Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

இயேசுவின் வழியினிலே

 

 ✠ அருளாளர் மைக்கேல் ருவா ✠ (Blessed: Michele Rua)
   
நினைவுத் திருநாள் : (ஏப்ரல்/ April 06)
✠ அருளாளர் மைக்கேல் ருவா ✠ (Blessed: Michele Rua)

 *டான் போஸ்கோவின் சலேசியன் சபையின் இணை நிறுவனர் :
(Co-founder of the Salesians of Don Bosco)

 *பிறப்பு : ஜூன் 9, 1837
டூரின், சார்டினியா அரசு
(Turin, Kingdom of Sardinia)

 *இறப்பு : ஏப்ரல் 6, 1910 (வயது 72)
டூரின், இத்தாலி (Turin, Italy)

 *ஏற்கும் சமயம் :
ரோமன் கத்தோலிக்க திருச்சபை (Roman Catholic Church)

 *முக்திபேறு பட்டம்: அக்டோபர் 29, 1972
திருத்தந்தை ஆறாம் பவுல் (Pope Paul VI)

 *நினைவுத் திருநாள் : ஏப்ரல் 6

அருளாளர் மைக்கேல் ருவா, ஒரு இத்தாலிய கத்தோலிக்க குருவும், புனிதர் ஜான் பாஸ்கோவின் மாணவர்களுள் ஒருவரும் ஆவார். சலேசிய சபையின் முதல் தலைமை அதிபரும் (Rector Major of the Salesians) இவரேயாவார்.

1837ம் ஆண்டு இத்தாலி நாட்டிலுள்ள தூரின் (Turin) என்ற இடத்தில் ஜூன் 9ம் நாள் பிறந்த இவர், ஒன்பது சகோதாரர்களுள் இளையவராவார்.

ஆயுத தொழிற்சாலை ஒன்றின் மேற்பார்வையாளராக பணியாற்றிய "ஜியோவன்னி பட்டிஸ்டா" (Giovanni Battista) இவரது தந்தை ஆவார். "ஜியோவன்னா மரிய ருவா" (Giovanna Maria Rua) இவரது தாயார் ஆவார்.

2 ஆகஸ்ட் 1845ல் இவரது தந்தையார் இறந்ததும் இவரது தாய்க்கு அதே ஆயுத தொழிற்சாலையிலேயே பணி கிடைத்தது. விதவைத் தாயாருடன் வாழ்க்கையைத் தொடங்கிய மைக்கேல், 'கிறிஸ்தவ பள்ளிக்கூடங்களின் சகோதரர்கள்' (Brothers of the Christian Schools) நடத்திய பள்ளிக்கூடம் ஒன்றில் தமது ஆரம்பக் கல்வியை கற்றார்.

தமது 15ம் வயதில் தனது படிப்புகளை முடித்தபோது, கத்தோலிக்க குருவான புனிதர் டோன் ஜான் போஸ்கோ அவர்களால் தொடங்கப்பட்ட இளைஞரணியில் சேர்ந்தார். அப்போது மைக்கேல் ருவாவும், ஜான் போஸ்கோவும் நண்பர்கள் ஆனார்கள்.

1861ம் ஆண்டு டோன் ஜான் போஸ்கோ தொடங்கிய சலேசிய சபையில் இளைஞர்களுக்குப் பணியாற்றும் பணியில் ஈடுபட்டார். புனித சலேசிய சபை உருவாவதற்கு தொன் போஸ்கோவிற்கு பெருமளவில் உதவி செய்தார். அப்போது இளைஞர்களுக்கு எல்லாவிதங்களிலும் தாயாக இருந்து உதவிசெய்த ஜான் போஸ்கோவின் தாயார் நவம்பர் மாதம் 1856ல் இறந்ததால், இளைஞர்களுக்கு தாய் இல்லை என்ற எண்ணத்தைப் போக்க ரூவா தன் தாயை, இளைஞர்களுக்கு தாயாக இருந்து பணிபுரிய அர்ப்பணித்தார்.

இந்த இளைஞரணியானது திருச்சபையால் அதிகாரப் பூர்வமாக அங்கீகரிக்கப்பட வேண்டுமென்பதை உணர்ந்து, டோன் போஸ்கோவிற்கு துணையாக, தனது 22ம் வயதில் 1860ம் ஆண்டு ஜூலை 29ம் நாளன்று குருத்துவ அருட்பொழிவு பெற்று இளைஞர்களுக்கு ஞான மேய்ப்பராக பணியாற்றினார்.

தமது இருபத்தாறாம் வயதில் டூரின் நகரின் வெளியே அமைந்துள்ள "மிரபெல்லோ" (Mirabello) என்ற இளைஞர்கள் சமூக அமைப்பிற்கு தலைவராக பொறுப்பேற்றார். "மரியாளின் புதல்விகள்" (Daughters of Mary) என்றும், "கிறிஸ்தவர்களின் சகாயம்" (Help of Christians) என்றும் அழைக்கப்படும் 1872ம் ஆண்டு நிறுவப்பட்ட "சலேசிய அருட்சகோதரிகள்" (Salesian Sisters) சபைக்கு இயக்குனராக பணியாற்றினார்.

ஜான் போஸ்கோவின் பயணங்களில் மைக்கேல் நிலையான உடனிருப்பவராக - தோழராக இருந்தார். 1865ல் சலேசிய சபையின் தலைவராக பொறுப்பேற்றார். ஜான் போஸ்கோவின் திட்டவட்ட கோரிக்கையின் பேரில், திருத்தந்தை பதின்மூன்றாம் லியோ (Pope Leo XIII) ரூவாவை ஜான் போஸ்கோவின் வாரிசாக நியமித்தார்.

1888ம் ஆண்டு தொன்போஸ்கோ இறந்தவுடன் இச்சபையை வழிநடத்தும் தலைமைப் பொறுப்பை (Rector Major) திருத்தந்தையின் ஒப்புதலுடன் மைக்கேல் ருவா ஏற்றுக்கொண்டார். பின்பு திருத்தந்தை பதிமூன்றாம் லியோ (Pope Leo XIII) அவர்களால் இச்சபை சலேசிய சபையாக அறிவிக்கப்பட்டது. பின்பு உலகம் முழுவதிலும் சென்று இச்சபை தொடங்கப்பட்டது.

பிறகு தனது 73ம் வயதில் 1910ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 6ம் நாள் இத்தாலியிலுள்ள டூரின் என்ற நகரில் மைக்கேல் ருவா இறந்தார். தொன் போஸ்கோ இறந்தபோது 57 ஆக இருந்த சபைக் குழுமங்கள் (Communities) 345 சபைக் குழுமங்களாக பெருகின. 773 ஆக இருந்த சலேசியர்கள் 4000 ஆக பெருகினர். 6 ஆக இருந்த சபை மாநிலங்கள் 34 மாநிலங்களாக (Provincialate) 33 உலக நாடுகளில் நிறுவப்பட்டு பல்கிப் பெருகின.

இவருக்கு திருத்தந்தை ஆறாம் பவுல் அவர்களால் 1972ம் ஆண்டு அக்டோபர் மாதம் 29ம் நாள் முக்திபேறு பட்டம் (Blessed) கொடுக்கப்பட்டது. இன்று வரை "Don" என்ற பெயரிலேயேதான் சலேசிய குழுமங்கள் அழைக்கப்படுகின்றன.
 

துன்பங்கள் தோன்றிடும் வேளையிலே நீ துணை தந்து காத்திட வேண்டுமம்மா