✠ புனிதர் ஹக் ✠(St.
Hugh of Grenoble) |
|
|
|
நினைவுத் திருநாள் :
(ஏப்ரல்/
April 1) |
✠ புனிதர் ஹக் ✠(St.
Hugh of Grenoble)
* க்ரெனோபிள் ஆயர் :
(Bishop of Grenoble)
*பிறப்பு : கி.பி. 1053
சடீயுநியுஃப்-சுர்-இசெர், ஃபிரான்ஸ்
(Châteauneuf-sur-Isère, France)
*இறப்பு : ஏப்ரல் 1, 1132
கிரனோபிள் (Grenoble)
*ஏற்கும் சமயம் :
ரோமன் கத்தோலிக்க திருச்சபை
(Roman Catholic Church)
*புனிதர் பட்டம் : ஏப்ரல் 22,
1134
திருத்தந்தை 2ம் இன்னொசென்ட்
(Pope Innocent II)
*நினைவுத் திருநாள் : ஏப்ரல் 1
*பாதுகாவல் :
க்ரெனோபிள் (Grenoble), ஃபிரான்ஸ் (France),
தலை வலியிலிருந்து (Against Headache)
புனிதர் ஹக், 1080ம் ஆண்டிலிருந்து 1132ல் தமது மரணம் வரை,
சுமார் ஐம்பத்திரண்டு வருடங்கள் க்ரெனோபிள் (Grenoble) மறை மாவட்டத்தின்
ஆயராக பணியாற்றியவர் ஆவார். அவர், கிரிகோரியன் சீர்திருத்தத்திற்கு
ஆதரவாகவும், அதேவேளை "வியென்னாவின் பேராயராகவும்" (Archbishop
of Vienne) பின்னாளில் "திருத்தந்தை இரண்டாம் கல்லிக்ஸ்துஸ்"
(Pope Callixtus II) அவர்களாகவும் இருந்த "கய்" (Guy of
Burgundy) என்பவரை எதிர்த்தார்.
கி.பி. 1053ல் ஃபிரான்ஸ் நாட்டின் "சடீயுநியுஃப்-சுர்-இசெர்"
(Châteauneuf-sur-Isère) என்ற ஊரில் ஹக் பிறந்தார். ஆழ்ந்த இறைப்பற்று
கொண்ட இவர் பெற்றோர், தன் மகனை ஞானத்திலும், அறிவிலும், பக்தியிலும்,
வளர்த்தார்கள். சிறுவயதிலிருந்தே இறைவனை நாடி செபிப்பதில் இவர்
கண்ணும் கருத்துமாய் இருந்தார். இவரது இறைப்பற்றும், ஆன்மீக தாகமும்
இவருடன் படித்த மற்ற மாணவர்களுக்கும் ஊரில் உடன் வாழ்ந்த சிறுவர்களுக்கும்
எடுத்துக்காட்டாய் இருந்தது. தன்னை துன்புறுத்தியவர்களை மன்னித்து
அன்பு செய்வதிலும், மகிழ்ச்சிப்படுத்துவதிலும் சிறந்தவராக இருந்தார்.
தனது பள்ளி படிப்பை முடித்த பிறகு, ஆலய பணிகளில் ஈடுபட்டு
புதிய பாடல்களை உருவாக்கி, திருப்பலியில் பக்தியோடு பாடி தனது
வாழ்வை ஆலயத்திலேயே செலவழித்தார். அன்றாட கல்வாரி பலியில் பங்கெடுத்தார்.
1080ம் ஆண்டு நடந்த "அவிக்னான் ஆட்சிமன்ற கூட்டத்தில்"
(Council of Avignon) ஹக் க்ரெனோபிள் ஆயராக (Bishop of
Grenoble) தேர்வு செய்யப்பட்டபோது, அவர் குருத்துவ அருட்பொழிவு
பெற்றிருக்கவில்லை. ரோம் நகரில் நடந்த அருட்தந்தை தொடர்புடைய
ஒரு கூட்டத்தில், திருத்தந்தை ஏழாம் கிரகோரி (Pope Gregory
VII) அவருக்கு குருத்துவ அருட்பொழிவு செய்வித்தார்.
ஆயராக திருநிலைப்படுத்தப்பட்ட இவர், ஃபிரான்ஸ் நாட்டிலுள்ள
க்ரெனோபிள் மறைமாநிலத்தில் பணியாற்றினார். ஆயர் பொறுப்பை ஏற்ற
2 ஆண்டுகளில் ஏராளமான பிரச்சினைகளை சந்தித்தார். க்ரெனோபிள் மறைமாநிலத்தின்
சீர்திருத்தப் பணிகளில் ஈடுபட்டு அதில் வெற்றியும் கண்டார்.
ஆயர் பொறுப்பிலிருந்து விலக முயற்சித்த அவர், "க்ளுனி" (Cluny)
என்ற இடத்திலுள்ள "பெனடிக்டைன்" துறவு மடத்தில் (Benedictine
monastery) இணைந்தார். துறவற மடத்தில் தங்கி, பல மணிநேரம் இறைவனோடு
ஒன்றிணைந்திருந்தார். ஆனால், திருத்தந்தையின் உத்தரவுப்படி
மீண்டும் இவர் ஃபிரான்ஸிலுள்ள க்ரெனோபிள் மறைமாநிலத்திற்கு
சென்று தமது ஆயர் பணிகளைத் தொடங்கினார்.
"கார்தூசியன்" (Carthusian Order) சபையைத் தோற்றுவிப்பதில் இவரும்
ஒரு கருவியாக இருந்து பாடுபட்டிருக்கிறார்.
பிறகு 1132ம் ஆண்டு ஆயர் ஹக் அவர்கள் மரித்தார்.
இவர் இறக்கும் நிமிடம்வரை "கார்தூசியன்" சபைக்காகவும், தனது
க்ரெனோபிள் மறைமாநில மக்களுக்காகவும் கடுமையான ஒருத்தல்களைச்
செய்து, இடைவிடாது செபித்தார். |
|
|