Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

இயேசுவின் வழியினிலே

 

 ✠ புனிதர் வால்ட்ரூட் ✠(St. Waltrude)
   
நினைவுத் திருநாள் : (ஏப்ரல்/ April 09)
✠ புனிதர் வால்ட்ரூட் ✠(St. Waltrude)

 *பிறப்பு : ---


*இறப்பு : ஏப்ரல் 9, 688


*நினைவுத் திருநாள் : ஏப்ரல் 9


புனிதர் வால்ட்ரூட், "மான்ஸ்" மற்றும் "பெல்ஜியம்" (Mons, Belgium) ஆகிய இடங்களின் பாதுகாவலர் ஆவார்.


மிகவும் அழகிய பெண்ணாக வளர்ந்த இவரை, பெரும் பணம் படைத்தவர்கள் திருமணம் செய்து கொள்ள விரும்பினார்கள். ஆனால், அவரது பெற்றோர்கள், அவரை, "ஹைனால்ட்" (Count of Hainault) நகரின் பிரபுவுக்கு மணமுடித்து வைத்தனர். இவர்களுக்கு நான்கு குழந்தைகள் பிறந்தன. பணி ஓய்வு பெற்ற வால்ட்ரூட்டின் கணவர் அங்கிருந்த ஒரு துறவு மடத்தில் தஞ்சமடைந்தார்.


656ம் ஆண்டு, வால்ட்ரூட் தாமே ஒரு பெண் துறவியானார். அவர் தமது சொந்த பள்ளியை நிறுவினார். அதனைச் சுற்றிலும் "மோன்ஸ்" (Mons) நகரம் வளர்ச்சி காண தொடங்கியிருந்தது.


சிறைக் கைதிகளை விடுதலை செய்விப்பதில் அதிக ஆர்வம் காட்டினார். அவர்களை மீட்பதற்காக மீட்பு விலை கொடுக்க வேண்டியிருந்தது. வால்ட்ரூட், தம்மிடமிருந்த வெள்ளிப் பொருட்களை எடை போட்டு விற்றார். கைதிகள் யாவரும் மீட்பு விலை கொடுக்கப்பட்டு மீட்கப்பட்டனர். பின்னர் அவர்கள் அனைவரையும் அவர்களது சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைத்தார். இதுபோன்ற காரணங்களால் வால்ட்ரூட் சரித்திர ஆர்வலர்களால் கொண்டாடப்படுகின்றார்.


688ம் ஆண்டு ஏப்ரல் 9ம் நாள், வால்ட்ரூட் பெல்ஜியத்திலுள்ள மோன்ஸ் (Mons) நகரில் இறந்தார். பெல்ஜியத்தில் புனித வால்ட்ரூட் மலையில் இவர் பெயரில் பேராலயமும், கல்லூரிகளும் உள்ளன.


மோன்ஸ் (Mons) நகரில் இவர் பெயரில் அர்ப்பணிக்கப்பட்ட ஆலயம் ஒன்றுள்ளது. ஒவ்வோர் ஆண்டும் இந்த திருத்தலத்தில் இன்றுவரை புனித வால்ட்ரூட் திருவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.
 

துன்பங்கள் தோன்றிடும் வேளையிலே நீ துணை தந்து காத்திட வேண்டுமம்மா