Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

இயேசுவின் வழியினிலே

 

✠ புனிதர் சபீனா ✠(St. Sabina)
   
நினைவுத் திருநாள் : (ஆகஸ்ட்/ Aug 29)
✠ புனிதர் சபீனா ✠(St. Sabina)

  மறைசாட்சி :
(Martyr)

பிறப்பு : கி. பி. முதலாம் நூற்றாண்டு
ரோம் (Rome)

இறப்பு : கி. பி. 125
ரோம் (Rome)

ரோமன் கத்தோலிக்க திருச்சபை
(Roman Catholic Church)
கிழக்கு மரபுவழி திருச்சபை
(Eastern Catholic Churches)

முக்கிய திருத்தலம் :
தூய சபீனா ஆலயம், அவன்டினா குன்று, ரோம்
(Santa Sabina on the Aventine Hill, Rome)

நினைவுத் திருநாள் : ஆகஸ்ட் 29

புனிதர் சபீனா, ரோம் (Rome) நகரின் மருத்துவமனையொன்றின் தலைமை செவிலியும், மறைசாட்சியுமாவார். இவர், "ஹெராட் மெடல்லரியஸ்" (Herod Metallarius) என்பவரின் மகளும், "அதிகார சபை அங்கத்தினரான" (Senator) "வேலண்டைனஸ்" (Valentinus) என்பவரின் கைம்பெண்ணுமாவார்.

முன்பொருமுறை சபீனாவிடம் அடிமைப்பெண்ணாக இருந்த "புனிதர் செரபியா" (Saint Serapia) என்ற பெண் இவரை கிறிஸ்தவராக மனமாற்றம் செய்வித்தார். ரோம கடவுளர்களை பூஜிக்க மறுத்த காரணத்தால் "ரோமப்பேரரசன்" (Roman Emperor) "ஹட்ரியான்" (Hadrian) என்பவனால் கண்டிக்கப்பட்ட "செரபியா", துன்புறுத்தப்பட்டு, தலை துண்டிக்கப்பட்டு, மறைசாட்சியாக கொல்லப்பட்டார். (பின்னாளில் செரபியா "ரோமன் கத்தோலிக்க திருச்சபை" மற்றும் :கிழக்கு மரபுவழி திருச்சபை" ஆகியவற்றால் புனிதராக அருட்பொழிவு செய்விக்கப்பட்டார்.)

தமது அடிமைப்பெண்ணின் உடலை மீட்டெடுத்த சபீனா, அதனை தமது குடும்ப கல்லறையில் (Family mausoleum) அடக்கம் செய்தார்.

இதனால், "எல்பிடியோ" (Elpidio) எனும் நிர்வாக அலுவலரால் (Prefect) கண்டிக்கப்பட்ட சபீனா, அவர் ஒரு கிறிஸ்தவர் என்ற காரணத்தால் குற்றம் சாட்டப்பட்டார். இத்தாலியின் "ஊம்ப்ரியா" (Umbria) மாநிலத்தின் "வின்டேனா" (Vindena) நகரில், கி.பி. 125ம் ஆண்டு, மறைசாட்சியாக கொல்லப்பட்டார்.

கி.பி. 430ம் ஆண்டு, சபீனாவின் உடல் "அவன்டைன்" (Aventine Hill) குன்றின்மேல், இவரது வீட்டினருகேயுள்ள "ஜூனோ கோயில்" (Temple of Juno) அருகே விசேடமாக கட்டப்பட்டு, இவரது பெயரில் அர்ப்பணிக்கப்பட்ட "தூய சபீனா பேராலயத்திற்கு" (Basilica Santa Sabina) கொண்டு செல்லப்பட்டது.

பின்னர், புனிதராக அருட்பொழிவு செய்விக்கப்பட்ட புனிதர் சபீனாவின் நினைவுத் திருநாள், ஆகஸ்ட் மாதம், 29ம் தேதி கொண்டாடப்படுகிறது
.
 

துன்பங்கள் தோன்றிடும் வேளையிலே நீ துணை தந்து காத்திட வேண்டுமம்மா