Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

இயேசுவின் வழியினிலே

 

✠ அரிமத்தியா புனிதர் யோசேப்பு ✠(St. Joseph of Arimathea)
   
நினைவுத் திருநாள் : (ஆகஸ்ட்/ Aug 31)
✠ அரிமத்தியா புனிதர் யோசேப்பு ✠(St. Joseph of Arimathea)

 இயேசு கிறிஸ்துவின் இரகசிய சீடர் :
(Secret Disciple of Jesus)

பிறப்பு : ----

இறப்பு : ----
பழைய எருசலேம் நகரிலுள்ள "தூய செபுல்ச்ர்", சிரியாக் மரபுவழி சிற்றாலயம்
(Syriac orthodox Chapel in Holy Sepulchre)

ஏற்கும் சமயம் :
ரோமன் கத்தோலிக்க திருச்சபை
(Roman Catholic Church)
கிழக்கு மரபுவழி திருச்சபை
(Eastern Orthodox Church)
ஆங்கிலிக்கன் ஒன்றியம்
(Anglican Communion)
லூதரனியம்
(Lutheranism)
ஓரியண்டல் மரபுவழி திருச்சபை
(Oriental Orthodox Church)

நினைவுத் திருவிழா : ஆகஸ்ட் 31

பாதுகாவல் : நீத்தோர் இறுதி சடங்கினை வழிநடத்துவோர்

அரிமத்தியா ஊரைச் சேர்ந்த புனிதர் யோசேப்பு என்பவர், நற்செய்திகளின்படி, இயேசுவின் மரணத்தின் பின்னர், அவரை அடக்கம் செய்தவர் ஆவர். இவர் நான்கு திருமுறை நற்செய்திகளிலும் குறிப்பிடப்பட்டுள்ளார்.

மாற்கு 15:43 இவரை மதிப்புக்குரிய தலைமைச் சங்க உறுப்பினர் எனவும், இறையாட்சியின் வருகைக்காகக் காத்திருந்தவர் எனவும் குறிக்கின்றது.
மத்தேயு 27:57 இவர் இயேசுவுக்குச் சீடராய் இருந்தார் எனக்குறிக்கின்றது.
யோவான் 19:38 இவரை இயேசுவின் சீடர்களுள் ஒருவர் எனவும் யூதருக்கு அஞ்சியதால் தம்மைச் சீடர் என்று வெளிப்படையாகக் காட்டிக்கொள்ளாதவர் எனவும் குறிக்கின்றது.

இதன்படி இவர் இயேசுவின் உடலை எடுத்துக் கொண்டுபோகப் பிலாத்துவிடம் (Pilate) அனுமதி கேட்டார். பிலாத்து நூற்றுவர் தலைவரிடமிருந்து கேட்டு இயேசுவின் இறப்பை உறுதி செய்தபின்பு யோசேப்பிடம் இயேசுவின் உடலை அளித்தான்.

"நிக்கதேம்" (Nicodemus) துணையோடு "கொல்கொதாவில்" (Golgotha) இவர் இயேசுவின் உடலை சிலுவையிலிருந்து இறக்கி யூத அடக்க முறைப்படி நறுமணப் பொருட்களுடன் துணிகளால் சுற்றிக் கட்டினார். ஒரு புதிய கல்லறை ஒன்றில் அவரின் உடலை அடக்கம் செய்தார் என விவிலியம் கூறுகின்றது.

கத்தோலிக்க திருச்சபை, கிழக்கு மரபுவழி திருச்சபை, லூதரனியம் மற்றும் சில ஆங்கிலிக்கம் சபைகள் இவரை புனிதர் என ஏற்கின்றன.
 

துன்பங்கள் தோன்றிடும் வேளையிலே நீ துணை தந்து காத்திட வேண்டுமம்மா