✠ அருளாளர் அனக்லெட்டோ கொன்சாலெஸ் ஃப்ளோரஸ்
✠
(Blessed Anacleto González Flores) |
|
|
|
நினைவுத் திருநாள் :
(ஏப்ரல்/ April 1) |
✠ அருளாளர் அனக்லெட்டோ கொன்சாலெஸ் ஃப்ளோரஸ்
✠(Blessed Anacleto González Flores)
*மறைசாட்சி :(Martyr)
*பிறப்பு : ஜூலை 13, 1888
டெபடிட்லன், ஜலிஸ்கோ, மெக்ஸிகோ
(Tepatitlán, Jalisco, Mexico)
*இறப்பு : ஏப்ரல் 1, 1927 (aged 38)
குவாடலஜர, ஜலிஸ்கோ, மெக்ஸிகோ
(Guadalajara, Jalisco, Mexico)
*ஏற்கும் சமயம் :
ரோமன் கத்தோலிக்க திருச்சபை
(Roman Catholic Church)
*முக்திபேறு பட்டம் : நவம்பர் 20, 2005
திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட்
(Pope Benedict XVI)
*நினைவுத் திருநாள் : ஏப்ரல் 1
அருளாளர் அனக்லெட்டோ கொன்சாலெஸ் ஃப்ளோரஸ் (Blessed Anacleto
González Flores, ஒரு மெக்சிகன் கத்தோலிக்க பொதுநிலையினரும்,
வழக்குரைஞருமாவார். மெக்சிகோ நாட்டின் நாற்பதாவது (40th
President of Mexico) ஜனாதிபதியான "புளுட்டரோ எலியஸ் கல்ஸ்"
(Plutarco Elías Calles) என்பவரது ஆட்சிக் காலத்தில் நடந்த
கிறிஸ்தவர்களின் துன்புறுத்தலில் சிக்கி படுகொலை
செய்யப்பட்டார். இவர், திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட்
(Benedict XVI) அவர்களால் 2005ம் ஆண்டு, நவம்பர் மாதம்
இருபதாம் நாளன்று, மறைசாட்சியாக முக்திபேறு
பட்டமளிக்கப்பட்டார்.
"கொன்சாலெஸ் ஃப்ளோரஸ்" (González Flores) துன்புறுத்தப்பட்டு
மறைசாட்சியாக கொல்லப்பட்ட காலத்தில், மெக்சிகோ நாட்டை
கத்தோலிக்கம் மற்றும் அதன் குருக்களுக்கு விரோதமான ஜனாதிபதியான
"புளுட்டரோ எலியஸ் கல்ஸ்" (Plutarco Elías Calles) என்பவரது
கடுமையான ஆட்சி நடந்துகொண்டிருந்தது.
இளமை :
ஏழைத் தந்தையான "வலேன்டின் கொன்ஸாலெஸ் சேன்செஸ்" (Valentín
González Sánchez) மற்றும் தாயார் "மரியா ஃபுளோர்ஸ் நவர்ரோ"
(María Flores Navarro) ஆகியோருக்குப் பிறந்த பன்னிரெண்டு
குழந்தைகளில் இரண்டாவதாகப் பிறந்த அனக்லெட்டோ, பிறந்த மறுநாளே
திருமுழுக்கு அளிக்கப்பெற்றார். "மேஸ்ட்ரோ" எனும்
புனைப்பெயரைப் பெற்று, சிறந்து விளங்கிய இவரது அறிவுத் திறமையை
கண்டுணர்ந்த குடும்ப நண்பரான கத்தோலிக்க குரு ஒருவர், இவரை
குருத்துவ கல்லூரிக்கு பரிந்துரைத்தார். இருப்பினும் தமக்கு
குருத்துவ கல்லூரியிலிருந்து அழைப்பு வராததால் "குவாடலஜர"
(Guadalajara) நகரிலுள்ள "எஸ்குவேலா லிப்ர் டி டேரேசோ"
(Escuela Libre de Derecho) கல்லூரியில் சட்டம் பயின்றார்.
1922ம் ஆண்டு, வழக்குரைஞர் ஆனார். பின்னர், "மரிய கன்செப்ஷன்
குரேரோ" (María Concepción Guerrero) எனும் பெண்ணை திருமணம்
செய்தார். இத்தம்பதியருக்கு இரண்டு குழந்தைகளும் பிறந்தன.
தொழிலும் மறைசாட்சியமும் :
தினமும் திருப்பலிகளில் கலந்துகொண்ட கொன்சாலெஸ், பல்வேறு
சேவைப் பணிகளில் ஈடுபட்டார். சிறைச் சாலைகளுக்கு சென்று
கைதிகளை சந்தித்து, அவர்களுக்கு மறை கல்வி கற்பித்தார். அவர்
மெக்சிகன் இளைஞர் கத்தோலிக்க சங்கத்தின் ஒரு ஆர்வலராகவும்
மற்றும் தலைவராகவும் ஆனார். "லா பலாப்ரா" (La Palabra) எனும்
பத்திரிக்கையை தொடங்கினார். கத்தோலிக்கம் மற்றும்
குருக்களுக்கு எதிரான 1917ம் ஆண்டின் அரசியலமைப்பு சட்டவிதியை
(Constitution of 1917) அவரது பத்திரிகை தீவிரமாக எதிர்த்தது.
கிறிஸ்தவ திருச்சபைத் துன்புறுத்தலை எதிர்த்து கத்தோலிக்கர்களை
ஒருங்கிணைக்கும் ஒரு அமைப்பான "பிரபல ஐக்கியம்" (Popular Union
(UP) எனும் அமைப்பின் தலைவராக பொறுப்பேற்றார்.
ஆரம்பத்தில், இந்திய தேசிய தந்தை என்றழைக்கப்படும் காந்தியின்
(Gandhi) வழிமுறைகளை ஆய்வு செய்த அவர், அரசாங்கத்திற்கு எதிரான
செயலற்ற எதிர்ப்பை ஆதரித்தார். ஆயினும், 1926ம் ஆண்டு,
மெக்சிகன் இளைஞர் கத்தோலிக்க சங்கத்தின் நான்கு
உறுப்பினர்களைக் கொலை செய்ததைப் பற்றி அவர் அறிந்து கொண்டார்.
அவர் எழுந்த கிளர்ச்சியை ஆதரித்து, "மத சுதந்திரத்திற்கான
தேசிய லீக்கில்" (National League for the Defense of
Religious Freedom) இணைந்தார். "கத்தோலிக்க திருச்சபைக்கு நாடு
சிறை என்றும், நாம் எங்களுடைய பொருளாதார நலன்களைப்
பாதுகாப்பதைப் பற்றி கவலைப்படுவதில்லை, ஏனெனில் இது வந்து
போகும், ஆனால் நம் ஆவிக்குரிய நலன்களை, நாம் பாதுகாப்போம்,
ஏனென்றால் நம்முடைய இரட்சிப்பை பெற இவை அவசியம்" என இவர்
எழுதினர்.
ஜனவரி 1927ல் மத துன்புறுத்தலை அடைந்த கிளர்ச்சியாளர்கள்
"கிரிஸ்டரோ போர்" (Cristero War) தொடங்கினர். கொன்சாலஸ் ஆயுதம்
எதுவும் ஏந்தவில்லை. ஆனால் சொற்பொழிவுகளாற்றினார். நிதியியல்,
விடுதி மற்றும் ஆடை ஆகியவற்றை நிதி ரீதியாகவும்,
நெருக்கடியிலும் ஆதரவளிப்பதற்கும் கத்தோலிக்கர்களை
ஊக்குவித்தார். அவர் துண்டுப்பிரசுரங்களை எழுதினார், மற்றும்
எதிர்த்தரப்பு அரசாங்கத்திற்கு எதிரான காரணிகளை ஆதரித்தார்.
கிளர்ச்சிகளை அடக்க முயற்சித்த அரசாங்கம், "மத
சுதந்திரத்திற்கான தேசிய லீக்கில்" (National League for the
Defense of Religious Freedom) தலைவர்கள் மற்றும் "பிரபல
ஐக்கியம்" (Popular Union (UP) அமைப்பின் தலைவர்களை பிடிக்க
முயன்றது. "எட்கர் வில்கென்ஸ்" (Edgar Wilkens) எனும்
அமெரிக்கரை கொலை செய்த குற்றச்சாட்டுகளுடன் கொன்சாலெஸ் கைது
செய்யப்பட்டார். உண்மையில், அவரைக் கொலை செய்தது, "குவாடலூப்
ஸுனோ" (Guadalupe Zuno) எனும் கொள்ளைக்காரன்தான் என்பது
அரசாங்கத்துக்கே தெரியும்.
கொன்ஸாலஸ், அவர்களால் துன்புறுத்தப்பட்டார். அவரது கை கட்டை
விரல்களில் கட்டி தொங்கவிடப்பட்டார். இதன் காரணமாக, அவரது கை
கட்டை விரல்கள் பிடுங்கப்பட்டன. அவரது தோள்பட்டை எலும்புகள்,
துப்பாக்கியின் பின்புறத்தால் அடித்து உடைக்கப்பட்டன. அவரது
பாதங்களை வெட்டினர். 1927ம் ஆண்டு, ஏப்ரல் மாதம் முதல் தேதி,
துப்பாக்கி படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார். இறக்கும்
தருவாயில் கொன்ஸாலஸ், "இரண்டாம் தடவையாக கேளுங்கள் அமெரிக்க
நாடுகளே: நான் சாகிறேன் ஆனால் கடவுள் சாகவில்லை" (Hear
Americas for the second time: I die but God does not!)
என்றபடியே உயிர் விட்டார்.
கொன்ஸாலஸ் பொய்யாக குற்றம் சாட்டப்பட்டுள்ளார் என்பதை
அறிந்திருந்த, கொலை செய்யப்பட்ட அமெரிக்கர் "எட்கர்
வில்கென்ஸ்" (Edgar Wilkens) மனைவி, கொன்சாலசின் தண்டனையை
எதிர்த்து, வாஷிங்டன் டி.சி.க்கு (Washington, D.C.) ஒரு
கடிதத்தை எழுதினார். அவரது மரணதண்டனையை நிறுத்த உத்தரவிட்ட ஒரு
கடிதம், அவர் சுட்டுக்கொல்லப்பட்ட சிறிது நேரம் கழித்து
வந்தது. |
|
|