Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

இயேசுவின் வழியினிலே

 

✠ புனிதர் ரேட்கண்ட் ✠(St. Radegund)
   
நினைவுத் திருநாள் : (ஆகஸ்ட்  / Aug- 13)
 ✠ புனிதர் ரேட்கண்ட் ✠(St. Radegund)

 இளவரசி/ அரசி/ நிறுவனர் :
(Princess/ Queen/ Foundress)

பிறப்பு : கி.பி. 520
துரிங்கியன் பழங்குடியினர்
(Thuringian tribes)

இறப்பு : ஆகஸ்ட் 13, 587 (வயது 6667)
தூய திருச்சிலுவை மடம், போய்ட்டேர்ஸ், அகிட்டைன், ஃபிரேங்க்ஸ் அரசு
(Abbey of the Holy Cross, Poitiers, Aquitaine, Kingdom of the Franks)

ஏற்கும் சமயம் :
ரோமன் கத்தோலிக்க திருச்சபை
(Roman Catholic Church)
கிழக்கு மரபுவழி திருச்சபை
(Eastern Orthodox Church)

நினைவுத் திருவிழா : ஆகஸ்ட் 13

பாதுகாவல் :
இயேசு கல்லூரி (Jesus College), கேம்ப்ரிட்ஜ் பல்கலைகழகம் (Cambridge)

புனிதர் ரேட்கண்ட், ஒரு துரிங்கியன் இளவரசியும் (Thuringian Princess), ஃபிரேங்கிஷ் அரசியும் (Frankish Queen), போய்ட்டேர்ஸ் (Poitiers) நகரிலுள்ள "திருச்சிலுவை துறவு மடத்தை" (Abbey of the Holy Cross) நிறுவியவருமாவார். ஃபிரான்ஸ் (France) மற்றும் இங்கிலாந்து (England) நாடுகளிலுள்ள பல்வேறு ஆலயங்களின் பாதுகாவலரான இவர், கேம்ப்ரிட்ஜ் (Cambridge) பல்கலையின் இயேசு கல்லூரியின் (Jesus College) பாதுகாவலருமாவார்.

ரேட்கண்ட், ஜெர்மன் (German) நாட்டிலுள்ள, துரிங்கியன் (Thuringian) நிலத்தின் மூன்று அரசர்களில் ஒருவரான "பெர்டாச்சார்" (Bertachar) என்பவரது மகளாவார். ரேட்கண்ட்டின் மாமனான "ஹெர்மன்ஃபிரிட்" (Hermanfrid) என்பவர், "பெர்டாச்சாரை" (Bertachar) சண்டையிட்டு கொன்றுவிட்டு, ரெட்கண்ட்டை கைப்பற்றினான். ஃபிரேன்கிஷ் (Frankish King) அரசன் "தியோடெரிக்" (Theuderic) என்பவனுடன் இணைந்த பிறகு, தமது இன்னொரு சகோதரனான "படேரிக்" (Baderic) என்பவனையும் சண்டையிட்டு தோற்கடித்தான். இருப்பினும், அவரது சகோதரர்களை நசுக்கி, துரிங்கியாவின் கட்டுப்பாட்டை கைப்பற்றிய "ஹெர்மன்ஃபிரிட்", அரசன் "தியோடெரிக்குடன்" (Theuderic) தத்துவார்த்தத்தைப் பகிர்ந்து கொள்வதற்கான உடன்படிக்கைக்கு மறுப்பு தெரிவித்தான்.

கி.பி. 531ம் ஆண்டு, "தியோடெரிக்", தமது சகோதரன் "முதலாம் க்லோடேய்ர்" (Clotaire I) என்பவருடன் துரிங்கியா திரும்பினார். இருவரும் இணைந்து ஹெர்மன்ஃபிரிட்டை தோற்கடித்து, அவரது இராச்சியத்தை வெற்றிகொண்டார்கள். ரேட்கண்ட்டை பொறுப்பேற்றுக்கொண்ட "முதலாம் க்லோடேய்ர்," அவரை அங்கிருந்து திரும்ப "மெரோவிங்கியன் கௌல்" (Merovingian Gaul) அழைத்துச் சென்றார். ரேட்கண்ட், "முதலாம் க்லோடேய்ரின்" ஆறு மனைவியர் (Wives) அல்லது "திருமணமாகாமல் சேர்ந்து வாழும் பெண்களில்" (Concubines) ஒருவராவார். குழந்தைகள் பெற்றுக்கொள்ளாத ரேட்கண்ட்டின் தர்மசிந்தனை குறிப்பிடப்படுவதாகும்.

கி.பி. 550ம் ஆண்டு, துரிங்கியன் அரச குடும்பத்தின் எஞ்சிய கடைசி ஆண் உறுப்பினர், ரேட்கண்ட்டின் சகோதரர் ஆவார். "முதலாம் க்லோடேய்ர்" அவரையும் கொலை செய்தார். தமது இராச்சியத்தை விட்டு ஓடிப்போன ரேட்கண்ட், திருச்சபையின் பாதுகாப்பை கோரினார். "நோயோன்" (Noyon) ஆயரிடம், தம்மை ஒரு திருத்தொண்டராக (Deaconess) நியமிக்க வலியுறுத்தினார். கி.பி. 560ம் ஆண்டு, போய்ட்டேர்ஸ் (Poitiers) நகரில், "செயின்ட் க்ரோய்க்ஸ்" (Monastery of Sainte-Croix) துறவு மடத்தை நிறுவினார். அங்கே, நோயாளிகள்மீது அக்கறை செலுத்தினார். ரேட்கண்ட், பழம், மீன், முட்டை, இறைச்சி ஆகியவனவற்றை தவிர்த்து, அவரையினங்களையும் காய்கறிகளையுமே உண்டார். செபித்தல் மூலம் நோயாளிகளை குணமாக்கும் அற்புத சக்தி கொண்டிருந்தார் என்று பரவலாக நம்பப்பட்டார்.

அவரது துறவு மடம், கிறிஸ்துவின் உண்மையான திருச்சிலுவையின் மிச்சத்திற்கான பெயரிடப்பட்டது. இவர், உண்மையான திருச்சிலுவையின் மிச்சமொன்றினை, "பைசண்டைன் பேரரசர்" (Byzantine Emperor) "இரண்டாம் ஜஸ்டினிடமிருந்து" (Justin II) பெற்றதாக கூறப்படுகிறது. போய்ட்டேர்ஸ் (Poitiers) ஆயரான (Bishop of Poitiers) "மரோவியஸ்" (Maroveus) அதனை துறவு மடத்தில் ஸ்தாபிக்க மறுத்தும், ரேட்கண்ட்டின் வேண்டுகோளின்பேரில், "டூர்ஸ்" ஆயரான "யூஃப்ரோனியஸ்" (Eufronius of Tours) என்பவரை, அரசன் "சிக்பெர்ட்" (Sigebert) அனுப்பி அதனை ஸ்தாபிக்கச் செய்தார்.

ஆறாம் நூற்றாண்டின் கிறிஸ்தவ துறவியான "ஜூனியன்" (Junian of Maire), ரேட்கண்டின் நெருங்கிய நண்பராவார். நண்பர்களான இவர்கள் இருவருமே கி.பி. 587ம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம், 13ம் தேதி, ஒரே நாளில் மரித்ததாக கூறப்படுகிறது.
 
 

துன்பங்கள் தோன்றிடும் வேளையிலே நீ துணை தந்து காத்திட வேண்டுமம்மா