமை  - (எபிரேயர் 4 :12) கடவூளுடைய வார்த்தை வல்லமை உயிருள்ளது . ஆற்றல் வாய்ந்தது. இருபக்கமும் வெட்டக் கூடிய எந்த வாளினும் கூர்மையானது. ஆன்மாவையும் ஆவியையும் பிரிக்கும் அளவிற்கு குத்தி ஊருடுவுகின்றது. எலும்பு மூட்டையும் மச்சையையும் அவ்வாறே ஊருடுவுகின்றது. உள்ளத்தின் சிந்தனையையும் நோக்கங்களையும் சீர்துக்கிப் பார்க்கின்றது.


இவாகள் வாழக்கையை மாற்றிய வசனங்கள்

அன்னை தெரேசா - 1948  (தியானத்தின் போது)   - மத். 25-35
148 நாடுகளில் தன் சபையை ஆரம்பித்தார்.

சவேரியார்  - பெரிய பணக்காரர் - சட்டவல்லுனர் இஞ்ஞாசியார் சொன்ன வசனம்  -மத்.16-26

பிரானசீஸ் அசீசியார். -- பெரிய பணக்காரர்  - மத். 19-21

அகுஸ்தினார் - கேவலமான வாழ்க்கையைக் கொண்டிருந்தவர்.  - றோமர் 13-13


பாவமேதும் இல்லா சீலி! பாவிகளின் செல்வ ராணி!
பாதுகாத்து ஆளுவாயே நீ