Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

இயேசுவின் வழியினிலே

 

✠ புனிதர் நிக்கதேம் ✠(St. Nicodemus)
   
நினைவுத் திருநாள் : (ஆகஸ்ட்/ Aug 31)
✠ புனிதர் நிக்கதேம் ✠(St. Nicodemus)

 கிறிஸ்துவின் பாதுகாவலன் :
(Defender of Christ)

பிறப்பு : கி.மு. முதலாம் நூற்றாண்டு

இறப்பு : கி.பி. முதலாம் நூற்றாண்டு
யூதேயா (Judea)

ஏற்கும் சமயம் :
ரோமன் கத்தோலிக்க திருச்சபை
(Roman Catholic Church)
கிழக்கு மரபுவழி திருச்சபை
(Eastern Orthodox Church)
ஆங்கிலிக்கன் ஒன்றியம்
(Anglican Communion)
லூதரனியம்
(Lutheranism)
ஓரியண்டல் மரபுவழி திருச்சபை
(Oriental Orthodox Church)

நினைவுத் திருவிழா : ஆகஸ்ட் 31

பாதுகாவல் : ஆர்வமுள்ளவர்களின் (Curious)

புனித நிக்கதேம் என்பவர் விவிலியத்தின்படி, இயேசுவின் சீடராவார். இவர் ஒரு "பரிசேயரும்" (Pharisee), யூதத் தலைவர்களுள் ஒருவரும், ஆவார்.

இவர் யோவான் நற்செய்தியில் மூன்று முறை குறிக்கப்பட்டுள்ளார்:

முதல் முறையாக, இவர் ஓர் இரவில் இயேசுவிடம் வந்து உரையாடியதாக யோவான் நற்செய்தி குறிக்கின்றது. (யோவான் 3:1-21)
இரண்டாம் முறையாக, இவர் இயேசுவுக்காக தலைமைக் குருக்களிடமும் பரிசேயர்களிடமும் "ஒருவரது வாக்குமூலத்தைக் கேளாது, அவர் என்ன செய்தாரென்று அறியாது ஒருவருக்குத் தீர்ப்பளிப்பது நமது சட்டப்படி முறையாகுமா?" என்று கேட்டு இவர் பரிந்து பேசியதாக கூறுகின்றது. (யோவான் 7: 50-51)

இறுதியாக, அரிமத்தியா யோசேப்புவுக்கு (Joseph of Arimathea) இயேசுவின் உடலை அடக்கம் செய்ய இவர் உதவியதாக கூறுகின்றது. (யோவான் 19:39-42)

இவர் முதலில் இயேசுவை இரவில் சந்தித்து உரையாடிய பகுதியில் உள்ள விவிலிய வரிகள் மிகவும் புகழ் பெற்றதாகும். குறிப்பாக யோவான் 3:16 நற்செய்தியின் சுறுகம் என அழைக்கப்படுகின்றது. மேலும் பல கிறிஸ்தவ பிரிவுகளில் மீள்பிறப்புக் கொள்கை (Born again) இவ்வுரையாடலிலிருந்தே பெறப்படுகின்றது.

4ம் நூற்றாண்டின் மையத்தில் எழுதப்பட்ட திருமுறையினை சாராத "நிக்கதேம் நற்செய்தி" (Gospel of Nicodemus) என்னும் நூல் இவரால் எழுதப்பட்டதாக கூறுகின்றது. ஆயினும் இது பின்னாட்களில் எழுதப்பட்ட போலி என்பது அறிஞர் கருத்து.

கிறிஸ்தவ மரபுப்படி இவர் 1ம் நூற்றாண்டில் மறைசாட்சியாக கொல்லப்பட்டார் என்பர்.
 

துன்பங்கள் தோன்றிடும் வேளையிலே நீ துணை தந்து காத்திட வேண்டுமம்மா