Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

இயேசுவின் வழியினிலே

 

✠ புனிதர் யூசேபியஸ் ✠(St. Eusebius of Vercelli)
  Limage contient peut-tre : 2 personnes, enfant et intrieur  
நினைவுத் திருநாள் : (ஆகஸ்ட்/ Aug 02)
✠ புனிதர் யூசேபியஸ் ✠(St. Eusebius of Vercelli)

 ஆயர்/ ஒப்புரவாளர் :
(Bishop and Confessor)

பிறப்பு : மார்ச் 2, 283
சார்டினியா (Sardinia)

இறப்பு : ஆகஸ்டு 1, 371 (வயது 88)
வெர்செல்லி, பியேமொன்ட்
(Vercelli, Piemonte)

ஏற்கும் சமயம் :
ரோமன் கத்தோலிக்க திருச்சபை
(Roman Catholic Church)

நினைவுத் திருநாள் : ஆகஸ்ட் 2

பாதுகாவல்: வெர்செல்லி (Vercelli)

புனிதர் யூசேபியஸ், ஒரு இத்தாலியின் ஆயரும் புனிதரும் ஆவார். இவர், "புனிதர் அதானஸியசுடன்" (Athanasius) இணைந்து "ஆரியனிசத்துக்கு" (Arianism) எதிராக கிறிஸ்துவின் தெய்வீகத் தன்மையை உறுதிப்படுத்தினார்.

புனிதர் யூசேபியஸ், கி.பி. 283ம் ஆண்டு "சார்டினியா" (Sardinia) எனுமிடத்தில் பிறந்தவர் ஆவார். அங்கே, இவரது தந்தை மறைசாட்சியாக கொல்லப்பட்டதன் பிறகு, இவரது தாயாரால் ரோம் நகருக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

சுமார் கி.பி. 340ம் ஆண்டுகளின் தொடக்கத்தில், இத்தாலியின் வடக்கு பிராந்தியத்திலுள்ள "வெர்செல்லி" (Vercelli) மறைமாவட்டத்திற்கு முதல் ஆயராக நியமனம் செய்யப்பட்டார். அவர் குருமார்களுடனேயே வாழ்ந்த முதல் ஆயர் ஆவார். அவர்களை பக்தி மற்றும் வைராக்கியத்தில் உருவாக்குவதற்கு அவர் தமது சிறந்த ஆற்றலை அர்ப்பணித்தார்.

கி.பி. 354ம் ஆண்டு, "அத்தனாசியஸ்" (Athanasius of Alexandria) அவர்களின் நிலைப்பாடு பற்றிய விவாதங்கள் மற்றும் "ஆரியனிச" (Arianism) பிரச்சனைகளை ஒரு முடிவுக்கு கொண்டுவருவதற்காகவும் கருத்து வேறுபாடுகளை களையவும் ஒரு மகா சபையை கூட்ட வேண்டி மிலன் (Milan) நகரிலுள்ள பேரரசர் "இரண்டாம் கான்ஸ்டான்ஷியஸ்" (Constantius II) அவர்களிடம் விண்ணப்பிப்பதற்காக, ஆயர் "லூசிஃபர்" (Bishop Lucifer of Cagliari) அவர்களுடன் இணைந்து செல்லுமாறு யூசேபியசை திருத்தந்தை "லிபேரியஸ்" (Pope Liberius) அவர்கள் பணித்தார்.

கி.பி. 355ம் ஆண்டு, "மிலன்" (Milan) நகரில் மகாசபை நடைபெற்றது. மகாசபையின் ஒரு பகுதி மட்டும் கலந்துகொண்ட யூசேபியஸ், அத்தனாசியசை கண்டனம் செய்ய மறுத்துவிட்டார். இதன் காரணமாக, யூசேபியஸ் உடனடியாக நாடு கடத்தப்பட்டார். முதலில், ஆரியன் ஆயர் "பட்ரோஃபிலசின்" (Arian Bishop Patrophilus) மேற்பார்வையில் சிரியாவிலுள்ள "சிதோபிலிஸ்" (Scythopolis in Syria) எனுமிடத்திற்கு நாடு கடத்தப்பட்டார். அங்கே, யூசேபியஸ் "பட்ரோஃபிலசை" (Patrophilus) தமது சிறைக்காவலர் (Jailer) என்றழைத்தார். அதன் பின்னர் "கப்படோசியாவிற்கு" (Cappadocia) நாடு கடத்தப்பட்ட இவர், இறுதியில் மேல் எகிப்திலுள்ள "தெபைட்" (Thebaid, in Upper Egypt) என்னுமிடத்திற்கு நாடு கடத்தப்பட்டார். நாடு கடத்தல்களின்போது மகாசபை பற்றி யூசேபியஸ் எழுதிய கடிதங்களில் சில இன்னமும் பாதுகாக்கப்படுகின்றன.

பேரரசர் "இரண்டாம் கான்ஸ்டான்ஷியஸின்" (Constantius II) ஆட்சியின்போது, யூசெபியஸ் அரைநிர்வாணமாக தெருத் தெருவாக இழுத்துச் செல்லப்பட்டார். பின்னர் பலவழிகளில் பலவிதமாக துன்புறுத்தப்பட்டார். இருப்பினும், யூசேபியஸ் தமது கத்தோலிக்க விசுவாசத்தை விட்டுவிட முன்வரவில்லை.

கி,பி, 362ம் ஆண்டு, பேரரசன் "இரண்டாம் கான்ஸ்டான்ஷியஸின்" (Constantius II) மரணத்தின் பின்னர் ஆட்சிக்கு வந்த "ஜூலியன்" (Julian), நாடு கடத்தப்பட்ட ஆயர்களை விடுதலை செய்து தத்தமது நாடுகளுக்கு திரும்ப அனுமதியளித்தான். அலெக்ஸாண்டிரியா வழியாக கடந்து வந்த யூசேபியஸ், கி.பி. 362ம் ஆண்டு, அதானிஸியஸின் ஆலோசனை சபையில் கலந்துகொண்டார். இச்சபையில், பரிசுத்த ஆவியின் (Holy Ghost) தெய்வீகத்தையும், கிறிஸ்துவின் அவதாரம் சம்பந்தமான மரபுவழி கோட்பாடுகளையும் உறுதிசெய்யப்பட்டன. இச்சபை, சீர்திருத்தவாதிகள் இருவருக்கும் மனநிறைவு அளித்தது. மனந்திரும்பிய ஆயர்கள் மீதுள்ள அழுத்தங்கள் அகற்றப்பட்டன. ஆரியனிச தலைவர்கள் மீது கடுமையான தண்டனைகளைச் சுமத்தினர்.

திருச்சபையின் பிரிவினைகளை சரி செய்ய இயலாத யூசேபியஸ், மரபுவழி விசுவாசத்தை பிரகடனப்படுத்தி செயல்படுத்தும் ஆர்வத்துடன் வழியில் பிற திருச்சபைகளை பார்வையிட்டவாரு பயணித்தார். கி.பி. 363ம் ஆண்டு "வெர்செல்லி" (Vercelli) வந்து சேர்ந்த இவர், மேற்கத்திய திருச்சபையில் "ஆரியனிசத்தை" (Arianism) எதிர்க்கும் போராட்டத்தை "புனிதர் ஹிலாரியுடன்" (Hilary of Poitiers) இணைந்து தலைமை தாங்கி நடத்தினார். இவர், "ஆரியன் ஆயர் ஔக்ஸென்ஷியஸ்" (Arian bishop Auxentius of Milan) என்பவரை எதிர்த்தவர்களுள் மிகவும் முக்கியமானவர் ஆவார். யூசேபியஸ் கி.பி. 371ம் ஆண்டு மரணமடைந்தார்.
 

துன்பங்கள் தோன்றிடும் வேளையிலே நீ துணை தந்து காத்திட வேண்டுமம்மா