Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

இயேசுவின் வழியினிலே

 

✠ புனிதர் ரிச்சர்ட் ✠(St. Richard of Chichester)
   
நினைவுத் திருநாள் : (ஏப்ரல்/ April 03)
✠ புனிதர் ரிச்சர்ட் ✠(St. Richard of Chichester)

 *சிசெஸ்டர் ஆயர் : (Bishop of Chichester)

 *பிறப்பு : 1197
ட்ராய்ட்விச், வொர்செஸ்டெர்ஷைர், இங்கிலாந்து
(Droitwich, Worcestershire, England)

 *இறப்பு : ஏப்ரல் 3, 1253
டோவர், கென்ட், இங்கிலாந்து
(Dover, Kent, England)

ஏற்கும் சமயம் :
ரோமன் கத்தோலிக்க திருச்சபை
(Roman Catholic Church)

 *புனிதர் பட்டம் : ஜனவரி 25, 1262
திருத்தந்தை நான்காம் அர்பன்
(Pope Urban IV)

 *நினைவுத் திருநாள் : ஏப்ரல் 3

 *பாதுகாவல் :
குதிரை வண்டி ஓட்டுனர் (Coachmen),
சிசெஸ்டர் மறைமாவட்டம் (Diocese of Chichester),
சஸ்செக்ஸ் (Sussex), இங்கிலாந்து (England)

புனிதர் ரிச்சர்ட், "சிசெஸ்டர்" மறை மாவட்ட (Bishop of Chichester) ஆயர் ஆவார். இவர் பெயரில் அர்ப்பணிக்கப்பட்டிருந்த "சிசெஸ்டர்" மறை மாவட்ட பேராலயம் ஒன்று மிகவும் அலங்கரிக்கப்பட்ட திருத்தலமாக இருந்தது. 1538ம் ஆண்டு, அரசன் எட்டாம் ஹென்றியின் (Henry VIII) ஆட்சியின்போது, "தாமஸ் குரோம்வெல்" (Thomas Cromwell) என்பவனது உத்தரவின்பேரில் இத்திருத்தலம் சூறையாடி அழிக்கப்பட்டது.

இப்புனிதர், 1197ம் ஆண்டு, இங்கிலாந்து நாட்டில் உள்ள "வொர்செஸ்டெர்ஷைர்" (Worcestershire) என்ற இடத்தில் பிறந்தார். இவர் பிறந்த சிறிது காலத்திலேயே இவரது பெற்றோர் இறந்துவிட்டனர். இவரது தந்தையின் தோட்டங்கள், வாரிசான இவரது மூத்த சகோதரருக்கு போனது. ஆனால், தந்தையின் மரண அத்தாட்சி சான்றிதழுக்காக கட்ட வேண்டிய வரிப்பணம் இவர்களிடம் இல்லாததால் சொத்துக்கள் கைவிட்டுப் போயின. இவர்கள் வறியவர்கள் ஆனார்கள். ரிச்சர்ட் ஒரு தோட்டத்தில் பணியாற்றினார்.

ஆக்ஸ்ஃபோர்ட் (University of Oxford) பல்கலைகழகத்தில் கல்வி கற்ற ரிச்சர்ட், பின்னர் அதே பல்கலையிலேயே கற்பிக்கும் பணியும் செய்தார். அங்கிருந்து பாரிஸ் (Paris) நகருக்கும், பின்னர் "பொலொக்னா" (Bologna) நகருக்கும் சென்றார். அங்கே, தமது சமய சட்ட விதிமுறைகளின் திறமையால் மேன்மை பெற்றார். 1235ம் ஆண்டு இங்கிலாந்து திரும்பிய இவர் ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைகழகத்தின் வேந்தராக தேர்வு செய்யப்பட்டார்.

1240ம் ஆண்டு, மதகுருவாக் முடிவெடுத்த ரிச்சர்ட், "ஒர்லியான்" (Orlans) மாநிலத்திலுள்ள "டோமினிக்கன்" (Dominicans) சபையில் இரண்டு வருடங்கள் இறையியல் கற்றார். இங்கிலாந்து திரும்பிய அவர், :சாரிங்" மற்றும் "டீல்" (Charing and at Deal) ஆகிய பங்குகளின் பங்குத்தந்தையாக நியமிக்கப்பட்டார். ஆனால், விரைவிலேயே "காண்டர்பரி'யின்" (Canterbury) வேந்தராக பேராயர் "போனிஃபேஸ்" (Boniface of Savoy) நியமிக்கப்பட்டார்.

1244ம் ஆண்டு, ரிச்சர்ட் "சிசெஸ்டர்" மறைமாவட்டத்தின் ஆயராக (Bishop of Chichester) தேர்வு செய்யப்பட்டார். திருத்தந்தை "நான்காம் இன்னொசென்ட்" (Innocent IV) அவருக்கு மார்ச் மாதம் 1245ம் ஆண்டு, "லியோன்ஸ்" (Lyons) நகரில் ஆயராக அருட்பொழிவு செய்வித்தார்.

ரிச்சர்டின் தனிப்பட்ட வாழ்க்கை மிகவும் கடினமானதாக இருந்தது. எளிமை, பணிவு, தாழ்ச்சி, அடிபணிதல் ஆகியவற்றின் எடுத்துக்காட்டாக வாழ்ந்தார். ஆடம்பரங்களை அறவே வெறுத்த அவர், தமது உணவு முறைகளைக்கூட மிகவும் எளிதானாதாகவே வைத்திருந்தார். புலால் உண்பதை முழுதும் தவிர்த்தார். காய்கறி வகைகளையே உண்டார்.

வட்டித்தொழில் செய்வோர், ஊழல் செய்யும் மறை பணியாளர்கள் மற்றும் தெளிவாக அல்லாது முணுமுணுப்பாக திருப்பலி நிறைவேற்றும் மதகுருமார் ஆகியோரை வெறுத்தார். அவர்கள்மீது இரக்கமற்ற விதமாக நடவடிக்கை எடுத்தார்.

56 வயதான ரிச்சர்ட், 1253ம் ஆண்டு, ஏப்ரல் மாதம், மூன்றாம் நாளன்று, டோவர் (Dover) என்னுமிடத்திலுள்ள புனித எட்மண்ட் சிற்றாலயத்தை (St. Edmund's Chapel) அர்ச்சித்ததன் பின்னர், திருத்தந்தையின் உத்தரவின்படி, சிலுவைப்பாடுகளை பிரசங்கித்துக்கொண்டிருந்தார். பிரசங்கத்தின் இடையில் அவர் மரணமடைந்தார்.
 

துன்பங்கள் தோன்றிடும் வேளையிலே நீ துணை தந்து காத்திட வேண்டுமம்மா