✠ புனிதர் தெரெசா ஜோர்னெட் இபார்ஸ் ✠(St.
Teresa Jornet Ibars) |
|
|
|
நினைவுத் திருநாள் :
(ஆகஸ்ட்/
Aug
26) |
✠ புனிதர் தெரெசா ஜோர்னெட் இபார்ஸ் ✠(St.
Teresa Jornet Ibars)
✠கன்னியர்/ நிறுவனர் :
✠பிறப்பு : ஜனவரி 9, 1843
அய்டோனா, ல்லேய்டா, ஸ்பெய்ன் அரசு
(Aytona, Lleida, Kingdom of Spain)
✠இறப்பு : ஆகஸ்ட் 26, 1897 (வயது 54)
லிரியா, வலென்சியா, ஸ்பெய்ன் அரசு
(Liria, Valencia, Kingdom of Spain)
✠ஏற்கும் சமயம் :
ரோமன் கத்தோலிக்க திருச்சபை
(Roman Catholic Church)
✠முக்திபேறு பட்டம் : ஏப்ரல் 27, 1958
திருத்தந்தை 12ம் பயஸ்
(Pope Pius XII)
✠புனிதர் பட்டம் : ஜனவரி 27, 1974
திருத்தந்தை ஆறாம் பவுல்
(Pope Paul VI)
✠பாதுகாவல் :
"கைவிடப்பட்ட முதியோரின் சின்னஞ்சிறு சகோதரிகள்" (Little
Sisters of the Abandoned Elderly) சபை
ஆன்மீக சபைகளால் மறுக்கப்பட்ட மக்கள் (People rejected by
religious orders)
முதியோர் (Elderly people)
✠நினைவுத் திருநாள் : ஆகஸ்ட் 26
புனிதர் தெரெசா ஜோர்னெட் இபார்ஸ், ஸ்பேனிஷ் ரோமன் கத்தோலிக்க
மறைப்பணியாளரும், "கைவிடப்பட்ட முதியோரின் சின்னஞ்சிறு
சகோதரிகள்" (Little Sisters of the Abandoned Elderly) என்ற
சபையின் நிறுவனரும் ஆவார்.
ஸ்பெயின் நாட்டின் "ல்லேய்டா" (Lleida) பிராந்தியத்தின்
"அய்டோனா" (Aytona) எனும் சிறு நகரில், 9 ஜனவரி 1843ல் விவசாய
குடும்பமொன்றில் பிறந்த இபார்ஸின் தந்தை பெயர் "ஃபிரான்சிஸ்கோ
ஜோஸ் ஜோர்னேட்" (Francisco Jos Jornet) ஆகும். தாயாரின்
பெயர், "அன்டோனியிட்டா இபார்ஸ்" (Antonieta Ibars) ஆகும்.
சிறுவயதிலிருந்தே எழைகளின்பால் தீவிர பற்று கொண்ட இவர், பல
துன்பங்களுக்கு உட்படுத்தப்பட்டார். அனைத்து துன்பங்களையும்
பொறுமையோடு எதிர்கொண்டார். ஏழைகளின் நிலை கண்டு எப்போதுமே கவலை
கொண்டிருந்தார்.
இவர் சிறுவயதிலிருந்து, தான் ஓர் துறவியாக வேண்டுமென்று ஆசை
கொண்டார். தன் விருப்பத்தை பல துறவற இல்லத்தில் தெரிவித்தார்.
ஆனால் இவரை, துறவறத்திற்கு சேர்த்துக்கொள்ள யாரும்
முன்வரவில்லை. எந்த துறவற சபையினரும் அவரை ஏற்றுக்கொள்ளவில்லை.
இதனால் ஓர் ஆசிரியராக படித்து, பின்னர் பள்ளியில் ஆசிரியர்
பணியை செய்தார். தமது பத்தொன்பது வயதில் "பார்சிலோனா"
(Barcelona) நகரில் ஆசிரியை பணி செய்கையில், துறவு
வாழ்க்கைக்கு தாம் அழைக்கப்படுவதாக உணர்ந்தார்.
1868ம் ஆண்டு, "பர்கோஸ்" (Burgos) நகருக்கு அருகேயுள்ள "எளிய
கிளாரா" (Poor Clares) மடத்தில் இணைய விண்ணப்பித்தார். ஆனால்
அப்போதிருந்த ஆன்மீகத்துக்கேதிரான சட்டங்கள், அவரை சபையில்
இணைய தடுத்தன. அதனால், பின்னர் 1870ம் ஆண்டு, "மதச்சார்பற்ற
கார்மேல்" (Secular Carmelites) சபையில் உறுப்பினராக
இணைந்தார்.
அவரது தந்தையின் இறப்பு மற்றும் அவரைப் பீடித்த ஒரு கடுமையான
நோய் காரணமாக, அவர் நீண்ட காலத்திற்கு தமது வீட்டிலேயே தங்க
நேரிட்டது. பின்னர், தமது ஆன்மீக வழிகாட்டியின்
ஆலோசனைகளின்படி, பிராந்தியத்திலுள்ள முதியோரை அழைத்து வந்து
சரியாக அவர்களை கவனிக்க ஆரம்பித்தனர். 1872ம் ஆண்டு, இதற்கான
முதல் இல்லத்தை "பர்பாஸ்ட்ரோ" (Barbastro) என்னும் இடத்தில்
தொடங்கினார். அவரது சொந்த சகோதரியான மரியா இதற்கு உதவினார்.
நாளடைவில் தன் விருப்பத்தை, தன்னுடைய ஆன்ம வழிகாட்டியிடம்
தெரிவித்தார். அவர் காட்டிய வழியில் சென்ற தெரசா, 1872ம் ஆண்டு
பார்பஸ்ட்ரோ (Barbastro) என்ற ஊரில், ஒரு துறவற சபையை
தொடங்கினார். இச்சபைக்கு "கைவிடப்பட்ட முதியோரின் சின்னஞ்சிறு
சகோதரிகள்" (Little Sisters of the Abandoned Elderly) என்ற
பெயரை சூட்டினார்.
8 மே 1873ல் "வலென்சியா" (Valencia) நகரில் தமது சபையின் தலைமை
இல்லத்தை நிறுவினார். சபையின் தலைமைப் பொறுப்பையும் தாமே
ஏற்றார். தமது சபையின் சகோதரிகளிடம், ஏழைகளுக்காக தமது வசதிகளை
தியாகம் செய்யுமாறு கற்பித்தார். 1887ம் ஆண்டு, திருத்தந்தை
"பதின்மூன்றாம் லியோ" (Pope Leo XIII) சபைக்கான அங்கீகாரத்தை
வழங்கினார்.
1897ல், ஸ்பெயின் நாட்டில் காலரா (Cholera) நோய் பரவியது.
இந்நோயால் பாதிக்கப்பட்டோருக்கு உதவிட இவரும் இவரது சபையின்
சகோதரிகளும் தீவிரமாக செயல்பட்டனர். இம்முயற்சிகளில் மிகவும்
மனம் தளர்ந்த தெரேசா சபையின் தலைமைப் பொறுப்பிலிருந்து ஓய்வு
பெற்றார். மிகவும் தளர்ச்சியடைந்த தெரெசா, காசநோய்
(Tuberculosis) பாதிக்கப்பட்டு, 1897ம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம்,
26ம் தேதி "லிரியா" (Liria) நகரில் மரணம் அடைந்தார். |
|
|