Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

இயேசுவின் வழியினிலே

 

✠ புனிதர் நர்ஸிசா டி ஜீசஸ் ✠(St. Narcisa de Jesus)
   
நினைவுத் திருநாள் : (ஆகஸ்ட்  / Aug- 30)
 ✠ புனிதர் நர்ஸிசா டி ஜீசஸ் ✠(St. Narcisa de Jesús)

 பொதுநிலைப் பெண்மணி :
(Laywoman)

பிறப்பு : அக்டோபர் 29, 1832
நோபோல், குவாயஸ், ஈகுவேடார்
(Nobol, Guayas, Ecuador)

இறப்பு : டிசம்பர் 8, 1869 (வயது 37)
லிமா, பெரு
(Lima, Peru)

ஏற்கும் சமயம் :
ரோமன் கத்தோலிக்க திருச்சபை
(Roman Catholic Church)

முக்திபேறு பட்டம் : அக்டோபர் 25, 1992
திருத்தந்தை இரண்டாம் ஜான் பவுல்
(Pope John Paul II)

புனிதர் பட்டம் : அக்டோபர் 12, 2008
திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட்
(Pope Benedict XVI)

முக்கிய திருத்தலம் :
சேன்ச்சுவரியோ டி தூய நர்ஸிசா டி ஜீசஸ் மார்டில்லோ மோரன், ஈகுவேடார்
(Santuario de Santa Narcisa de Jesus Martillo Morán, Ecuador)

நினைவுத் திருநாள் : ஆகஸ்ட் 30

புனிதர் நர்ஸிசா டி ஜீசஸ் மார்டில்லோ மோரன் (Saint Narcisa de Jesús Martillo Morán), தென் அமெரிக்காவிலுள்ள (South America) "ஈகுவேடார்" (Ecuador) நாட்டைச் சேர்ந்த ரோமன் கத்தோலிக்க திருச்சபையின் ஒரு பொதுநிலைப் பெண்மணியாவார். இயேசு கிறிஸ்துவின்பால் தாம் கொண்டிருந்த கடுமையான பக்தி மற்றும் தர்மசிந்தை காரணமாக இவர் அறியப்படுகிறார். ஏறத்தாழ ஒரு துறவியைப் போல ஒதுங்கி வாழ்ந்த இவர், இயேசுவின் விருப்பம் அறிந்து தம்மையே அர்ப்பணித்து வாழ்ந்தார்.
 
 

துன்பங்கள் தோன்றிடும் வேளையிலே நீ துணை தந்து காத்திட வேண்டுமம்மா