Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

இயேசுவின் வழியினிலே

 

 ✠ புனிதர் ட்ரூட்பெர்ட் ✠(St. Trudpert)
   
நினைவுத் திருநாள் : (ஏப்ரல்/ April 26)
✠ புனிதர் ட்ரூட்பெர்ட் ✠(St. Trudpert)
 * மதப் போதகர் : (Missionary)

*பிறப்பு :
அயர்லாந்து அல்லது ஜெர்மனி
(Ireland or Germany)

*இறப்பு : கி.பி. 607 அல்லது கி.பி. 644

*ஏற்கும் சமயம் :
ரோமன் கத்தோலிக்க திருச்சபை
(Roman Catholic Church)
கிழக்கு மரபுவழி திருச்சபை
(Eastern Orthodox Church)

*நினைவுத் திருநாள் : ஏப்ரல் 26

ஏழாம் நூற்றாண்டில் பிறந்த புனிதர் ட்ரூட்பெர்ட், ஜெர்மனி நாட்டின் ஒரு மதபோதகர் ஆவார். இவர் அயர்லாந்தின் "செல்டிக்" துறவி (Celtic monk) என்றும் அழைக்கப்பட்டார். இவர் மறைபரப்பு பணியை தொடர்ந்து செய்ய, திருத்தந்தையின் அதிகாரம் பெற ரோம் சென்றார். அங்கிருந்து மீண்டும் ஜெர்மனிக்கு திரும்பி வர "ப்ரெய்ஸ்கவ்" (Breisgau) நாட்டிலுள்ள "ஆலமன்னி" (Alamanni) வழியாக பயணித்து நாடு திரும்பினார். அப்போது ரைனி'ல் (Rhine) பயணம் செய்யும்போது, ஃப்ரைபர்க்-ஐ (Freiburg) சேர்ந்த ஒருவர் தன்னிடம் இருந்த நிலத்தில், சுமார் 25 கிலோமீட்டர் நிலத்தை, மறைபரப்பு பணிக்காக கொடுத்தார்.

அப்போது ட்ரூட்பெர்ட், அந்நிலத்திலிருந்த மரம் புதர்களை அழித்துவிட்டு, ஒரு சிறு அறையையும் சிறிய தேவாலயம் ஒன்றையும் கட்டினார். பின்னாளில், "கான்ஸ்டன்ஸ்" மறை மாவட்ட ஆயரான "மார்ட்டினஸ்" (Bishop Martinus of Constance) இந்த தேவாலயத்தை புனிதர்கள் பீட்டர் மற்றும் பவுல் ஆகியோருக்கு அர்ப்பணித்தார்.

அங்கே ஓர் வேலையாள் போலவே, துறவி ட்ரூட்பெர்ட் உழைத்தார். ஒரு நாள் வேலை முடித்துவிட்டு களைப்பாக உறங்கும்போது, முன்பின் தெரியாத, அடிமைகளின் வகுப்பைச் சேர்ந்த ஒருவர் வந்து அவரை கொன்றுவிட்டான். பின்னர் ஓட்பெர்க் (Otbert) என்பவர், ட்ரூட்பெர்ட்'டை கௌரவமாக அடக்கம் செய்தார். இவர் வாழ்ந்த குறுகிய காலத்தில் குழந்தைப் பருவத்திலிருந்தே எண்ணிலடங்கா, பணிகளைச் செய்துள்ளார். அவர் கி.பி. 640 முதல் கி.பி. 643 வரை ப்ரெய்ஸ்கவ்-இல் வாழ்ந்தார் என்று வரலாறு கூறுகின்றது. ஆனால் இவ்வாண்டுகளில் அங்கே வாழ்ந்த பவர் (Baur) என்பவர் ட்ரூட்பெர்ட் 607ம் ஆண்டு, இறந்து விட்டார் என்று கூறியுள்ளார்.

அதன்பிறகு கி.பி. 815ம் ஆண்டு அவரின் எலும்புகள் கண்டுபிடிக்கப்பட்டது. அவர் வாழும்போது எழுதிய அவரின் வாழ்க்கை வரலாற்றை 10 மற்றும் 13ம் நூற்றாண்டுகளில் கண்டுபிடிக்கப்பட்டு, அதை சரிசெய்து பாதுகாக்கப்படுகின்றது. முன்ஸ்டர் (Mnster) நகரில் உள்ள ஆசீர்வாதப்பர் மடத்தில் இவரது எலும்புகளும், வரலாற்று ஆவணங்களும் வைக்கப்பட்டது. அங்கு இப்புனிதருக்கென்று பேராலயமும் உள்ளது.

இப்புனிதர் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில், அவர் பெயரில் ஒரு "பெனடிக்டைன் மடம்" (Benedictine Abbey of St. Trudpert) கட்டப்பட்டது.
 

துன்பங்கள் தோன்றிடும் வேளையிலே நீ துணை தந்து காத்திட வேண்டுமம்மா