Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

இயேசுவின் வழியினிலே

 

✠ புனிதர் முதலாம் ஸ்டீஃபன் ✠(St. Stephen I of Hungary)
   
நினைவுத் திருநாள் : (ஆகஸ்ட்  / Aug- 16)
 ✠ புனிதர் முதலாம் ஸ்டீஃபன் ✠(St. Stephen I of Hungary)

 ஹங்கேரியின் அரசர் :
(King of Hungary)

பிறப்பு : கி.பி. 975
எஸ்டர்காம், ஹங்கேரி
(Esztergom, Principality of Hungary)

இறப்பு : ஆகஸ்டு 15, 1038,
எஸ்டர்காம், ஹங்கேரி அரசு
(Esztergom or Szkesfehrvr, Kingdom of Hungary)

புனிதர் பட்டம் : 1083
திருத்தந்தை ஏழாம் கிரகோரி
(Pope Gregory VII)

பாதுகாவல் : ஹங்கேரி

நினைவுத் திருநாள் : ஆகஸ்ட் 16

புனிதர் முதலாம் ஸ்டீஃபன், கி.பி. 997ம் ஆண்டு முதல் கி.பி. 1000 அல்லது 1001ம் ஆண்டு வரையான காலத்தில் பதவியிலிருந்த ஹங்கேரியர்களின் கடைசி மகா இளவரசரும் (Grand Prince of the Hungarians), கி.பி. 1000 அல்லது 1001ம் ஆண்டு முதல், 1038ம் ஆண்டில் அவர் இறக்கும் வரை ஆட்சியிலிருந்த ஹங்கேரியின் முதல் அரசனும் (First King of Hungary) ஆவார். இவர் பிறந்தபோது, இவருக்கு பேகனிய பெயரான (Pagan name) "வஜ்க்" (Vajk) என்ற பெயர் இடப்பட்டது. இவரது திருமுழுக்கு பற்றின விவரங்கள் தெரியவில்லை. ஹங்கேரி நாட்டின் மகா இளவரசர் "கேஸா" மற்றும் "சரோல்ட்" (Grand Prince Gza and Sarolt) ஆகியோர் இவரது பெற்றோர் ஆவர். இவரது பெற்றோர் இருவருமே திருமுழுக்கு பெற்றிருப்பினும், இவர்களது குடும்ப உறுப்பினர்களில், பக்தியுள்ள கிறிஸ்தவரான முதல் உறுப்பினர் ஸ்டீஃபன் ஆவார். தூய ரோம பேரரசன் "இரண்டாம் ஹென்றியின்" (Henry II, Holy Roman Emperor) சகோதரியான "கிசேலாவை" (Gisela of Bavaria) திருமணம் செய்துகொண்டார்.

கி.பி. 997ம் ஆண்டு, தமது தந்தை இறந்ததன் பிறகு, ஆட்சி கட்டிலில் அமர்வதற்காக (Pagan warriors) என்ற படை வீரர்களின் துணை கொண்டிருந்த 'கொப்பாணி' (Koppny) என்ற தமது உறவினர்களுக்கெதிராக போராட வேண்டியிருந்தது. தமது உறவினர்களான கொப்பாணியை வென்ற ஸ்டீஃபன், திருத்தந்தை இரண்டாம் சில்வெஸ்ட்டர் (Pope Sylvester II) அவர்கள் அனுப்பிய கிரீடத்தை அணிந்து ஹங்கேரி நாட்டு மன்னராக முடிசூட்டப்பட்டார். ஹங்கேரி நாட்டின் கடைசி இளவரசரும் முதலாம் அரசரும் இவரேயாவார்.

தன் தந்தையின் மரணத்தின்பின் "மாகியர்" (Magiar) என்ற சாதியினருக்கு தலைவராக பொறுப்பேற்றார். தம் மக்களை ஆட்சி புரிவதில் நீதியும், நல்லிணக்கமும், இறைப்பற்றும் கொண்டு விளங்கினார். திருச்சபையின் சட்டதிட்டங்களை மிக நுணுக்கமாக கடைபிடித்தார். தன் நாட்டு மக்களின் நலனில் அக்கறை கொண்டு, அவர்களின் தேவைகளை நிறைவேற்றி வாழ்ந்தார்.

இவர் அமைதியின்றி தவித்த மற்ற நாடுகளுடன் தொடர்புகொண்டு, அமைதியை ஏற்படுத்தினார். தன் நாட்டு மக்களை இறையுணர்வில் வளர்த்தெடுத்தார். நாடு முழுவதும் பல புதிய மறைமாவட்டங்களையும், மூன்று பெனடிக்டின் மடாலயங்களையும் உருவாக்கினார். பல துறவற சபையினரை தன் நாட்டிற்கு வரவழைத்து, கிறிஸ்தவ விசுவாசத்தைப் பரப்பினார். பல துறவற மடங்களையும், ஆலயங்களையும் கட்டினார். தன் நாட்டு மக்கள் அனைவரும் கிறிஸ்தவர்களாக வாழ வழிவகுத்தார். கிறிஸ்தவர் அல்லாதவர்களுடன் தொடர்புகொள்வதை தடுத்தார். செபம், தவம், இவைகளில் வளர நாட்டு மக்களை துறவிகள், குருக்களின் வழியாக தூண்டினார்.

ஸ்டீஃபன் தன் நாடு முழுவதிலும் பல குருக்களையும், கன்னியர்களையும், ஆயர்களையும் உருவாக்கினார். நாடு முழுவதிலுமே திருச்சபையின் வாழ்வை பெரிதும் ஊக்கப்படுத்தி வளர்த்தார். ஹங்கேரி நாட்டில் திருச்சபை வளர அன்று இவர் இட்ட உரமானது. இன்றும் தளைத்து வளர்ந்து கிறிஸ்தவ நாடாக திகழ்கின்றது. இவரிடம் இறைவன் ஒப்படைத்த மக்களை, அவர் வழியில் நடத்தி சென்றார். தன் வாழ்நாள் முழுவதுமே தாழ்ச்சியிலும், நீதியை கடைப்பிடிப்பதிலும், அமைதியிலும் மிகச் சிறந்தவராக திகழ்ந்தார்.

1038ம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம், 15ம் நாளன்று மரித்த ஸ்டீஃபன், "ஸ்செக்ஸ்ஃபெர்வர்" (Szkesfehrvr) எனுமிடத்தில் கட்டப்பட்டு, அன்னை மரியாளுக்கு அர்ப்பணித்திருந்த பேராலயத்தில் அடக்கம் செய்யப்பட்டார். அவருடைய இறப்பு, பல தசாப்தங்களாக நீடித்த உள்நாட்டுப் போர்களை ஏற்படுத்தியது. 1083ம் ஆண்டில், முதலாம் ஸ்டீஃபனும், அவரது மகனான "எமெரிக்கும்" (Emeric), "க்ஸனாட்" (Csand) மறைமாவட்டத்தின் ஆயர் "கெரார்ட்" (Gerard) ஆகிய மூவரும் திருத்தந்தை "ஏழாம் கிரகோரியால்" (Pope Gregory VII) புனிதர்களாக அருட்பொழிவு செய்விக்கப்பட்டனர். ஸ்டீஃபன், ஹங்கேரி மற்றும் அண்டை பிரதேசங்களில் பிரபலமான புனிதர் ஆவார். ஹங்கேரியில், அவருடைய நினைவுத் திருவிழா (ஆகஸ்ட் 20 அன்று கொண்டாடப்படுகிறது) மாநிலம் உருவாக்கப்பட்டதை நினைவுகூரும் ஒரு பொது விடுமுறை நாளுமாகும்.
 

துன்பங்கள் தோன்றிடும் வேளையிலே நீ துணை தந்து காத்திட வேண்டுமம்மா